Published:Updated:

``எனதருமை பாகிஸ்தானியர்களே... அன்றாடச் செலவுக்கே பணமில்லை... புரிந்துகொள்ளுங்கள்!'' - இம்ரான் கான்

``எனதருமை பாகிஸ்தானியர்களே... அன்றாடச் செலவுக்கே பணமில்லை... புரிந்துகொள்ளுங்கள்!'' - இம்ரான் கான்
``எனதருமை பாகிஸ்தானியர்களே... அன்றாடச் செலவுக்கே பணமில்லை... புரிந்துகொள்ளுங்கள்!'' - இம்ரான் கான்

``கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.30 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. சம்பாதிக்கிற பணத்தை அரசுக்கு வரி கட்டாமல் ஒளித்து வைப்பீர்களெனில் அரசாங்கம் பணத்துக்கு எங்கே போகும்?"

லக நாடுகளில் அதிக நிதி நெருக்கடிகளைச் சந்தித்துவரும் நாடு பாகிஸ்தான். தீவிரவாதிகளின் முகாம்களும் அங்கே இருப்பதால் உலகமயமாக்கலின் தாக்கம் மற்ற ஆசிய நாடுகளோடு ஒப்பிடுகையில், அங்கே குறைவு. இதனால் போதுமான நிதி சுழற்சி இல்லாமல் நெருக்கடியில் தத்தளித்து வருகிறது அந்நாடு. சர்வதேச நிதி அமைப்பு, பாகிஸ்தானுக்கு  உதவுவதாகச் சுமார் 600 கோடி ரூபாய் வரை கடன் அளிப்பதாக அறிவித்தது. அதுவும் கிடைக்காத சூழலில் நாடு மிக மோசமாகச் சென்றிருக்கிற தருணத்தில், அதிலிருந்து மீட்டெடுக்கும் விதமாகப் பல்வேறு திட்டங்களை வகுத்துவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இதுகுறித்து நாட்டு மக்களிடையேயும் தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.

``எனதருமை பாகிஸ்தானியர்களே... அன்றாடச் செலவுக்கே பணமில்லை... புரிந்துகொள்ளுங்கள்!'' - இம்ரான் கான்

அதில் அவர் பேசியது, ``எனதருமை குடிமக்களே, உலக நாடுகளிலேயே மக்களிடம் குறைந்த தொகையை வரியாக வசூல் செய்யும் நாடாகப் பாகிஸ்தான் இருக்கிறது. ஆனபோதிலும், வரியின்மூலம் கிடைக்கிற வருவாய் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. இப்படியிருக்கிற பட்சத்தில் நாட்டை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுபோக முடியாது மட்டுமன்றி, இன்னும் பின்னோக்கிச் செல்லவே வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடி ரூபாயிலிருந்து ரூ.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய வருவாயே வரிவசூலிலிருந்து கிடைப்பதுதான். ஆனால், மக்கள் முறையாக வரி செலுத்தாதபோது, நம் நாட்டில் நம்முடைய கடனை வேறு எப்படி அடைக்க முடியும்? கடனை விடுங்கள். வருவாயின்றி முதலில் நாட்டை வழிநடத்த முடியும்? சம்பாதிக்கிற பணத்தை அரசுக்கு வரி கட்டாமல் ஒளித்து வைப்பீர்கள் எனில், அரசாங்கம் பணத்துக்கு எங்கே போகும்? குடிமக்கள் வரி செலுத்தாதவரை ஒருபோதும் இது சிறந்த நாடாக விளங்க முடியாது. 

எனதருமை பாகிஸ்தான் மக்களே... உங்கள் அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்புவது என்னவெனில், உங்கள் சொத்துகள் குறித்த விவரங்களை முறையாகத் தெரிவியுங்கள். சொத்துக் கணக்கு என்பது வங்கியில் உள்ள பணம், வேறொருவர் பெயரிலுள்ள உங்கள் சொத்துகள். இது தவிர, வெளிநாடுகளில் முதலீடு செய்தவை என எல்லாவற்றையும் வெளிப்படையாக அரசிடம் காண்பித்து அதற்கு ஏற்றாற்போல் வரி செலுத்துங்கள். நாடு நல்லவிதமான மாற்றத்தை நோக்கிப் போக வேண்டுமெனில், அந்த மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்கலாம். ஏழ்மையில் உள்ள நம் நாட்டு மக்களை நியாயமான முறையில் மீட்டெடுக்கும் பங்களிப்பாகவே உங்களிடம் இதைக் கேட்கிறேன்.

உங்களுடைய இந்தக் கணக்கை வருகிற ஜூன் 30-ம் தேதிக்குள் நீங்கள் வெளியிட வேண்டும். அது தவறுகிற பட்சத்தில் தவிர்க்கவே முடியாமல் கடுமையான நடவடிக்கைகளை உங்கள்மீது பிரயோகிக்கும் சூழலில் நாடு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி, பதுக்கிவைத்திருப்பவர்களின் பட்டியல் எங்களிடம் இருக்கிறது. ஆகவே, எங்கள் நடவடிக்கைக்குக் காத்திருக்காதீர்கள். நம் நாட்டின் வளர்ச்சி அதன்மீது நீங்கள் வைத்திருக்கிற அக்கறையில்தான் இருக்கிறது" என்றார்.

``எனதருமை பாகிஸ்தானியர்களே... அன்றாடச் செலவுக்கே பணமில்லை... புரிந்துகொள்ளுங்கள்!'' - இம்ரான் கான்

சொத்துக் கணக்கை மக்கள் முறையாக அரசுக்கு அறிவிக்க வேண்டும் என இம்ரான் கான் இரண்டாவது முறையாக இந்தக் கோரிக்கையை மக்களிடம் வைத்திருக்கிறார். எல்லா நாடுகளிலும் வழக்கம்போல இருக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளால், பிரதமர் இம்ரான் கானின் இந்தப் பேச்சையும் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அது, `இம்ரானின் பேச்சில் நிறைய பொய்கள் அடங்கியிருக்கிறது' என விமர்சித்திருக்கிறது. 

இம்ரான் கான் கூறியதில் பொய் இருக்கிறது என எதிர்க்கட்சி கூறியது அவர்களுடைய உள்நாட்டு ஊடகங்களின் விவாதத்திற்கு உட்பட்டது. ஆனால், ஒரு நாட்டு மக்கள் முறையாக வரி செலுத்தாவிடில், அந்த நாடு அழிவின் பாதையைத்தான் நோக்கிச் செல்லும் என்பதற்குப் பாகிஸ்தான் ஓர் உதாரணமாக ஆகிவிடக் கூடாது. அதுவே, அதன் சகோதர நாடான நம்முடைய எண்ணமாகவும், படிப்பினையாகவும் இருக்க வேண்டும். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு