Published:Updated:

`ஏதாவது மீந்துச்சுன்னா கூப்பிடுவாங்க...அப்ப சாப்பிடலாம்!' - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆட்டத்தைத் தொடங்கிய ஆடிட்டர்

எந்தக் காலத்திலும் அண்ணா தி.மு.க ஓட்டு தி.மு.க-வுக்குச் சென்றதில்லை. சாதிரீதியான செயல்பாடுகளால்தான் இப்படியொரு பாதிப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க-வின் இரண்டு தலைவர்களும் தங்களுடைய சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

`ஏதாவது மீந்துச்சுன்னா கூப்பிடுவாங்க...அப்ப சாப்பிடலாம்!' - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆட்டத்தைத் தொடங்கிய ஆடிட்டர்
`ஏதாவது மீந்துச்சுன்னா கூப்பிடுவாங்க...அப்ப சாப்பிடலாம்!' - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆட்டத்தைத் தொடங்கிய ஆடிட்டர்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்துத்துவ அலை அடிக்காமல் போனதில் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் பா.ஜ.க-வினர். `அ.தி.மு.க தலைமையில் இருப்பவர்கள் சாதிரீதியாகச் செயல்படுவதால்தான் இப்படியொரு பாதிப்பு நமக்கு வந்தது. மோடி எதிர்ப்பு என்பதெல்லாம் இல்லை' என அமித் ஷாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர் பா.ஜ.க ஆதரவு பிரமுகர்கள். 

`ஏதாவது மீந்துச்சுன்னா கூப்பிடுவாங்க...அப்ப சாப்பிடலாம்!' - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆட்டத்தைத் தொடங்கிய ஆடிட்டர்

மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு வைபவம் முடிந்துவிட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க சார்பில் வென்ற ஒரே ஒரு எம்.பியான ரவீந்திரநாத்துக்குக் கேபினட்டில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். `கட்சியில் இளையவரான ரவிக்குக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுப்பதென்றால் ராஜ்யசபா எம்.பியான வைத்திலிங்கத்துக்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்' என எடப்பாடி தரப்பு அதிரடி காட்டியது. இந்தக் கோரிக்கையை பா.ஜ.க தலைமை ஏற்கவில்லை. அமைச்சர் பதவி நம்பிக்கை பொய்த்துப் போனதில் கடும் வருத்தத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ். இதைப் பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக இருக்கும் துக்ளக் இதழின் அட்டைப் படத்தில் ஆளும்கட்சியைக் கிண்டல் செய்து சித்திரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், அமைச்சரவையில் இடம் இல்லாததை வெளிப்படுத்திவிட்டு, `நம்மை எல்லாம் உள்ளேகூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க தலைமை மீதான இந்த நேரடி தாக்குதலை அக்கட்சியினர் எதிர்பார்க்கவில்லை. 

`ஏதாவது மீந்துச்சுன்னா கூப்பிடுவாங்க...அப்ப சாப்பிடலாம்!' - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆட்டத்தைத் தொடங்கிய ஆடிட்டர்

`அ.தி.மு.க தலைவர்கள் மீது ஆடிட்டருக்கு ஏன் இவ்வளவு கோபம்?' என்ற கேள்வியை அவரது தரப்பினரிடம் கேட்டோம். ``நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கிடைத்த படுதோல்வியை ஆடிட்டரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனி வரக் கூடிய தேர்தல்களில் அ.தி.மு.க-வால் பா.ஜ.க-வுக்கு எந்தவித லாபமும் இல்லை என நினைக்கிறார். இவர்களை வீழ்த்துவதன் மூலமாக பா.ஜ.க-வுக்கு எதாவது நன்மை வந்து சேருமா எனவும் சிலர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழக தோல்வி குறித்து அமித் ஷாவுக்கு அனுப்பப்பட்ட தகவலில், `தமிழ்நாட்டில் இந்துத்துவ அலை அடிக்காமல் போனதற்குக் காரணம், அ.தி.மு.க தலைமையின் மீது சில சமூகங்களுக்கு உள்ள எதிர்ப்புதான். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் எதிரான மனநிலையில் இருக்கும் சிறிய எண்ணிக்கை சமூகங்களும் அட்டவணைப் பிரிவு சமூகங்களும் தி.மு.க.வுக்கு வாக்களித்துவிட்டன. அ.தி.மு.க வரலாற்றிலேயே அக்கட்சிக்குச் சொந்தமான 12 சதவிகித வாக்குகள் தி.மு.க-வுக்குச் சென்றுவிட்டது. 

`ஏதாவது மீந்துச்சுன்னா கூப்பிடுவாங்க...அப்ப சாப்பிடலாம்!' - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆட்டத்தைத் தொடங்கிய ஆடிட்டர்

எந்தக் காலத்திலும் அண்ணா தி.மு.க ஓட்டு தி.மு.க-வுக்குச் சென்றதில்லை. சாதிரீதியான செயல்பாடுகளால்தான் இப்படியொரு பாதிப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க-வின் இரண்டு தலைவர்களும் தங்களுடைய சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருக்கக் கூடிய சமூக மக்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நிச்சயமாக, இது மோடி எதிர்ப்பு அல்ல. அ.தி.மு.க தலைமையின் மீதான எதிர்ப்புதான்' என விவரித்திருக்கிறார். இந்தக் கருத்தை பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் ஏற்றுக் கொண்டனர். ஏற்கெனவே ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க தோற்றபோது, `இம்பொடன்ட்' (ஆண்மையற்றவர்கள்) என்ற பொருளில் விமர்சித்திருந்தார். பின்னர் அந்த வார்த்தை, `திறனற்றவர்கள்' என்ற அடிப்படையில் கூறியதாகத் தெரிவித்தார். இப்போது தேர்தல் தோல்விக்குப் பிறகு அடுத்தகட்ட ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்" என விவரித்தவர், 

`ஏதாவது மீந்துச்சுன்னா கூப்பிடுவாங்க...அப்ப சாப்பிடலாம்!' - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆட்டத்தைத் தொடங்கிய ஆடிட்டர்

``இதன் காரணமாகத்தான் ரவீந்திரநாத்துக்குக் கேபினட்டிலும் இடம் கொடுக்கப்படவில்லை. அடுத்து வரக் கூடிய தேர்தல்களில் தமிழக பா.ஜ.க தனித்துச் செல்வதற்கே வாய்ப்பு அதிகம். `அ.தி.மு.க வீழ்ந்தால்தான் பா.ஜ.க வளர முடியும்' என்ற கருத்தையும் சிலர் முன்வைத்துள்ளனர். அவர்கள் சொல்வது இதைத்தான், ` அ.தி.மு.க வாங்கிய 31 சதவிகித வாக்குகளும் நமக்கு வந்து சேர வேண்டியவை. இவர்களோடு இணைந்து செயல்பட்டால், எந்தக் காலத்திலும் ஒரு எம்.பி சீட்டைக் கூட வெல்ல முடியாது. தங்க.தமிழ்ச்செல்வனுக்கு தற்போது விழுந்த ஓட்டுகளும் நாளை தி.மு.க அணிக்குத்தான் போய்ச் சேரும். இதைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து வரக் கூடிய தகவல்களை கூர்ந்து கவனித்து வருகிறது அகில இந்தியத் தலைமை" என்கின்றனர் ஆவேசத்துடன். 

`ஏதாவது மீந்துச்சுன்னா கூப்பிடுவாங்க...அப்ப சாப்பிடலாம்!' - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆட்டத்தைத் தொடங்கிய ஆடிட்டர்

ஆடிட்டரின் கருத்து தொடர்பாக, தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``ஆடிட்டரின் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் எதாவது ஒரு கருத்தைச் சொல்வார். அதை அப்படியே தலைமை ஏற்றுக் கொள்ளும் என்பது உண்மையல்ல. தமிழகத்தில் அமித் ஷாவுக்கு ஏராளமான சோர்ஸ்கள் இருக்கின்றன. தொழிலதிபர்கள், உளவுத்துறை அதிகாரிகள் எனப் பல தரப்பில் இருந்தும் அவருக்கு அறிக்கை சென்று கொண்டிருக்கிறது. மேலும், அ.தி.மு.க நிர்வாகிகளோடு அமர்ந்து பேசிப் பலன் இருந்தால் இந்த அணி தொடர்வது நல்லது. தொடர்ந்து நஷ்டம் ஏற்படும் என்றால் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதில் அர்த்தம் இல்லை.

கூட்டணி என்பது லாப, நஷ்டங்களைக் கணக்கில் கொண்டுதான் செயல்பட முடியும். இரண்டு கழகங்களையும் எதிர்த்து நின்றால் மட்டுமே பா.ஜ.க வளர முடியும் என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். அதேநேரம், இப்போதைக்கு தமிழக விஷயங்களில் மேலிடம் கவனம் செலுத்த வாய்ப்பில்லை. சத்தீஸ்கர், அரியானா உட்பட 4 மாநிங்களில் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கான பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு அவர்களின் கடைசி அஜெண்டாவாக இருக்கிறது. அ.தி.மு.க-வோடு கூட்டணி தொடருமா என்பதை தற்போதைய நிலையில் உறுதியாகச் சொல்ல முடியாது" என்றார் அமைதியாக.

Vikatan