Published:Updated:

`அவர் வேண்டும்..’ `அவர் மட்டும் வேண்டாம்..!’- டி.ஜி.பி நியமனத்துக்காக எடப்பாடியிடம் மோதுகிறாரா பன்னீர்செல்வம்?!

`அவர் வேண்டும்..’ `அவர் மட்டும் வேண்டாம்..!’- டி.ஜி.பி நியமனத்துக்காக எடப்பாடியிடம் மோதுகிறாரா பன்னீர்செல்வம்?!
`அவர் வேண்டும்..’ `அவர் மட்டும் வேண்டாம்..!’- டி.ஜி.பி நியமனத்துக்காக எடப்பாடியிடம் மோதுகிறாரா பன்னீர்செல்வம்?!

எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்துக்குரிய அந்த அதிகாரியை நியமிப்பதில் பன்னீர்செல்வத்துக்கு உடன்பாடில்லை. `அவரைத் தவிர யார் பெயரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யுங்கள்' எனத் தெரிவித்திருக்கிறார்.

`ஒற்றைத் தலைமை' சர்ச்சையைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாலும், `ஆட்சியில் யாருக்கு அதிகாரம்?' என்ற கேள்வி வேர்விடத் தொடங்கியிருக்கிறது. `டி.ஜி.பி நியமனம் தொடர்பாக எடப்பாடியின் சாய்ஸ் குறித்து தங்கமணி, வேலுமணி ஆகியோர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியும் சரியான சிக்னல் வரவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. `இரட்டைத் தலைமையே தொடரும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் அறிவித்துவிட்டாலும், `எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையிலான பனிப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். இந்த அதிகார மோதல், டி.ஜி.பி நியமனம் வரையிலும் படர்ந்துள்ளது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் முடிந்த பிறகு, மாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பின்போது, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழகத்தின் புதிய டி.ஜி.பி நியமனம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானாலும், இதுதொடர்பாக ஆளும்கட்சி தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 

`அவர் வேண்டும்..’ `அவர் மட்டும் வேண்டாம்..!’- டி.ஜி.பி நியமனத்துக்காக எடப்பாடியிடம் மோதுகிறாரா பன்னீர்செல்வம்?!

``ஆளுநர் சந்திப்புக்கும் டி.ஜி.பி நியமனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில அரசைப் பொறுத்தவரையில் யாரை நியமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யக் கூடிய இடத்தில் முதல்வர் இருக்கிறார். இந்த விவகாரத்தில் ஆளுநர் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கலாம். இதில், `புதிய டி.ஜி.பி யார்?' என்பதில்தான் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இந்தப் பஞ்சாயத்து டெல்லி வரை நீண்டிருக்கிறது" என விவரித்த கோட்டை வட்டார அதிகாரிகள், 

`அவர் வேண்டும்..’ `அவர் மட்டும் வேண்டாம்..!’- டி.ஜி.பி நியமனத்துக்காக எடப்பாடியிடம் மோதுகிறாரா பன்னீர்செல்வம்?!

``தற்போதைய தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. புதிய டி.ஜி.பி நியமனத்துக்காக 14 பேர் கொண்ட பட்டியலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பியது தமிழக அரசு. ஐ.பி.எஸ் சீனியாரிட்டி அடிப்படையில் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர் சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ் குமார் ஜா, தமிழ்ச் செல்வன், ஆசிஷ் பங்ரா, சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஜாங்கிட், காந்திராஜன், ஆசிஷ் பங்ரா, ரமேஷ் குடவாலா உள்ளிட்டோர் வரக் கூடிய 6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ளனர். டி.ஜி.பி நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, `6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ள ஒருவரை டி.ஜி.பி-யாக நியமிக்கக் கூடாது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, மீதமுள்ள 10 பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் திரிபாதி, சி.பி.சி.ஐ.டி தலைவர் ஜாபர் சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ் ஆகியோர் டி.ஜி.பி ரேஸில் உள்ளனர். 

`அவர் வேண்டும்..’ `அவர் மட்டும் வேண்டாம்..!’- டி.ஜி.பி நியமனத்துக்காக எடப்பாடியிடம் மோதுகிறாரா பன்னீர்செல்வம்?!

இந்நிலையில், `எப்படியாவது டி.ஜி.பி-யாக வந்துவிட வேண்டும்' என்பதற்காக முக்கிய அதிகாரி ஒருவர் கடந்த சில நாள்களாக டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். கடந்த 11-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தனர் தமிழக அமைச்சர் தங்கமணியும் வேலுமணியும். இந்தச் சந்திப்பில், டி.ஜி.பி நியமனத்துக்கு முதல்வரின் சாய்ஸாக ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை எப்படியாவது பதவிக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என டெல்லி மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளனர். இதற்குச் சரியான பதில் வரவில்லை. இந்த ரேஸில் தன்னுடைய சாய்ஸாக ஒருவரது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் அமித் ஷா. அந்தப் பெயரை ஏற்றுக் கொள்வதில் தமிழக அமைச்சர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்துக்குரிய அந்த அதிகாரியை நியமிப்பதில் பன்னீர்செல்வத்துக்கு உடன்பாடில்லை. `அவரைத் தவிர யார் பெயரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யுங்கள்' எனத் தெரிவித்திருக்கிறார். புதிய டி.ஜி.பி யார் என்பது முதல்வரின் அதிகாரத்துக்குட்பட்டது என்பதால், அவரை வழிக்குக் கொண்டு வரும் வேலையில் துணை முதல்வர் தரப்பு ஈடுபட்டு வருகிறது. நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த விவாதத்திலும் இதுதொடர்பான விவாதம் நடந்துள்ளது" என்றவர்கள், 

`அவர் வேண்டும்..’ `அவர் மட்டும் வேண்டாம்..!’- டி.ஜி.பி நியமனத்துக்காக எடப்பாடியிடம் மோதுகிறாரா பன்னீர்செல்வம்?!

``இன்னொரு பக்கம், டிசம்பரில் ஓய்வு பெற உள்ள அதிகாரிகளில் ஒருவருக்கு டி.ஜி.பி-யாக பதவி உயர்வு கிடைத்துவிட்டால், அடுத்த 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கிடைக்கும் என்பதால் கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. இதற்காக ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளிகளோடு ரகசிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள பழைய சோர்ஸுகள் மூலமாகவும் மத்திய ஆளும் அரசின் முக்கிய புள்ளிகளைச் சந்தித்து வருகின்றனர். `ஒற்றைத் தலைமை வேண்டும்' என்ற கோரிக்கையோடு, புதிய நியமனங்களையும் முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. `இந்தப் போட்டியில் வெல்லப் போவது எடப்பாடியா...பன்னீரா?' என்ற பட்டிமன்றமும் களைகட்டத் தொடங்கிவிட்டது" என்கின்றனர் சிரித்தபடியே.

`அவர் வேண்டும்..’ `அவர் மட்டும் வேண்டாம்..!’- டி.ஜி.பி நியமனத்துக்காக எடப்பாடியிடம் மோதுகிறாரா பன்னீர்செல்வம்?!

அ.தி.மு.க அரசின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. `இந்தமுறை வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது' என்பதற்காகத் தினந்தோறும் ரகசிய சந்திப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். `டி.ஜி.பி பதவி யாருக்கு ஜாக்பாட்டாக அமையப் போகிறது?' என சஸ்பென்ஸ் கலந்த ஆவலோடு காத்திருக்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்!.
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு