Published:Updated:

ஸ்டாலினின் `த்ரீ மேன்’ ஆர்மி! - ஒற்றைத் தலைமையை ஆயுதமாக்கும் ஓ.பி.எஸ்?!

ஸ்டாலினின் `த்ரீ மேன்’ ஆர்மி! - ஒற்றைத் தலைமையை ஆயுதமாக்கும் ஓ.பி.எஸ்?!
ஸ்டாலினின் `த்ரீ மேன்’ ஆர்மி! - ஒற்றைத் தலைமையை ஆயுதமாக்கும் ஓ.பி.எஸ்?!

ஓ.பி.எஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த பெரியகுளம், ஆண்டிபட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கிறது. தேனி மாவட்டம் முழுக்க ரவீந்திரநாத் அலை வீசும்போது, அதே தொகுதிக்குட்பட்ட பெரியகுளம், ஆண்டிபட்டியில் மட்டும் தி.மு.க வென்றதன் பின்னணி என்ன? 

`ஒற்றைத் தலைமை வேண்டும்' என்ற முழக்கம் அ.தி.மு.க-வில் உருவாகியிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கத் தொடங்கியுள்ளனர் அக்கட்சியின் தொண்டர்கள். `ராஜன் செல்லப்பாவை பின்னணியில் இருந்து சிலர் இயக்குகிறார்கள். அவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறை கொடுத்த அறிக்கையை எடப்பாடி பழனிசாமி சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

ஸ்டாலினின் `த்ரீ மேன்’ ஆர்மி! - ஒற்றைத் தலைமையை ஆயுதமாக்கும் ஓ.பி.எஸ்?!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, கடந்த இரண்டாண்டுகளாக யாரும் பேசாத வகையில் ராஜன் செல்லப்பாவிடமிருந்து புதிய குரல் ஒலித்துள்ளது. `ஒற்றைத் தலைமை வேண்டும்' என்ற அவரது வார்த்தைக்கு குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் செவிமடுத்திருக்கிறார். ` இதன் பின்னணியில் இருப்பது ஓ.பி.எஸ்ஸா...ஈ.பி.எஸ்ஸா?' எனப் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் கட்சித் தொண்டர்கள். `கட்சியிலும் ஆட்சியிலும் பன்னீர்செல்வத்தைக் கொங்கு மண்டலம் ஓரம்கட்டுவதால், எடப்பாடிதான் பின்னணியில் இருக்கிறார்' என்ற ஹேஸ்யங்களும் வலம் வருகின்றன. இருப்பினும், நேற்று முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், `கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும் பற்றும் இருக்கிறது என்பதையும் அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துகளை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்படவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். 

ஸ்டாலினின் `த்ரீ மேன்’ ஆர்மி! - ஒற்றைத் தலைமையை ஆயுதமாக்கும் ஓ.பி.எஸ்?!

`ஒற்றைத் தலைமையின் நிஜப் பின்னணி என்ன?' - அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசித் திரட்டிய தகவல்கள் இதோ...  ``மத்திய அமைச்சரவையில் தன்னுடைய மகனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். `தன் மகனை எம்.பி ஆக்க முடியவில்லை' என்ற மனஉளைச்சலில் இருக்கிறார் ராஜன் செல்லப்பா. இருவருமே புத்திரர்களின் சோகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இறந்த பிறகு, `அமைச்சர் ஆக வேண்டும்' என்ற லட்சியத்தில் இருந்தார் ராஜன் செல்லப்பா. அவரது கனவு நிறைவேறவில்லை. கூவத்தூரில் சசிகலா கட்டுப்பாட்டில் எம்.எல்.ஏ-க்கள் இருந்தபோது, பன்னீர்செல்வத்தின் மகன் ஒருவர் ராஜன் செல்லப்பாவிடம் பேசியதாக அப்போதே ஆடியோ ஒன்று வலம் வந்தது. இதனுடன் தற்போது அவருடைய முழக்கத்தை முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டியுள்ளது" என்றவர்கள், தொடர்ந்து பேசும்போது,  

ஸ்டாலினின் `த்ரீ மேன்’ ஆர்மி! - ஒற்றைத் தலைமையை ஆயுதமாக்கும் ஓ.பி.எஸ்?!

``தற்போது எழுந்துள்ள ஒற்றைத் தலைமை முழக்கம் குறித்து, உளவுத்துறையின் அறிக்கையைக் கேட்டு வாங்கிப் படித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த அறிக்கையில், `கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆளும்கட்சியை அசைத்துப் பார்க்கும் வகையில் எம்.எல்.ஏ-களை விலை பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குப் போன எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி ஆகிய மூவர் தலைமையில் அணி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலமாகத்தான் இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்க மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. `அமைச்சர் பதவி கிடைக்காத ஆதங்கத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் ராஜன் செல்லப்பா' என ஒற்றை வரியோடு முடித்துக் கொண்டார் முதல்வர். நேற்று தலைமையிலிருந்து கூட்டாக அறிக்கை வெளியான பிறகும், இன்று திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா கூட்டிய கூட்டத்தை அவ்வளவு எளிதில் புறம்தள்ளிவிட முடியாது. இதன் பின்னணியில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன" என விவரித்தவர்கள், 

ஸ்டாலினின் `த்ரீ மேன்’ ஆர்மி! - ஒற்றைத் தலைமையை ஆயுதமாக்கும் ஓ.பி.எஸ்?!

``நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகன் ராஜ் சத்யனுக்கு சீட் கேட்டார் ராஜன் செல்லப்பா. இதை ஏற்க மறுத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ` தமிழரசனுக்கு சீட் கொடுக்க வேண்டும்' என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, `ராஜன் செல்லப்பா ஒரு மாவட்டச் செயலாளர். அவர் சொல்லும் நபருக்குத்தான் சீட் கொடுக்க முடியும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதன்பின்னர், சில தொகுதிகளைப் பிரித்து உதயகுமாரை மாவட்டச் செயலாளராக அமர வைத்தனர். இதில், ராஜன் செல்லப்பா வசம் இருந்த தொகுதிகளும் அடக்கம். தேர்தல் முடிவிலும் உதயகுமார் உள்ளடியால்தான் சத்யன் தோற்றதாக நம்பினார் ராஜன் செல்லப்பா. இந்தக் கோபத்தைத்தான் கட்சித் தலைமை மீது காட்டத் தொடங்கியிருக்கிறார். இதற்குப் பன்னீர்செல்வத்தின் ஆசியும் உண்டு. அதற்கு முன்னதாக ஓ.பி.எஸ் குறித்து சசிகலா சேகரித்த தகவல்கள் மிக முக்கியமானவை" என்றவர்கள், 

``பன்னீர்செல்வத்துக்கும் தி.மு.க சீனியர்கள் சிலருக்கும் இடையில் ரகசியத் தொடர்புகள் இருந்ததாக உறுதியாக நம்பினார் சசிகலா. ஜெயலலிதா இறந்த பிறகு சட்டமன்றத்தில் தி.மு.க-வினரைப் பார்த்து பன்னீர்செல்வம் சிரித்த விஷயத்தையும் பத்திரிகையாளர்களிடம் விவரித்தார் சசிகலா. இதே காலகட்டத்தில், `பன்னீர்செல்வத்துக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு' எனப் பேசினார் துரைமுருகன்.  ஓ.பி.எஸ் பதவியிலிருந்து இறக்கப்பட்ட பிறகு, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டார் எடப்பாடி. அப்போதும், `ஆட்சி கவிழ்ந்துவிடும். நீங்கள் பிரச்னை செய்யுங்கள்' என தி.மு.க தரப்பிடம் பன்னீர் தரப்பினர் கூறியதாலேயே, சட்டை கிழிந்த நிலையில் ஸ்டாலின் வந்ததாகவும் தகவல் உண்டு. இந்தப் பின்னணியோடு தற்போது நடந்து முடிந்த தேர்தலையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ஓ.பி.எஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த பெரியகுளம், ஆண்டிபட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தி.மு.க வென்றிருக்கிறது. தேனி மாவட்டம் முழுக்க ரவீந்திரநாத் அலை வீசும்போது, அதே தொகுதிக்குட்பட்ட பெரியகுளம், ஆண்டிபட்டியில் மட்டும் தி.மு.க வென்றதன் பின்னணி என்ன?. 

ஸ்டாலினின் `த்ரீ மேன்’ ஆர்மி! - ஒற்றைத் தலைமையை ஆயுதமாக்கும் ஓ.பி.எஸ்?!

அந்தத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் முழுவதும் தேனி எம்.பி தொகுதிக்கே செலவிடப்பட்டதும் ஒரு காரணம். இருந்தாலும், இதன் பின்னணியில் சில பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் எனவும் அந்தத் தொகுதி பிரமுகர்கள் நம்புகின்றனர். இத்தனைக்கும் அந்தத் தொகுதிகளின் தி.மு.க பொறுப்பாளராக ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் தேனிக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை. தற்போது ஒற்றைத் தலைமை என்ற முழக்கத்தின் மூலமாக அ.தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க ஈடுபட்டிருப்பதாகவும் உறுதியாக நம்புகிறோம். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு எடப்பாடி வெற்றி பெற்றிருப்பதை தி.மு.க-வாலும் அ.தி.மு.க-வில் உள்ள தி.மு.க அனுதாபிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `ஆட்சி கலையும், கட்சி தங்கள் கைக்கு வரும்' என்ற மனநிலையின் வெளிப்பாடுதான் இந்த ஒற்றைத் தலைமை முழக்கம். `இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்' என்பதுதான் உடல் நலிவிலும் ஜெயலலிதா கட்டிக் காத்த இந்த இயக்கத்தின் முன்னிற்கும் மாபெரும் சவாலாகக் கருதுகிறோம்" என ஆதங்கத்தோடு பேசி முடித்தனர். 
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு