Published:Updated:

`ஆட்டத்தைத் தொடங்கிய வைத்தி; அமைதிப்படுத்திய அறிக்கை!' - ஒற்றைத் தலைமையைத் தூண்டிவிட்டது யார்? 

`ஆட்டத்தைத் தொடங்கிய வைத்தி; அமைதிப்படுத்திய அறிக்கை!' - ஒற்றைத் தலைமையைத் தூண்டிவிட்டது யார்? 
`ஆட்டத்தைத் தொடங்கிய வைத்தி; அமைதிப்படுத்திய அறிக்கை!' - ஒற்றைத் தலைமையைத் தூண்டிவிட்டது யார்? 

தேர்தல் தோல்வி என்று வரும்போது எல்லா கட்சிகளிலும் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அதனாலேயே, `ஒரு குழப்பம் உருவாகிவிடும். கட்சி போய்விடும்' என நினைத்தால் அது நிச்சயமாக நடக்காது.

`ஒற்றைத் தலைமை வேண்டும்' என்ற முழக்கத்தோடு அ.தி.மு.க-வில் கலகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் மதுரை புறநகர் வடக்கு மா.செ-வும் எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா. அவருடைய கருத்தையே குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் முன்வைத்திருக்கிறார். `பன்னீர்செல்வத்தை ஒதுக்கிவைத்துவிட்டு எடப்பாடியை முன்னிறுத்தும் வேலையாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது' என்ற குரல்களும் அ.தி.மு.க-வில் எழும்பத் தொடங்கியுள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், `மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத் இடம் பெறுவார்' என துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் எதிர்பார்த்தனர். `ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சீனியர் என்ற அடிப்படையில் வைத்திலிங்கத்துக்கும் பதவி கொடுக்க வேண்டும்' என அ.தி.மு.க-வில் எதிர்க்குரல் வலுத்தது. `ஒருவருக்குத்தான் பதவி. அது யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' எனப் பா.ஜ.க மேலிடம் கூறிவிட்டது. இன்னும் இரண்டாண்டுகள் வைத்திலிங்கத்துக்கு ராஜ்யசபா எம்.பிக்கான பதவிக்காலம் இருப்பதால், அமைச்சர் பதவியில் அமர்த்தப்படுவோம் என எதிர்பார்த்தார். இந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டதால், இதற்குக் காரணமான பன்னீர்செல்வத்துக்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்கியிருக்கிறார். இன்று ராஜன் செல்லப்பா தலைமையில் தனி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதையும் பன்னீர்செல்வம் தரப்பினர் ரசிக்கவில்லை.

`ஆட்டத்தைத் தொடங்கிய வைத்தி; அமைதிப்படுத்திய அறிக்கை!' - ஒற்றைத் தலைமையைத் தூண்டிவிட்டது யார்? 

 இதுதொடர்பாக, நேற்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், `கடந்த சில நாள்களாக கழக உடன்பிறப்புகள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும் இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுவரும் கருத்துகள் அவ்வளவு வரவேற்கத் தக்கவையாக இல்லை. கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும் பற்றும் இருக்கிறது என்பதையும் அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துகளை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்படவேண்டும்' என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். இந்த அறிக்கையையும் மீறி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் ராஜன் செல்லப்பா. 

`ஆட்டத்தைத் தொடங்கிய வைத்தி; அமைதிப்படுத்திய அறிக்கை!' - ஒற்றைத் தலைமையைத் தூண்டிவிட்டது யார்? 

``ஓ.பி.எஸ் அணிக்கு எதிராக வைத்திலிங்கம் தொடங்கியிருக்கும் ஆட்டம் இது. ராஜன் செல்லப்பாவின் கருத்தையே குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் தொடங்கி வைத்திருக்கிறார். வைத்தியின் தீவிர ஆதரவாளரான குன்னம் ராமச்சந்திரனின் கருத்தையும் பிரதானமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. நேற்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த குன்னம் ராமச்சந்திரன், வெளிப்படையாகப் பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேநேரம், ஒற்றைத் தலைமை என்ற கருத்தை முன்வைத்தால் இரட்டை இலை முடங்குவதற்கான வாய்ப்புகள்தான் அமையும். இதன்மூலம், `அ.தி.மு.க-வை வீழ்த்தினால்தான் நாம் முன்னேற முடியும்' எனப் பா.ஜ.க-வில் உள்ள சிலரது எண்ணத்துக்கு வடிவம் கொடுத்தது போலாகிவிடும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை தொடர்வதுதான் கழகத்துக்கு நல்லது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், 

`ஆட்டத்தைத் தொடங்கிய வைத்தி; அமைதிப்படுத்திய அறிக்கை!' - ஒற்றைத் தலைமையைத் தூண்டிவிட்டது யார்? 

``தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் பன்னீர்செல்வத்துடன் இருந்த பலர், தற்போது எடப்பாடி பழனிசாமியின் பின்னால் வந்துவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது, `ஓ.பி.எஸ் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு தராததால்தான் தோல்வியடைந்தோம்' எனப் பல மாவட்டங்களிலிருந்து அதிருப்தி குரல் எழும்பியுள்ளது. தேர்தல் செலவுகளுக்காக எடப்பாடி பழனிசாமி கொடுத்த பணத்தில் பெரும்பகுதியை சில நிர்வாகிகள் பதுக்கிக் கொண்டனர். இதை அறிந்து நேரிடையாக நிர்வாகிகளை அழைத்துக் கண்டித்தார் முதல்வர். தேர்தல் தோல்வி தொடர்பாக, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும் ஓ.பி.எஸ் மேல் அதிருப்தியுடன் இருப்பதாகத் தகவல் வெளியானது. `தன்னுடைய மகன் வெற்றி பெற்றால் போதும்' என்ற மனநிலையில், `ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில்கூட பன்னீர் தரப்பினர் செலவழிக்கவில்லை. அதனால்தான், தேனி மாவட்டத்தில் இந்த இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைய நேரிட்டது' என்ற ஆதங்கமும் தொண்டர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதன் நீட்சியாகத்தான் பன்னீருக்கு எதிராகக் கலகக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

`ஆட்டத்தைத் தொடங்கிய வைத்தி; அமைதிப்படுத்திய அறிக்கை!' - ஒற்றைத் தலைமையைத் தூண்டிவிட்டது யார்? 

தினகரனைவிட பன்னீர்செல்வம் மேல் என்ற அடிப்படையில்தான் சமரச முயற்சிக்குச் சம்மதம் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போது தொடரும் உட்கட்சி குழப்பத்தால் பன்னீரைக் கழட்டிவிடுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை எடப்பாடியும் அறிவார். `இரட்டை இலை நிலைக்க வேண்டும் என்றால் பன்னீர்செல்வம் தேவை' என்பதைக் கொங்கு மண்டலமும் அறியும். எனவேதான், ராஜன் செல்லப்பா கருத்துக்கு எதிராக நேற்று இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிருப்தி நிர்வாகிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில்தான் கட்சியின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது" என்கின்றனர் விரிவாக. 

`ஆட்டத்தைத் தொடங்கிய வைத்தி; அமைதிப்படுத்திய அறிக்கை!' - ஒற்றைத் தலைமையைத் தூண்டிவிட்டது யார்? 

`கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை எப்படிக் களையப் போகிறீர்கள்?' என அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் பா.வளர்மதியிடம் பேசினோம். ``உட்கட்சி விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் பேசி முடிவு செய்வார்கள். நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வாய்ப்பில்லை. கட்சியையும் ஆட்சியையும் நடத்துகிறவர்கள் இதையெல்லாம் சரிசெய்து விடுவார்கள். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. தேர்தல் தோல்வி என்று வரும்போது எல்லா கட்சிகளிலும் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அதனாலேயே, `ஒரு குழப்பம் உருவாகிவிடும். கட்சி போய்விடும்' என நினைத்தால் அது நிச்சயமாக நடக்காது. தேர்தலில் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளோம். இதுபோன்ற சூழலில் சிலர் கருத்துகளைச் சொல்வார்கள். கருத்துச் சொல்லவே கூடாது என்றால் எப்படி. கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதை  நல்லபடியாக சரிசெய்வார்கள். கட்சியை நல்லபடியாகக் கொண்டு செல்வார்கள். இந்தக் கட்சி உடைந்துவிடாதா எனச் சிலர் எதிர்பார்க்கிறார்கள். 12-ம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள். கூட்டத்தின் முடிவில், இந்தக் கட்சியைத் தெளிந்த நீரோடையைப் போலக் கொண்டு செல்வார்கள்" என்ற நம்பிக்கையோடு. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு