Published:Updated:

``மோடி வெற்றியால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?” - என்ன சொல்கிறார் அனில் அகர்வால்!

``மோடி வெற்றியால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?” - என்ன சொல்கிறார் அனில் அகர்வால்!
``மோடி வெற்றியால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?” - என்ன சொல்கிறார் அனில் அகர்வால்!

``மோடி வெற்றியால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?” - என்ன சொல்கிறார் அனில் அகர்வால்!

ரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட மறுகணமே இந்திய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் `கிடுகிடு'வென உயர்ந்து குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் வேகமாக அதிகரித்தது. இதில் மிக முக்கியமாக லாபம் அள்ளிய நிறுவனம் வேதாந்தா. வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், ``பிரதமர் மோடியின் வெற்றி, ஒரு ஜனநாயகத்தின் வெற்றி. வளர்ச்சிக்கு வாக்களித்த மக்களுக்குப் பெருமை சேர்க்கும் வெற்றி, அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கான இன்னிங்ஸை நோக்கிய அவரது பார்வை இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு பாய்ச்சல்!” என்றெல்லாம் அதிரடியாகப் புகழாரம் சூட்டினார்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பி.ஜே.பி அரசின் செயல்பாடுகள் குறித்து பெருமையாகக் கூறியுள்ளார். ``இயற்கை வள ஆதாரங்களின் மீது கவனம் செலுத்தும் பி.ஜே.பி அரசால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றிருக்கிறார். மேலும் அவர், ``அரசாங்கத்திடம் இருந்து இப்படி ஒரு ஆதரவு, கனிமவள நிறுவனங்களுக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த 30, 40 ஆண்டுகளில் கிடைக்காத ஆதரவு இது” என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

``மோடி வெற்றியால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?” - என்ன சொல்கிறார் அனில் அகர்வால்!

மேலும், ``இந்த அரசாங்கம் நிறுவனங்களை முழுமையாக நம்பத்தொடங்கி இருக்கிறது. மோடியின் மறுவருகை எங்களைப்போன்ற இந்திய நிறுவனங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும். இந்தியா உற்பத்தி செய்வதை விரும்பாத இந்த உலகம், இந்த நாட்டை ஒரு குப்பைகொட்டும் தளமாகவே பயன்படுத்த நினைக்கிறது. அதை மோடி நன்றாக அறிந்துவைத்திருக்கிறார். எனவே, இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருக்கிறார். நாங்களும் எங்களின் பணியை எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் தொடங்குவோம். கனிமவளத்துறை பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் கனிமவளத்துறைக்கு எனத் தனி அமைச்சகம் இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்க (Oil & Gas) வெவ்வேறு விதிகள் இருக்க வேண்டும். கனிமங்களை எடுக்க வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி (Forest and Environment Clearences) மற்றும் சுயசான்றிதழ் (Self certification) பெறுவதில் நமக்கு மிகப்பெரிய சீர்திருத்தம் தேவை. மோடி அனைத்து அனுமதியையும் மூன்று மாதத்துக்குள் வழங்கத் தீர்மானித்திருக்கிறார்” என்று அனில் அகர்வால் கூறியிருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அதே ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில், இந்தியா முழுவதும் இன்னும் மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.55,000 கோடி முதல் ரூ.60,000 கோடிவரை முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக அனில் அகர்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

``மோடி வெற்றியால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?” - என்ன சொல்கிறார் அனில் அகர்வால்!

ஏற்கெனவே வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறது. நிலப்பகுதி, ஆழமற்ற கடல் பகுதி என 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 116 எரிவாயுக் கிணறுகளை அமைக்க இருக்கிறது. மேலும், மூடப்பட்ட தனது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்திய அளவில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஓரிடத்தில்கூட பி.ஜே.பி வெற்றிபெறவில்லை. ஸ்டெர்லைட் பிரச்னை உள்பட பலவும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன. இத்தகைய சூழலில், வேதாந்தாவின் தலைவர் என்னதான் மோடியைப் புகழ்ந்து பேசினாலும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மோடியின் பி.ஜே.பி அரசு நேரடியாக உதவிகள் செய்யுமா என்பது கேள்விக்குறியே!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு