Published:Updated:

`பூ, வெற்றிலை பாக்கு, தாம்பூலம்..!' - மக்கள் பணி செய்ய வி.ஏ.ஓவுக்கு அழைப்புவிடுத்த எம்.எல்.ஏ

இ.லோகேஷ்வரி
`பூ, வெற்றிலை பாக்கு, தாம்பூலம்..!' - மக்கள் பணி செய்ய வி.ஏ.ஓவுக்கு அழைப்புவிடுத்த எம்.எல்.ஏ
`பூ, வெற்றிலை பாக்கு, தாம்பூலம்..!' - மக்கள் பணி செய்ய வி.ஏ.ஓவுக்கு அழைப்புவிடுத்த எம்.எல்.ஏ

வாய்க்கால் பிரச்னை குறித்து ஆலோசனைக்கு வர மறுத்த கிராம நிர்வாக அதிகாரியை வெற்றிலை பாக்கு வைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா ஆலோசனைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

`பூ, வெற்றிலை பாக்கு, தாம்பூலம்..!' - மக்கள் பணி செய்ய வி.ஏ.ஓவுக்கு அழைப்புவிடுத்த எம்.எல்.ஏ

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது, பேரையூர் கிராமம். இங்கு, வடவாறு வாய்க்கால் அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்களின் நீராதாரமாக இந்த வாய்க்கால் இருக்கிறது. இந்நிலையில்,  வாய்க்காலின் இருபுறமும் சாலை அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இதனால், 10 மீட்டர் இருந்த வாய்க்காலின் அகலம்,  5 மீட்டர் அளவுக்கு குறைந்தது.  நீர்நிலை பாதிக்கப்பட்டதால், அதைச் சரிசெய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், யாரும் இந்த வாய்க்காலைச் சரிசெய்யவில்லை. 
 இதையடுத்து, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா வாய்க்காலை ஆய்வு செய்தார். அப்போது, பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை வடவாறு வாய்க்கால் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், கிராம நிர்வாக அலுவலர் ஆலோசனைக்கு வரவில்லை. இதையடுத்து, ஆய்வுக்கு வராத அதிகாரியின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற எம்.எல்.ஏ, தாம்பூல தட்டோடு ஆய்வுக்கு வர அழைப்பு விடுத்தார். 

`பூ, வெற்றிலை பாக்கு, தாம்பூலம்..!' - மக்கள் பணி செய்ய வி.ஏ.ஓவுக்கு அழைப்புவிடுத்த எம்.எல்.ஏ

இதுகுறித்து டி.ஆர்.பி.ராஜாவிடம் பேசினோம். ``மக்கள் பிரச்னைக்கு அழைத்தாலும் அலுவலர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள். அதனால்தான் தாம்பூலத்தோடு அழைத்தேன். அது, இவ்வளவு பெரிய விஷயமாகும் என்று நினைக்கவில்லை. நேற்று அழைத்தேன். இன்றுதான் ஆய்வுக்கு வருகிறார். வாய்க்கால் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இனிமேலும் அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால், அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்'' என்றார்.

Vikatan