Published:Updated:

`எட்டுக்கு எட்டு!' - மத்திய அமைச்சரவைக் குழுவில் அதிகாரமிக்கவராகும் அமித் ஷா

`எட்டுக்கு எட்டு!' - மத்திய அமைச்சரவைக் குழுவில் அதிகாரமிக்கவராகும் அமித் ஷா
`எட்டுக்கு எட்டு!' - மத்திய அமைச்சரவைக் குழுவில் அதிகாரமிக்கவராகும் அமித் ஷா

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் மோடி. அவருடன் மத்திய கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில், தற்போது புதிதாக 8 மத்திய அமைச்சரவை குழுக்களை மோடி அமைத்திருக்கிறார். 

`எட்டுக்கு எட்டு!' - மத்திய அமைச்சரவைக் குழுவில் அதிகாரமிக்கவராகும் அமித் ஷா

புதிய அமைச்சரவைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கும் குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சி, அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பரப்புரையில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரம் தொடர்பாகப் பல குற்றச்சாட்டுகள் ஆளும் அரசு மீது வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த மோடி உத்தரவிட்டிருக்கிறார். 

அமைச்சரவையின் நியமனங்கள் குழுவில் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் இருப்பார்கள். மொத்தம் இருக்கும் 8 குழுக்களிலும் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அமித் ஷா இருக்கிறார். மோடி 6 குழுக்களில் இருக்கிறார். புதிய நிதி அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் 7 குழுக்களிலும், பியூஷ் கோயல் 5 மத்திய குழுக்களிலும் இடம் பெற்றுள்ளனர். 

`எட்டுக்கு எட்டு!' - மத்திய அமைச்சரவைக் குழுவில் அதிகாரமிக்கவராகும் அமித் ஷா

முந்தைய ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் இரண்டு குழுக்களில் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான குழுக்களில் மட்டுமே அவர் இடம்பெற்றிருக்கிறார். இதனால் ராஜ்நாத் சிங் ஓரங்கட்டப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்கள் குழுவில் ராஜ்நாத்சிங் இடம்பெறாததால் இந்தக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குழுவில்தான் அரசியல் சார்ந்த கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

`எட்டுக்கு எட்டு!' - மத்திய அமைச்சரவைக் குழுவில் அதிகாரமிக்கவராகும் அமித் ஷா

அமித் ஷா அனைத்து அமைச்சரவை குழுக்களிலும் இடம் பெற்றிருப்பதன் மூலம் மோடிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற தலைவராகப் பார்க்கப்படுகிறார். வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு அழைப்பாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan