Published:Updated:

`எடப்பாடி ஆட்சி கவிழட்டும்...ஆனால்?!'  - உதயநிதி பதவியேற்பு தள்ளிப் போகும் பின்னணி

`எடப்பாடி ஆட்சி கவிழட்டும்...ஆனால்?!'  - உதயநிதி பதவியேற்பு தள்ளிப் போகும் பின்னணி
`எடப்பாடி ஆட்சி கவிழட்டும்...ஆனால்?!'  - உதயநிதி பதவியேற்பு தள்ளிப் போகும் பின்னணி

தற்போதுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் பலருக்கும் அடுத்து வரக் கூடிய தேர்தலில் சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே, `தி.மு.க-வுக்குச் சாதகமாக நீங்கள் செயல்பட்டால், சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக சீட் வழங்குவோம்' என்ற கோரிக்கையை பிரதானமாக முன்வைத்துள்ளனர்.

ண்ணா தி.மு.க-வில் நடக்கும் குழப்பங்களை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அறிவாலயம். `எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குச் சிக்கல் வந்தாலும் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார் ஸ்டாலின்' என்கின்றனர் உடன்பிறப்புகள். 

`எடப்பாடி ஆட்சி கவிழட்டும்...ஆனால்?!'  - உதயநிதி பதவியேற்பு தள்ளிப் போகும் பின்னணி

தமிழக சட்டமன்றம் கூடும் நாளுக்காகக் காத்திருக்கிறது தி.மு.க. `தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் தண்ணீர்ப் பிரச்னை, நீட் தேர்வு சர்ச்சை ஆகியவை குறித்து விவாதிப்பதற்குச் சட்டமன்றம் கூட வேண்டும்' என்ற கோரிக்கையை எதிர்க்கட்சி முன்வைத்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வில் நிலவும் உட்கட்சி குழப்பம் காரணமாக, சட்டமன்றக் கூட்டத் தொடரை தள்ளிப் போடுவதற்கு முதல்வர் தரப்பில் முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தன்னைச் சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்களே தொடுக்கும் கேள்விக் கணைகளால் எழுந்துள்ள நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, தாமதம் செய்து பிரச்னைகளைத் தள்ளிப் போடுவதற்கு ஏதுவாக சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முதலமைச்சர் பயம் கொள்வாரானால், ஆளுநர் தலையிட்டு பேரவையைக் கூட்ட ஆணைப் பிறப்பிக்க வேண்டும். சட்டமன்றம் கூட்டப் படுவதை மேலும் தள்ளிப் போடுவது, தேவையில்லாத குழப்பங்களுக்கும் நெருக்கடிக்கும் வழிவகுத்துவிடும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

`எடப்பாடி ஆட்சி கவிழட்டும்...ஆனால்?!'  - உதயநிதி பதவியேற்பு தள்ளிப் போகும் பின்னணி

``நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் நிலவும் உட்கட்சி குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், தி.மு.க தரப்பிலிருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளில் தென்மண்டலத்தைச் சேர்ந்த சிலர் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். `சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது, இந்த எம்.எல்.ஏ-க்கள் பயன்படுவார்கள்' எனவும் தி.மு.க தலைமை நினைக்கிறது. தற்போதுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் பலருக்கும் அடுத்து வரக் கூடிய தேர்தலில் சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே, `தி.மு.க-வுக்குச் சாதகமாக நீங்கள் செயல்பட்டால், சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக சீட் வழங்குவோம்' என்ற கோரிக்கையை பிரதானமாக முன்வைத்துள்ளனர். இந்த டிமாண்டுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் சம்மதம் தெரிவித்துவிட்டனர். `இந்தப் பணிகள் எந்தளவுக்கு இருக்கிறது' என தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர் கேட்டபோது, `8 விக்கெட் விழுந்திருச்சு. இன்னும் 2 தான் பாக்கி' எனச் சொல்லி சிரித்திருக்கிறார் தென்மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர். அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த இந்தப் புள்ளி மூலமாகவே அனைத்துக் காரியங்களும் நடந்து வருகின்றன. இதற்கான பணத் தேவைகளுக்கு மட்டும் திருவண்ணாமலைப் புள்ளி உதவி செய்து வருகிறார்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர். 

`எடப்பாடி ஆட்சி கவிழட்டும்...ஆனால்?!'  - உதயநிதி பதவியேற்பு தள்ளிப் போகும் பின்னணி

``எடப்பாடி பழனிசாமி அரசுக்குச் சிக்கல் வந்தாலும் தேர்தலை எதிர்கொள்ளவே ஸ்டாலின் விரும்புகிறார். அப்படிச் செய்யாமல் ஆட்சியில் அமர்ந்துவிட்டால், மக்கள் மத்தியில் கெட்ட பெயரைச் சம்பாதிக்க நேரிடும். `தனிப் பெரும்பான்மையோடு பதவியில் அமர வேண்டும் என்றால் தேர்தலை எதிர்கொள்வதே நல்லது' என்ற மனநிலையில் இருக்கிறார். அதேநேரம், உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுப்பது குறித்தும் தனி விவாதம் நடந்து வருகிறது. தற்போது இளைஞரணியின் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் இருக்கிறார். மாநில துணைச் செயலாளராக ஆர்.டி.சேகர், தாயகம் கவி, பாரி, துரை, சுபா சந்திரசேகர், ஜின்னா, அன்பில் மகேஷ், ஜோயல் உள்ளிட்டோர் பதவி வகிக்கின்றனர். இந்த வரிசையில் சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார் உதயநிதி. அன்பில் மகேஷ் உட்பட ஒரு சிலரை மட்டும் இதே பதவியில் தொடர வைப்பது என்றும் மற்றவர்களுக்கு வேறு பொறுப்புகளைக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார். 

`எடப்பாடி ஆட்சி கவிழட்டும்...ஆனால்?!'  - உதயநிதி பதவியேற்பு தள்ளிப் போகும் பின்னணி

கருணாநிதி பிறந்த நாளன்றே இளைஞரணிக்கு உதயநிதியை முன்னிறுத்தியிருக்க வேண்டும். `அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பதவிக்குக் கொண்டு வரலாம்' எனக் கூறி சீனியர்கள் சிலர் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டுள்ளனர். இந்தக் காலதாமதத்தை ஸ்டாலின் குடும்பத்தில் உள்ளவர்கள் ரசிக்கவில்லை. `வரும் 21-ம் தேதிக்குள் பதவியில் அமர வைத்துவிட வேண்டும்' எனத் திட்டமிட்டு வேலை பார்த்து வருகின்றனர். தி.மு.க-வின் முதுகெலும்பாக இருந்து வந்த இளைஞரணி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் சிறப்பான செயல்பாட்டைக் காட்டவில்லை. பெயரளவுக்குக்கூட கூட்டங்களை நடத்தவில்லை. அதேநேரம், `நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதிக்காக இளைஞர் கூட்டம் திரண்டது. அவர் பதவியேற்றால் இளைஞரணி மேலும் வலுப்பெறும்' என்ற வாதங்களையும் முன்வைக்கின்றனர். ஆனால், இந்த விவகாரத்தை நிதானமாகவே கையாளும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின்" என்கின்றனர் விரிவாக. 

அ.தி.மு.க ஆட்சியின் ஸ்திரத்தன்மை விவாதப் பொருளாகி வருவதால், `சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரலாம்' என எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தி.மு.க தலைமை. `அப்படியொரு சூழல் வரும்போது, அந்த வெற்றியின் அடுத்தகட்டமாக உதயநிதியை முன்னிறுத்தலாம்' என்ற யோசனையிலும் ஆழ்ந்திருக்கிறது அறிவாலயம். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு