Published:Updated:

`இடம், பொருள் அறிந்து பேசுங்கள்!' - அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கடிதம் 

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே அவர்களால் வெற்றிக்கனியைப் பறிக்க முடிந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.எஸ்.ரவீந்திரநாத் தேனியில் வெற்றிபெற்றார். மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கித் தந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் டெல்லியில் முகாமிட்டிருந்தார் ஓ.பி.எஸ். சில காரணங்கள் அது நிறைவேறாமல் போனது. இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் கடும் அப்செட்டில் இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.  

இந்த நிலையில், தேர்தல் தோல்வி மற்றும் கட்சி குறித்து பொதுவெளியில் அ.தி.மு.க-வினர் பேசுவதைத் தலைமை விரும்பவில்லை எனத் தெரிகிறது. ஐந்தாண்டுக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்பது அ.தி.மு.க-வினரின் கணக்கு. தி.மு.க-வினர் சில எம்.எல்.ஏ-க்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தியது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாகதான் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு வழக்கத்துக்கு மாறாக அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

`இடம், பொருள் அறிந்து பேசுங்கள்!' - அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கடிதம் 

அப்போது முதல்வர், ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் தனியாக அழைத்துப் பேசியுள்ளார் என்கிறார்கள். இந்த ஆட்சியில் உங்களுக்கு வேண்டியது செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  `நாம ஆட்சியில் இருந்தாதான் நமக்கு வேண்டியது கிடைக்கும்' எனப் பேசியுள்ளார். தி.மு.க-வுடன் யார் யார் பேசுகிறார்கள் எல்லாம் எனக்கும் தெரியும். நான் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கட்சிக்கு ஒரு தலைமைதான் இருக்க வேண்டும் என நேற்று ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய விவகாரம் அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

`இடம், பொருள் அறிந்து பேசுங்கள்!' - அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கடிதம் 

இந்த நிலையில், உட்கட்சி விவகாரங்களைப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அ.தி.மு.க-வினருக்கு ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ``கழக உடன்பிறப்புகள் சிலர்  கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வரும் கருத்துகள் வரவேற்கத் தக்கவையாக இல்லை. கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது. இதன் காரணமாகதான் இத்தகைய கருத்துகளை கூறி வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

ஊர் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம் என்பதை எல்லோரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். ஒரு நாளாவது முதல்வர் பதவியில் அமர்ந்து விடக் கூடாதா என நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாதல்லவா?. கழகத்தின் நலன் கருதி சில கருத்துகளை கூற விரும்பினாலும் அதற்கான நேரமும், சந்தர்ப்பமும் செயற்குழு - பொதுக்குழு- ஆலோசனைக் கூட்டம் என்று பல்வேறு வாய்ப்புகளும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். கழக நிர்வாக முறை, தேர்தல் முடிவுகள் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கழகத்தின் முடிவுகளைப் பற்றியோ பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு