Published:Updated:

``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்

``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்
``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்

``நீட் பற்றி என்னிடம் பேச என்ன இருக்கிறது, நீட் மரணங்கள் பற்றி என்னிடம் எதுவும் பேச வேண்டாம். நானுமே இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன்!” என்று சற்று கோபமாகவே பேசத் தொடங்குகிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

டித்துப் பட்டம் பெறும் ஆசைகூட உயிர்களைக் காவு வாங்கும் என்று நினைத்திருப்போமா? நீட் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகளின் மரணச் செய்திகளும் வந்து சேர்ந்தன. தேர்வு முடிவுகளுடன் தற்கொலையும் நிகழ்வது இது மூன்றாவதுமுறை. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவரும், திருப்பூரைச் சேர்ந்த மாணவியும் விழுப்புரம் மாணவி ஒருவரும் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதுவரை நடந்த அத்தனை நீட் மரணங்களும் தமிழகத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்பதும் சுயாட்சி, மாநில உரிமை, கல்வி உரிமை, கொள்கை என்று பேசிக்கொண்டிருக்கும் அத்துணைப் பேர் இருந்தும் இந்த மரணங்களை  நிகழவிட்டிருக்கிறோம் என்பதும் மறுதலிக்க முடியாத உண்மை.

``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்

`நீட் தேர்வு தமிழகக் கல்விச் சூழலுக்கு உகந்ததல்ல' என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடியது. இங்கு

``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்

எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைப்பதில்லை என்னும் நிதர்சனம், நீதிமன்றங்களுக்கே உரைக்காதபோது நியாயமான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாதுதான். முதல்முறை அலட்சியத்தால் அனிதாவைப் பலிகொடுத்தபோதே, தமிழகம் சுதாரித்துக்கொண்டது. மாணவர்களும், தலைவர்களும், செயற்பாட்டாளர்களும், எந்த விவகாரத்திலும் அவ்வளவு எளிதில் சார்புநிலை எடுத்துவிடாத ஊடகங்கள் உட்பட பெருவாரியாகத் திரண்டோம். இத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள்; ஒரு நீட் மரணம் போதும், `இனி இதுபோன்ற மாணவர் மரணங்கள் நிகழாது; நீட் தொடர்பாக ஏதேனும் மாற்றம் வரும்' என்று நம்பிக் கொண்டிருந்தோம். மாற்றம் நாம் எதிர்பார்க்காத விதத்தில் வந்தது.

`இனி நீட் தேர்வையெல்லாம் தடுக்க முடியாது, மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளைத் தமிழக அரசே நடத்தும்’, என அறிவிப்பு வெளியானது. இரண்டாவது முறையும் தேர்வு வந்தது. பயிற்சி வகுப்புகளேனும் தற்கொலைகளைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், விழுப்புரம் மாணவி உட்பட மூன்று பேர் இறந்தனர். தற்போது 2019-ல் மேலும் மூன்று பேர். 

``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்

இல்லை! நாங்கள் தற்கொலைகளை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அடுத்தமுறை இதுபோன்று நடக்காமல் இருக்க என்ன செய்திருக்கிறோம். `2019 தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு மட்டும் நீட் விலக்கு அளிப்போம்' என்று சொன்ன ராகுல் காந்தி, நீட் தேர்வு தமிழகத்துக்கு வேண்டும் என்கிற ஆணித்தரமான நிலைப்பாட்டில் இருந்த நளினி சிதம்பரத்திடம் தேர்தலுக்கு முன்னரே விவாதித்திருக்கலாம். மாணவர் நலனில் உண்மையிலேயே அக்கறையுடைய அரசாக இருந்திருந்தால் அனிதா போன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க, அடுத்து என்ன வழி எனத் தமிழக அரசு யோசித்திருக்கும். நீட் தேர்வு தொடர்பான தெளிவான முடிவை எடுக்கும்வரை, அதைச் செயல்படுத்தும்வரை இங்கே எத்தனை பிஞ்சுகளின் உயிர்களைப் பலிகொடுக்க வேண்டுமோ? 

கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் இந்த முறை 9.01 சதவிகிதம் பேர் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர் என்பது ஆசுவாசப்படுத்துகிறது. வகுப்புவாரி தேர்ச்சி விகிதத்தின்படி, இந்திய அளவில் இதர வகுப்பினரில் 89 சதவிகிதம் பேர் வரை தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், ஒடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்துவரும் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கச் சதவிகிதத்திலேயே இருக்கிறது என்பதும் இதில் கவனிக்க வேண்டியது.

``நீட் பற்றி என்னிடம் பேச என்ன இருக்கிறது, நீட் மரணங்கள் பற்றி என்னிடம் எதுவும் பேச வேண்டாம். நானுமே இதனால் மிகுந்த மன

``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்

அழுத்தத்தில் இருக்கிறேன்!” என்று சற்று கோபமாகவே பேசத் தொடங்குகிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ``உச்ச நீதிமன்ற அமர்வின் முடிவைக் கடந்து எங்களால் எப்படிச் செயல்பட முடியும்? ஒருவருடமாவது விலக்குக்கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கையொப்பம் வாங்கப்போன சமயத்தில்

``நீட் தேர்வு பற்றிப் பேசி மாணவர்களை இனிமேலும் குழப்ப வேண்டாம்!” - விஜயபாஸ்கர்

விலக்குக்குத் தடை கோரி  வழக்கு போட்டது நளினி சிதம்பரம்தான். அதனால், நீங்கள் அவரிடம்தான் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும். இதில் என்னிடம் மேலும் மேலும் கேள்வி கேட்பது மாணவர்களைத்தான் இன்னும் குழப்பும். மாணவர்களைக் குழப்புவது மேலும் அவர்களைப் பாதிக்குமோ என்று நான் அச்சப்படுகிறேன்” என்று வெடிக்கிறார் அவர்.

இனி மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் தொடர்பாகத் தமிழக அரசால் எதுவுமே செய்யமுடியாது என்பது அவரது பேச்சிலிருந்தே உணர்ந்துகொள்ள முடிகிறது. மாணவர்களை வெற்றி, தோல்விக்குத் தயார்படுத்தும் வகையிலாவது அரசு குறைந்தபட்ச நடவடிக்கைகள் எடுக்குமா? தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரையும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரையும் இதுதொடர்பாகப் பலமுறை அணுகினோம். இருவருமே தற்காலிகமாக பிஸியாக இருப்பதாகக் கூறப்பட்டது. எனினும் இதுபோன்ற மரணங்கள் இனியும் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோமாக!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு