Published:Updated:

`நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்தித்தேன்!' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி

சிந்து ஆர்
`நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்தித்தேன்!' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி
`நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்தித்தேன்!' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி

குருவாயூர் கோயிலில், நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பிரார்த்தனை நடத்தியதாக, மலையாள மொழியில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

`நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்தித்தேன்!' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி

பிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில்  சுவாமி தரிசனம் செய்வதற்காக, நேற்று இரவு கேரளா வந்தார். இன்று காலை குருவாயூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் நடத்திய மோடி, எடைக்கு எடை தாமரைப் பூக்களை கோயிலுக்கு காணிக்கையாகக் கொடுத்தார். பின்னர், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்கூல் மைதானத்தில் நடந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்த நிலையில், குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

`நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்தித்தேன்!' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி

மேலும், `குருவாயூர் கோயில் மிகவும் புராதனமானது. இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் செழுமைக்காகவும் சரித்திர சிறப்புமிக்க இந்தக் கோயிலில் நான் பிரார்த்தித்தேன்' என மலையாள மொழியில் நரேந்திரமோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கேரள நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று மதியம் இரண்டு மணியளவில், கொச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

`நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்தித்தேன்!' - மலையாளத்தில் ட்வீட்டிய மோடி