Published:Updated:

` என்ன நடந்தாலும் பன்னீர் பக்கம் போகக் கூடாது!' - பல் வலியிலும் எடப்பாடி கொடுத்த ரம்ஜான் ட்ரீட்

` என்ன நடந்தாலும் பன்னீர் பக்கம் போகக் கூடாது!'  - பல் வலியிலும் எடப்பாடி கொடுத்த ரம்ஜான் ட்ரீட்
` என்ன நடந்தாலும் பன்னீர் பக்கம் போகக் கூடாது!' - பல் வலியிலும் எடப்பாடி கொடுத்த ரம்ஜான் ட்ரீட்

`என்ன நடந்தாலும் இந்த ஆட்சியை இன்னும் 18 மாதங்களுக்குக் கொண்டு சென்றுவிட முடியும்' என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி. நாளை நடக்கவிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், மோதல் வெடிக்காமல் தடுப்பதில்தான் முதல்வரின் வெற்றி அடங்கியிருக்கிறது.

`ஒற்றைத் தலைமை' என்ற ஆயுதத்தின் மூலம் கொங்கு மண்டலத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது தெற்கு மண்டலம். `பன்னீர்செல்வம் பக்கம் எம்.எல்.ஏ-க்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 50 எம்.எல்.ஏ-க்களுக்கு சிறப்புப் பரிசு கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழக அரசியல் சூழல்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதித்ததாகவும் தகவல் வெளியானது. `அ.தி.மு.க முகாமுக்குள் கடந்த சில நாள்களாக வெடித்துக் கிளம்பியிருக்கும் ஒற்றைத் தலைமை சர்ச்சையின் மூலம் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்?' என்ற கவலையும் அண்ணா தி.மு.க தொண்டர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியிருக்கிறது. `இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும்' என ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்ட பிறகும் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா. `கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்லும் வகையில் உத்தரவிடக்கூடிய வலுவான தலைமை வேண்டும்' என்ற குரல்களும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. 

` என்ன நடந்தாலும் பன்னீர் பக்கம் போகக் கூடாது!'  - பல் வலியிலும் எடப்பாடி கொடுத்த ரம்ஜான் ட்ரீட்

`இப்படியொரு சூழல் ஏன் ஏற்பட்டது?' என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டோம். ``நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சாதிரீதியாகக் கட்சி நிர்வாகம் பிளவுபட்டுக் கிடக்கிறது. `அம்மா இருந்த வரையில் நாம் எல்லோருமே சமமான அதிகாரத்தில்தான் இருந்தோம். இப்போது கொங்கு மண்டலத்துக்கு மட்டும் அப்படியென்ன தனி அந்தஸ்து. இந்த ஆட்சி நீடிப்பதற்கு நாமும் சமமான பங்களிப்பை அளித்திருக்கிறோம். நம்மை மட்டும் புறக்கணிப்பது எந்தவகையில் நியாயம்?' என்ற கேள்வியைத் தென்மண்டலத்தைச் சேர்ந்த சிலர் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ப்ளஸ் கொங்கு கேபினட்டுக்கு எதிரான ஒட்டுமொத்தக் கொந்தளிப்பின் நீட்சியாகத்தான் இப்படியொரு உட்கட்சி மோதல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது" என விவரித்தவர்கள், 

` என்ன நடந்தாலும் பன்னீர் பக்கம் போகக் கூடாது!'  - பல் வலியிலும் எடப்பாடி கொடுத்த ரம்ஜான் ட்ரீட்

``மத்திய அமைச்சரவையில் தன்னுடைய மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்குக் கொங்கு மண்டலம் போட்ட தடைதான் காரணம் என உறுதியாக நம்புகிறார். அவருடைய மறைமுக உத்தரவின்பேரில்தான் ஒற்றைத் தலைமை முழக்கத்தைச் சிலர் முன்னெடுக்கின்றனர் எனக் கொங்கு தரப்பில் உறுதியாக நம்புகின்றனர். இதன் விளைவாக, ` தென்மண்டலத்தில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் பலரும் சமூகரீதியாக ஓ.பி.எஸ் பக்கம் திரள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது' என முதல்வருக்கு அலர்ட் வந்திருக்கிறது. `எதைச் செய்தாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும்' என்ற முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அ.தி.மு.க சார்பாக இப்தார் விருந்து நடைபெற்றது. `இந்த விருந்தில் முதல்வர் பங்கேற்பார்' என மாலை 6 மணி வரையில் நிர்வாகிகள் காத்திருந்தனர். `பல் வலி காரணமாக முதல்வர் பங்கேற்கவில்லை' என்ற தகவல் வந்துள்ளது. 

` என்ன நடந்தாலும் பன்னீர் பக்கம் போகக் கூடாது!'  - பல் வலியிலும் எடப்பாடி கொடுத்த ரம்ஜான் ட்ரீட்

அதேநேரம், கிரீன்வேஸ் சாலை அருகில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிலும் உணவு விடுதி ஒன்றிலும் அ.தி.மு.க நிர்வாகிகள் பெருவாரியாகக் குவிந்திருந்தனர். பல் வலி எனக் கூறி ஓய்வில் இருந்த அதேநேரம், 50 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு சிறப்புப் பரிசு ஒன்றை முதல்வர் தரப்பில் இருந்து கொடுத்ததாகத் தகவல் வெளியானது. இதுபற்றி விசாரித்தபோது, ` பரிசு கொடுப்பது தொடர்பாக 84 எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அதில், 72 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு வந்திருந்தனர். 12 பேர் வரவில்லை. அவர்களுக்கான பரிசு வீடு தேடிப் போய் கொடுக்கப்பட்டது. எந்தச் சூழலிலும் இவர்கள் ஓ.பி.எஸ் பக்கம் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு பரிசு வழங்கப்பட்டது' என்ற தகவல் கிடைத்தது. இதனால் அதிருப்தியில் இருந்தவர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துவிட்டுக் கிளம்பிவிட்டனர். இப்படியொரு சிறப்புப் பரிசு கொடுத்த தகவலால் எதிர்த்தரப்பினர் கடும் கொந்தளிப்புக்கு ஆளானார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் ஒற்றைத் தலைமை குரல்கள் அரங்கேறத் தொடங்கின.

இதுவரையில் இல்லாத அளவுக்கு ஆட்சிக்கு எதிரான விஷயங்கள் அணிவகுக்கத் தொடங்கியிருப்பதால், `இன்னும் 3 மாசத்துக்குள்ள என்ன கோரிக்கை இருந்தாலும் சொல்லிவிடுங்கள். அதன் பிறகு, என்ன நடக்கும் என்றே தெரியாது' எனக் கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு சிலர் பேசி வருகின்றனர். `என்ன நடந்தாலும் இந்த ஆட்சியை இன்னும் 18 மாதங்களுக்குக் கொண்டு சென்றுவிட முடியும்' என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி. நாளை நடக்கவிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், மோதல் வெடிக்காமல் தடுப்பதில்தான் முதல்வரின் வெற்றி அடங்கியிருக்கிறது" என்கின்றனர் நிதானமாக. 

` என்ன நடந்தாலும் பன்னீர் பக்கம் போகக் கூடாது!'  - பல் வலியிலும் எடப்பாடி கொடுத்த ரம்ஜான் ட்ரீட்

``கொங்கு மண்டலத்திடம் அதிகாரத்தைப் பறிகொடுத்துவிட்டோம் என்ற ஆதங்கம், தென்மண்டலத்தில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் மத்தியில் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. இதே கோபத்தை சில மாதங்களுக்கு முன்பு பொதுமேடையில் விமர்சித்தார் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ். ஒற்றைத் தலைமை என இவர்கள் முன்வைப்பது யாரை? சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.சி.பழனிசாமி எனப் பலரும் அந்த ஒற்றைத் தலைமைக்காகக் காத்திருக்கின்றனர். சமூகரீதியாகக் கழகம் பிரிந்து கிடப்பதால், எதிர்க் கட்சிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பை இயல்பாகவே ஆட்சியில் உள்ளவர்கள் உருவாக்கிக் கொடுக்கின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், எடப்பாடிக்கு எதிரான எம்.எல்.ஏ-க்கள் மௌனம் சாதித்துவிட்டால் ஆட்சி நீடிப்பதில் சிக்கல் ஏற்படும். இப்படியொரு வாய்ப்புக்காகத்தான் தி.மு.க காத்திருக்கிறது. மிகுந்த உடல் நலிவிலும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் ஜெயலலிதா. அதை உணர்ந்து தலைமையில் உள்ளவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டிய நேரம் இது" எனவும் ஆதங்கப்படுகின்றனர் சீனியர் நிர்வாகிகள் சிலர். 

`ஆளுநரின் டெல்லி பயணமும் ஒற்றைத் தலைமை முழக்கமும் அதன் தொடர்ச்சியாக நாளை நடக்கவிருக்கும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும், தமிழக அரசியலை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு