Published:Updated:

வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?

வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?
வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?

வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. கூட்டத்தில் பேச ஒருசிலரையும், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பு அமைதிகாக்கச் சொல்லிவிட, கூட்டம் `புஸ்ஸ்…’ ரகம்தான்.

தன் சகோதரர் மகன் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்திருப்பதால், அமைச்சர் சி.வி.சண்முகம் கூட்டத்துக்கு வரவில்லை. அதேபோல, தன் சம்பந்தியின் மறைவால் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கூட்டத்துக்கு வரவில்லை. ஒற்றைத் தலைமைதான் தீர்வு என வீடியோ வெளியிட்ட பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் உடல்நிலையைக் காரணம்காட்டி கூட்டத்துக்கு வரவில்லை. `ஒற்றைத் தலைமை’ சர்ச்சையைத் தோற்றுவித்த மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமைக் கழகம் வந்தவுடன் பலரது பார்வையும் அவர் மீது குவிந்தது. அவரிடம் கைகுலுக்கக் கூட சிலர் யோசித்து ஒதுங்கினர்.

வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?

எடப்பாடியார் பொதுச் செயலாளராகப் பதவியேற்க அழைப்பு விடுத்து, தலைமைக் கழகம் அருகே போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்ததால், பரபரப்பு நிலவியது. செங்கோட்டையனைத் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆலோசனைக் கூட்டத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் செல்போன்கள் வாசலிலேயே வாங்கப்பட்டன.

வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?

காலை 10:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தவுடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முதலாவதாக மைக் பிடித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ``எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பெரும் ஆளுமைகளால் கட்டிக் காக்கப்பட்ட இவ்வியக்கம், எதிர்க்கட்சிகள் பின்னும் சூழ்ச்சி வலையில் சிக்கிவிடக் கூடாது. என்ன பிரச்னை என்றாலும், அதை நமக்குள்தான் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஊடகங்கள் வாயிலாகப் பேசுவது தீர்வாகாது” என்றுள்ளார். இதே கருத்தைதான் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் கூறியுள்ளார்.

வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?

அப்போது ஒருசிலர் எழுந்து தங்கள் கருத்தையும் பேச முற்பட்டுள்ளனர். அவர்களை அடக்கி அமரச் சொன்ன கே.பி.முனுசாமி, ``எங்களுக்கு எல்லாம் தெரியும். பிரச்னையைப் பெரிசா ஆக்குறதுக்கு உங்கள கூப்பிடல. அமைதியா உட்காருங்க” என்று அமரச் சொல்லிவிட்டாராம். ஓ.பி.எஸ். பேசுகையில், ``என் மகனை மட்டும் எம்.பி. ஆக்கிவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் செய்திருக்கிறேன். அம்மா இருந்த காலத்திலிருந்தே, என் கட்சிப் பணி என்னவென்பது அனைவருக்கும் தெரியும்” என்றுள்ளார்.

வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?

இறுதியாக மைக் பிடித்த எடப்பாடி பழனிசாமி, ``பழசை எல்லாம் மறந்துடுங்க. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் வரப் போகுது. அதுல கவனத்தைச் செலுத்தி, கட்சி மிகப்பெரிய வெற்றியடைய நாம உழைக்கணும். உங்க கவனம் அதுல மட்டும் தான் இருக்கணும். ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்ங்கற மாதிரி, நாம இரண்டுபட்டா தி.மு.க.வுக்குதான் கொண்டாட்டம். எந்தச் சூழலிலும் அந்த நிலையை நாம கொண்டுவந்துவிடக் கூடாது. ஒத்துமையா இருந்தாதான் வெற்றி” என்று பேசியுள்ளார்.

வெடிக்காத ஒற்றைத் தலைமை சர்ச்சை!- அ.தி.மு.க கூட்டத்தில் என்ன நடந்தது?

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விளாத்திக்குளத்தில் நடைபெற்ற நன்றியறிவிப்பு கூட்டத்தில் பேசிய அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன், ``பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்ததால்தான் கட்சி தோற்றது. இல்லையென்றால் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம்” என்றார். இதே கருத்தை தனது பேட்டியில் ராஜன் செல்லப்பாவும் கூறியிருந்தார். விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ``மோடிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டோம். நாடாளுமன்றத் தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததால்தான் தோற்றோம்” என்று பேசியுள்ளார். கிட்டத்தட்ட கட்சியே பி.ஜே.பி. எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் போது, இரண்டாவது முறையாக மோடி பிரதமர் ஆனதற்கு அ.தி.மு.க. தலைமை வாழ்த்து தெரிவித்து தீர்மானம் போட்டதுதான் காமெடி.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு