Published:Updated:

`நாங்க குடும்ப கட்சிதாங்க; ஆனால்....' - திருச்சியில் கவனம் ஈர்த்த உதயநிதி ஸ்டாலின்!

`நாங்க குடும்ப கட்சிதாங்க; ஆனால்....' - திருச்சியில் கவனம் ஈர்த்த உதயநிதி ஸ்டாலின்!
`நாங்க குடும்ப கட்சிதாங்க; ஆனால்....' - திருச்சியில் கவனம் ஈர்த்த உதயநிதி ஸ்டாலின்!

`நாங்க குடும்ப கட்சிதாங்க; ஆனால்....' - திருச்சியில் கவனம் ஈர்த்த உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க குடும்ப கட்சிதான் என திருச்சி பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

`நாங்க குடும்ப கட்சிதாங்க; ஆனால்....' - திருச்சியில் கவனம் ஈர்த்த உதயநிதி ஸ்டாலின்!

திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மைதீன், மத்திய மண்டலத்தில் வெற்றி பெற்ற, இந்திய ஜனநாயக கட்சித் தலைவரும் எம்.பி-யுமான பாரிவேந்தர், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நான் அதிகம் பேசமாட்டேன். பேச்சை விடச் செயலில் காட்டுவதைதான் விரும்புகிறேன். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக வாயில் வடை சுட்டவர்கள் எல்லாம், தற்போது தி.மு.க-வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியைப் பார்த்து வாயடைத்துக் கிடக்கிறார்கள். தி.மு.க கூட்டணியைப் பிரமாண்டமான வெற்றி பெறச் செய்த நம் தலைவர் கெத்தா கம்பீரமாக அமர்ந்திருக்கும், நம் தலைவர், கருணாநிதி மகன், எனக்கு அப்பா, உங்களில் ஒருவர் எனக் கூறும் தலைவருக்கு நன்றி.

கடந்த சில தினங்களாக, கட்சியில் எனக்கு ஏதோ ஒரு பொறுப்பு வரப்போகிறது என்று ஊடகங்களும் மற்றவர்களும் பேசிவருகிறார்கள். நான் ஏதோ கடந்த தேர்தலில் மட்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், நான் சிறுவயதில் துறைமுகம் மற்றும் சேப்பாக்கம் தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர் கலைஞருக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். அதன்பிறகு கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் என் நண்பன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதியிலும் பிரசாரம் செய்தேன். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொகுதியில் தலைமையின் அனுமதியுடன், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன். எனது பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்த தி.மு.க நிர்வாகிகளுக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

`நாங்க குடும்ப கட்சிதாங்க; ஆனால்....' - திருச்சியில் கவனம் ஈர்த்த உதயநிதி ஸ்டாலின்!

உங்கள் முன்பாக தலைவர் ஸ்டாலினிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நான் எந்த ஒரு பொறுப்பும் பதவியும் எதிர்பார்த்து, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. என்னைத் தலைவரின் மகன், நடிகர், முரசொலி நிர்வாக இயக்குநர் என அழைத்தார்கள். முரசொலி பதவி என்பது தலைவர் கருணாநிதி உயிரோடு இருக்கும்போது அவரால் வழங்கப்பட்ட பதவி. அவற்றை எல்லாம்விட மிகப் பெரிய, பலமான தி.மு.க-வின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்கிற பெரும் பொறுப்பே போதும். எங்களுடைய அடுத்த வேலை, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க-வுக்கு வெற்றியை தேடித் தருவதுதான். அப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தலைவர் ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதுதான் எங்கள் அடுத்தகட்ட வேலை. அதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் தயாராக உள்ளது.

தி.மு.க குடும்பக் கட்சி என்று அனைவரும் கூறிவருகிறார்கள்.  ஆம், தி.மு.க குடும்பக் கட்சிதான். அன்பில் தர்மலிங்கம் தாத்தா, மகேஷின் தாத்தா மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். எனது தாத்தா கருணாநிதி, எனக்கு மட்டுமல்ல இங்குள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான். அதனால்தான் தி.மு.க குடும்பக் கட்சி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மோடி எதிர்ப்பு அலை மட்டும் காரணமல்ல; தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலைதான் காரணம்.

உள்ளாட்சித் தேர்தலிலும் பிரசாரம் செய்ய இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் விரைவில் நடக்கவுள்ள நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வேன். அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சி, தி.மு.க-வுக்கு கொடுக்க திருநாவுக்கரசர் பரிந்துரை செய்ய வேண்டும். ஸ்டாலின் மிகவும் தாராள குணம் கொண்டவர். அதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு வாரி வழங்கி விடுவார். மீண்டும் தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில், கூட்டணி முக்கியம் என்றாலும் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று, வரலாற்று சாதனையை படைக்க வேண்டும்" என்றார்.

உதயநிதி தி.மு.க குடும்பக் கட்சி என மேடையில் கூறியதும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் ஸ்டாலின் கறார் காட்ட வேண்டும் எனப் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மேடைக்குக் கீழ் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு