Published:Updated:

`அ.தி.மு.க-வில் இருக்கும் ஸ்லீப்பர் செல் யார்?' - போட்டுடைத்த வெற்றிவேல்

சகாயராஜ் மு
`அ.தி.மு.க-வில் இருக்கும் ஸ்லீப்பர் செல் யார்?' - போட்டுடைத்த வெற்றிவேல்
`அ.தி.மு.க-வில் இருக்கும் ஸ்லீப்பர் செல் யார்?' - போட்டுடைத்த வெற்றிவேல்

அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு அ.ம.மு.க கொள்கைப் பரபரப்பு செயலாளர் பதில் அளித்துள்ளார்.

`அ.தி.மு.க-வில் இருக்கும் ஸ்லீப்பர் செல் யார்?' - போட்டுடைத்த வெற்றிவேல்

காயிதே மில்லத்தின் 124வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.ம.மு.க கொள்கை பரப்பு செயலாளர் வெற்றிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், "முதலில் ரம்ஜான் நல்வாழ்த்துகள். கண்ணியம் மிக்க காயிதே மில்லத்தின் பிறந்நாளையொட்டி இந்த இடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினோம்" என்றவர், கேள்வி எழுவும் இருக்கிறதா என்று செய்தியாளர்களிடம் கேட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க-வின் நிலைமை என்ன என்பது தெரிந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்? 

அவர் எத்தனை சீட் ஜெயித்தார். அவரின் பிள்ளை சீட்டே ஜெயிக்க முடியல. ஈவிஎம் மிஷின் வேலை பார்த்தா எந்த அரசியல் கட்சியும் ஜெயிக்க முடியாது. இந்தியா முழுவதும் இது நடந்திருக்கிறது. யாரு மத்திய அரசை பலமாக எதிர்க்கிறாங்களோ அவர்களைப் பார்த்து காலி பண்ணியிருக்காங்க. அதேபோல் மத்திய அரசை எதிர்த்த எல்லாத்தலைவரையும் காலிப்பண்ணிட்டாங்க.

`அ.தி.மு.க-வில் இருக்கும் ஸ்லீப்பர் செல் யார்?' - போட்டுடைத்த வெற்றிவேல்

ஜெயக்குமார் போன்றவர்கள் இப்படிப் பேசி பேசித்தான் அரசியல் பண்ண முடியும். பொதுச் செயலாளர், சசிகலாவை நம்பி இருக்கின்ற இந்தக் கூட்டம் எந்த நேரத்திலும் சோடைபோகாது. வருகின்ற காலத்தில் மின்னணு ஈவிஎம் மிஷினை தடுத்து உலக முழுவதும் எப்படி வாக்குப்பதிவு நடக்கிறதோ அதேபோல் வாக்குப்பதிவு சீட்டை கொண்டு வருவதற்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெறுவோம்."

தொடர்ந்து ஸ்லீப்பர் செல்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறாங்க என்று தினகரன் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார். ஆனால், அங்கு ஸ்லீப்பர் செல்கள் யாரும் கிடையாது என்று தேர்தல் முடிவு காட்டியிருப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள்?

"ஸ்லீப்பர் செல்கள் என்று எம்.எல்.ஏ-க்களை சொன்னோம். நீங்கள் (பத்திரிகையாளர்களை பார்த்து) வேறு யாரை நினைக்கிறீங்க. எம்.எல்.ஏ-க்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவைப்படும்போது அதைப் பயன்படுத்துவோம். ஸ்லீப்பர் செல்களை யூஸ் பண்ணுறதுக்கு இது நேரம் இல்லை."

Vikatan