Published:Updated:

``மோடிக்கு எதிரான வாக்குகள்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணம்!’ - சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்

``மோடிக்கு எதிரான வாக்குகள்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணம்!’ - சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்
``மோடிக்கு எதிரான வாக்குகள்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணம்!’ - சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்

``மோடிக்கு எதிரான வாக்குகள்தான் அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்” என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``மோடிக்கு எதிரான வாக்குகள்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணம்!’ - சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ``நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க மற்றும் த.மா.கா உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தோம். அதில் நாங்கள் தோல்வியடைந்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதேசமயம் இந்த தேர்தலில் தி.மு.க-வுக்காக யாரும் வாக்களிக்கவில்லை.

``மோடிக்கு எதிரான வாக்குகள்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணம்!’ - சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்

தமிழக மக்கள், மத்தியில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதே மக்கள்தான் அ.தி.மு.க தமிழகத்தை ஆள வேண்டும் என்றும் முடிவு செய்திருக்கிறார்கள். வெற்றிபெற்றால் ஆடம்பரமாகக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் சோர்ந்து விடுவதும் அ.தி.மு.க-வின் வழக்கம் இல்லை. நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. வெளிப்படையாகச் சொல்கிறேன் தவறான கூட்டணி அமைத்ததின் விளைவாகச் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டோம். அவை மோடிக்கு எதிரான வாக்குகள். அ.தி.மு.க இதில் தோல்வியை சந்தித்துவிட்டது.

``மோடிக்கு எதிரான வாக்குகள்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணம்!’ - சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,40,000 சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்தமாக இழந்துவிட்டோம். இதனால் வெற்றி எதிரணிக்கு சாதகமாகிவிட்டது. பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணன் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. கூட்டணியில் நாங்கள் செய்த தவற்றை திருத்திக்கொள்கிறோம். அ.தி.மு.க எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும். தற்போது தி.மு.க-வில் வெற்றிபெற்றிருக்கும் பலர் வழக்குகளில் உள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் இடமிருக்கிறது. தி.மு.க கூட்டணி 38 எம்.பி-க்களை பெற்றிருக்கிறது. தமிழகத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று அவர்கள் எங்களைக் கேட்டதுபோல் இனி நாங்கள் அவர்களைக் கேட்போம்.

``மோடிக்கு எதிரான வாக்குகள்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணம்!’ - சி.வி.சண்முகம் ஓப்பன் டாக்

2001-2006 மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதிப்பு கூட்டு வரியைத் துணிச்சலோடு எதிர்த்தவர் ஜெயலலிதா. அதுதான் இன்றைக்கு ஜிஎஸ்டி-யாக இருக்கிறது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் கொண்டு வந்தது தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிதான்.  இந்தத் தேர்தலில் அவர்கள் பொய்யைச் சொல்லி வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற தி.மு.க-வின் கனவு ஒருபோதும் நிறைவேறாது” என்றார்.

Vikatan