Published:Updated:

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?
உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

தி.மு.க ஒரு மாபெரும் இயக்கம், சந்தேகமில்லை. ஐந்துமுறை ஆட்சி நடத்தியுள்ள கட்சி. வெறும் இரண்டு எம்.எல்.ஏ-க்களை பெற்றபோதும் துவளாமல் எழுந்து நின்ற கழகம். எப்போதும் உயிர்ப்புடன் கட்சியை வைத்திருப்பவர்கள் உடன்பிறப்புகள். மாநிலம் முழுவதும் மாபெரும் கட்டமைப்பு வைத்துள்ள திராவிட இயக்கம். இத்தனை பெருமையுடன் ஜெயலலிதா இல்லாத சூழலும் ஆளுங்கட்சி மீதான வெறுப்பும் இப்போது சேர்ந்துகொள்ள நம்பிக்கையோடு சொல்கிறார் ஸ்டாலின்...' எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் தி.மு.க இரட்டைச்சதம் அடிக்கும்' என்று. நம்புவோமாக..!

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், குழிபறித்த கட்சிகளைக் கூட வைத்துக்கொண்டே இவ்வளவு பெரிய வெற்றியை ஸ்டாலின் பெற்றிருப்பது, நிச்சயம் முத்திரை வெற்றி. இணைய பாணியில் சொன்னால்... ‘தரமான சம்பவம்’! இதுபோக, தலித்தியம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என எல்லா முற்போக்கு தத்துவங்களையும், ஒரே கப்பலில் ஏற்றி கரை சேர்த்திருக்கிறார் அவர். 

இருந்தும் இடைத்தேர்தலில் கோட்டை விட்டிருக்கிறது தி.மு.க. உண்மையில் அது இடைத்தேர்தலே அல்ல. மினி சட்டமன்றத் தேர்தல். ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் தேர்தலாகவும் அது இருந்தது. ஆனால், அதை மட்டும் ஏனோ அசிரத்தையோடு கையாண்டார்கள். ஜெயித்தார்கள்தான். ஆண்டிபட்டி, பெரியகுளம் என அ.தி.மு.க கோட்டையிலேயே கொடிநாட்டினார்கள்தான். ஆனால், கோட்டையைப் பிடிப்பதில்தான் கோட்டைவிட்டார்கள். ஸ்டாலினிடம் கேட்டால்  'இடைத்தேர்தலில் வென்றது பணநாயகம்' என்பார். அப்படியே இருக்கட்டும். அதைத்தடுக்காதது யார் தவறு?

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு காமெடி வந்தது. ரெண்டு சின்ன பிள்ளைகள் பண்ணிய காமெடி அது. ஒரு பையன் அரசியல்வாதி. ஒரு பொண்ணு அரசியல் கத்துக்கொடுக்கும் பயிற்சியாளர். அந்தப் பையன் கேட்பான், 'மேடம்... தேர்தல்ல ஜெயிச்சா என்ன சொல்றது?' அந்தப் பெண் சொல்வாள், 'ஜனநாயகம் வென்றதுனு சொல்லு...' அதே பையன் திரும்பக் கேட்பான் 'அப்போ தோத்துப்போனா மேடம்?' அதே பெண் திரும்பச் சொல்வாள், 'பணநாயகம் வென்றதுனு சொல்லு...' இப்படித்தான் இருக்கிறது ஸ்டாலினின் பதில்.

நவீனகாலத் தேர்தல்களில் பணம் ஒரு முக்கிய வில்லன். அதையும் வீழ்த்த வியூகம் வகுக்க வேண்டியதே ஒரு கதாநாயகனின் பணி. அப்படியில்லை என்றால் அவனெப்படி கதாநாயகன், அதென்ன பெரியகட்சி? அதெல்லாம் தேர்தல் ஆணையத்தின் வேலையென்று சொல்லிக் கடந்துவிடலாம். ’ஆணையம் செய்யாது’ என்று தெரிந்தபின் அதைத்தடுக்க வேண்டியவன்தான் எதிர்க்கட்சிக்காரன்.

'தேர்தல் ஆணையம் கேட்காது. அரசு கேட்காது. ஊடகம் கேட்காது. ஆனால், எதிர்க்கட்சிக்காரன் கேட்பான்' எனக் கிளம்ப வேண்டும். இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், அடுத்த தேர்தலிலும் ‘பணம் கொடுத்து வென்றுவிட்டார்கள்’ என்று சாக்குச் சொன்னால், உடன்பிறப்புகள் உயிரையே விட்டுவிடுவார்கள் அல்லது ஓட்டமெடுத்துவிடுவார்கள்.

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

அப்புறம்... ஸ்டாலின் எல்லா இடங்களிலும் ஒன்றைச் சொல்லி வருகிறார், 'முற்கால தவறுகளை திருத்திக் கொள்கிறோம்' என்று. நல்ல முடிவு! இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லுகிறார், 'தவறு செய்யாத மனிதர்களே இல்லை'. உண்மை! மறப்பதும் மன்னிப்பதும் தமிழக மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. மறக்கலாம். மன்னிக்கலாம்! ஆனால் `எந்தத் தவறு, எந்த மனிதர்கள்’ என்பதைச் சொன்னால் மன்னிப்பதற்கும், மறப்பதற்கும் எளிதாக இருக்கும். அதைச் சொல்லவே மாட்டேன் என்கிறார் ஸ்டாலின். பொத்தாம் பொதுவாக 'தவறு... தவறு...' எனச் சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? கணக்கு வழக்கில்லாமல் நிலத்தை அபகரித்ததா, சட்டம் ஒழுங்கை சடுகுடு விளையாடவிட்டதா, எல்லா மட்டங்களிலும் 'அதிகார மையங்கள்' போட்ட ஆட்டமா. இவையெல்லாம் திரும்ப நிகழாது என்பதற்கு என்ன உறுதி... அப்போது இருந்தவர்கள்தானே இப்போதும் இருக்கிறார்கள்!

நாளைக்கே ஆட்சியமைத்ததும் ‘நிலம் என் உரிமை’ என்று கே.என்.நேரு மீசையை முறுக்குவாரே... பொன்முடியும் எ.வ.வேலுவும் உயர்கல்வியிலும் உணவுத்துறையிலும் உழுது விளையாடுவார்களே... வீரபாண்டியின் வாரிசுகள் வீதிகளையெல்லாம் விலை பேசுவார்களே... இவற்றையெல்லாம் ஸ்டாலினால் தடுக்க முடியுமா. குறை சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் ஒரு சொல்லேனும் சொல்லாமல் ஸ்டாலின் முன் செல்ல முடியாது. இவற்றை விளக்கிச் சொன்னால்தான் 'தி.மு.க திருந்திவிட்டது. மறக்கவும் மன்னிக்கவும்' என்று சொல்ல முடியும். இல்லையென்றால், 'நான் திருந்திவிட்டேன்' என்று, ஸ்டாலின் மட்டும் சொல்லிக்கொள்ளலாம். மக்கள் நம்பமாட்டார்கள்.

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

இன்னொரு புறம், தமிழக 'அறிவாளி' அமைச்சர்களை விட்டு விளாசுகிறார் ஸ்டாலின். 'பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுகிறார்கள்' என்று உசுப்பேற்றுகிறார்கள் உடன்பிறப்புகளும். அவர்கள் அப்படியே திருப்பி விடுகிறார்கள், 'ஸ்டாலின் உளறவில்லையா' என்று. இது நிச்சயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதே. 'டிசம்பரில் குடியரசு தினம்' என்று சொன்னது ஒருவிதம் என்றால், 'அந்த ஸ்டாலின் இறந்தது மார்ச் 1 என இந்த ஸ்டாலின் சொல்கிறேன்' என்று சொல்லாமல் சொன்னது வேறுவிதம். இது ஒன்றும் பெரிய குத்தமல்லதான். ஆனால், இப்படிப் பேசிவிட்டு அப்படிப் பேசுகிறவர்களை எப்படி விமர்சிக்க முடியும்? இந்த மாதிரியான இடத்தை, ஸ்டாலின் இனிமேலும் அளிக்காமல் இருப்பது நல்லது. அப்புறம், அமைச்சர்களின் உளறல்களை கலாய்க்க முடியாமல் போகும். இருக்கும் ஒரே பொழுதுபோக்கும் இல்லாமலாகும்.

அப்படியே, 'பா.ஜ.க-வோடு இனி எப்போதும் கூட்டணியில்லை. ஒருமுறை தவறு செய்துவிட்டோம். இனிமேல் செய்ய மாட்டோம் ' என்றும் சொல்கிறார் ஸ்டாலின். கூடவே ‘சாடிஸ்ட், திருடர்கள்’ என்றும் போட்டுப் பொளக்கிறார். என்ன செய்வது... நம்ப வேண்டியதுதான். அதையும் மீறி கூட்டணி வைத்தால், அந்த இரண்டு வார்த்தைகளை மக்கள் அப்படியே திருப்பிச் சொல்வார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை, சரி. இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பி.ஜே.பி ஆட்சியிருக்கும். எப்போது சட்டமன்றத்தேர்தல் வந்தாலும் தி.மு.க ஜெயிக்கலாம். அப்போது ‘இணக்கமாக இருக்கிறோம்’ என்ற பட்டியலில் தி.மு.க-வும் சேர்ந்துவிடக்கூடும். ஏனிந்த சந்தேகமென்றால், 'காங்கிரஸோடும் இனி எப்போதும் கூட்டணியில்லை' என்று சத்தியம் செய்த கட்சிதான் தி.மு.க. இவையெல்லாமும் கண்முன்னால் வந்துபோகின்றன, அதனால்தான்!

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

பா.ஜ.க எதிர்ப்பில் ஸ்டாலின் உறுதியாகத்தான் இருக்கிறார் போலிருக்கிறது. ஒரு தோழர் அண்மையில் சொன்னார், ‘இந்தியாவில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே ஆர்.எஸ்.எஸ் தாக்கத்தை உள்வாங்கி வருகின்றன’. யோசித்துப் பார்த்தால், அவர் சொல் உண்மையென்றே தோன்றுகிறது. ராமர் கோவிலை பா.ஜ.க மட்டுமா ஆதரிக்கிறது, காங்கிரஸூம் ஆதரிக்கத்தான் செய்கிறது. மாயாவதியும் அகிலேஷூம் ‘உயர்சாதிகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை’ போட்டிபோட்டுக்கொண்டு  ஆதரவளிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறார்கள். எல்லோரும் இப்படியிருக்க, தி.மு.க-வை அதன் தனித்துவத்தோடு ஸ்டாலின் இன்னும் தக்கவைத்துக் கொண்டிருப்பதை, பெரிய சாதனையாகவே பார்க்க வேண்டும். ஸ்டாலினுக்கு கருணாநிதி எதை அளித்துச் சென்றாரோ இல்லையோ, திராவிட தீரத்தை அளித்துச் சென்றிருக்கிறார்!

இப்போதுதான் மெயின் மேட்டர்! அதேதான்... கருணாநிதி ஸ்டாலினை கொண்டுவந்தார். முதல் சியர்ஸ். ஸ்டாலின் உதயநிதியைக் கொண்டு வருகிறார். ரெண்டாவது சியர்ஸ். அடுத்து உதயநிதி இன்பநிதியைக் கொண்டு வருவார். ஆக மொத்தம், மூணு சியர்ஸ்! 'தி.மு.க ஒன்றும் சங்கரமடமல்ல'தான். ஆனால், அது 'சந்ததி மடம்' ஆகிக்கொண்டிருக்கிறது. ஸ்டாலினை நோக்கி 'வாரிசு... வாரிசு...' எனச் சொல்லிய போதெல்லாம் ஒரேயொரு வார்த்தை மட்டும்தான் ஸ்டாலினைக் காத்தது. 'உழைப்பு'! கதாநாயகடு என்றொரு தெலுங்குப்படம். பாலகிருஷ்ணா நடித்தது. என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுப் படம். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு அரசியல் தலைவரின் பெயர்மட்டும்தான் சொல்லப்படும்... ஸ்டாலின்! காரணம், அவசரநிலை காலத்தில் அவர் அனுபவித்த வேதனைகள். அண்மையில் ஜெகன் மோகன் ரெட்டிகூட, ‘ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும்’ என்று உருகினார். எதனால்? இத்தனை ஆண்டு அரசியல் அனுபவமும் இவ்வளவு உழைப்பும் கொண்டவர் உச்சப்பதவியை இன்னும் அடையவில்லையே என்ற ஏக்கம் அது.

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

சும்மாயில்லை. கோபாலபுரத்து தெருவில் இளைஞர் இயக்கம் ஆரம்பித்தது முதல், காவிரிக்கரை நடைப்பயணம் வரை, ஓடிக்கொண்டே இருக்கிறார், ஸ்டாலின். உண்மையில், 'தளபதி இன்னும் தலைவர் ஆகாமல் இருக்கிறாரே' என்று, கருணாநிதி இருந்தபோதே நிறைய பேர் கவலைப்பட்டார்கள். ஆனால், உதயநிதி எந்த அடிப்படையில் முன்னே வருகிறார்? 'தளபதியின் தனயன்' என்ற அடிப்படையில் மட்டும்தானே! அடுத்ததாக என்ன... அடுத்த தளபதி, அடுத்த தலைவர்... அது தானே, மறுக்க முடியுமா. இப்போதெல்லாம் தி.மு.க-வின் வார்டு கூட்டங்களில்கூட ‘மூன்றாம் கலைஞர்’ அடைமொழியோடு சிரித்துக்கொண்டிருக்கிறார் உதயநிதி. அப்போது, ஸ்டாலினுக்கு துரைமுருகன் வக்காலத்து வாங்கியதில் நியாயம் இருந்தது. ஏன் மக்களே ஸ்டாலினை வெறும் கருணாநிதியின் மகன் என பார்க்கவில்லை. ஆனால், உதயநிதிக்கு மா.சுப்ரமணியனும் அன்பழகனும் வக்காலத்து வாங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது? 

விஷயம் பெரிதாகிறது. ‘உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக்க வேண்டும்’ என்று, ஊருக்கு ஊர் தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது, ரசிகர் மன்றத் தீர்மானமாக இருந்தால் பிரச்னையில்லை. கட்சிக்குழுக்களின் தீர்மானமாக அல்லவா அது இருக்கிறது?! தி.மு.க-வில் ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி, உதயநிதி என லிஸ்ட் அதுபாட்டுக்கு போய்க்கொண்டேயிருக்கிறது. அடுத்ததாக, பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கும் இன்பநிதிக்கு பதவி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை!

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

'உதயநிதிக்கு இன்னும் பதவி கொடுக்கவில்லையே’ என்று எவரும் எகிற வேண்டாம். உதயநிதி நகர ஆரம்பித்திருப்பது அதை நோக்கித்தான். அது தெளிவு! அப்படியில்லையா... ‘எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் கட்சியில் பதவிக்கு வரமாட்டேன்’ என்று, பத்திரத்தில் எழுதி கையெழுத்துப் போடச் சொல்லுங்கள் அவரை. செய்தால் அவர் செயல்வீரன், உண்மையான உடன்பிறப்பு!

எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், உதயநிதி 'நான் பிறக்கும்போதே அரசியல்வாதி என்று சொல்வதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அன்புள்ள உதயநிதிக்கு... `ஹலோ பாஸ், நீங்கள் பிறக்கும்போதே அரசியல்வாதி அல்ல. அரசியல்வாதிக்குப் பிறந்தவர், அவ்வளவுதான்’! விட்டால், பிறக்கும்போதே 'அம்மா...' என்று அழாமல், 'அண்ணா...' என்று அழுதவன் நான்' என்பீர்கள்போல. கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் மாட்லாட வேண்டும் பாஸ்!

இதைவிட கொடுமை இன்னொன்று. இப்போதல்ல. சிலகாலம் முன்பு நடந்தது அது. 'உதயநிதியின் அரசியல் வருகை பற்றிச் சொல்லுங்கள்' என்று ஸ்டாலினிடம் கேட்டார்கள். அவர் செப்பிய பதில் இது... 'அதை அவரிடமே கேளுங்கள்'. இதுவரைக்கும் உதயநிதியின் அரசியல்வருகை குறித்து ஸ்டாலின் சொல்லியிருக்கும் ஒரே பதில், ‘அவரிடமே கேளுங்கள்’ என்பது மட்டும்தான். என்னது இது... சுத்தி விளையாடுவதற்கு இதுவா நேரம்? இருக்கிற பிரச்னையில் ஸ்டாலினுக்கு இது தேவையில்லாதது.

உதயநிதி 'மூன்றாம் கலைஞர்’ என்றால், இன்பநிதி 'நான்காம் கலைஞரா...’ யாரிடம் கேட்பது ஸ்டாலின்?

அறிக... இயக்கம் ஆரம்பித்து வளர்ந்தெழுந்த ஸ்டாலினுக்கும், இடுப்பைப் பிடித்து டான்ஸ் ஆடிவிட்டு வளரத்துடிக்கும் உதயநிதிக்கும் ஆறல்ல, ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு. கட்சியென்பது மா.சுப்ரமணியனும் அன்பழகனும் மட்டுமல்ல. குமரிக்கடலில் மீன்பிடிக்கும் குமரேசனும், திருச்சி மலைக்கோட்டையில் மாலை கோக்கும் மயிலம்மாவும், வேலூர் வெயிலில் ஐஸ் வண்டி தள்ளும் வேலப்பனும் சேலம் ஜவுளிக்கடையில் சேலை விற்கும் செண்பகமும் சேர்ந்ததுதான் கட்சி. ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டியது அவர்களுக்கே. அதாவது, அடிமட்டத் தொண்டர்களுக்கு. சொல்வாரென நம்புவோம்.

இதுமட்டுமல்ல. இன்னும் நிறையவே இருக்கிறது. ஆட்சியில் இல்லாத கட்சியை இவ்வளவு அலச வேண்டியதாக இருப்பதே, தி.மு.க-வின் முக்கியத்துவத்தை உணர்த்திவிடுகிறது. ஸ்டாலின் ஒன்றை முக்கியமாக உணர வேண்டும். ஆட்சியில் இல்லாதபோது 'அமுதச்சொல்' பேசுவது, ஆட்சியில் அமர்ந்தால் 'ஆலகாலச் செயல்' காட்டுவது எல்லாம் இனியும் வேண்டாம். ஆட்சியைப் பிடிக்க, பிடித்த ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்க, அடுத்தடுத்தும் ஆட்சியில் அமர, தகிடுதத்தங்கள் செய்ய வேண்டிய தேவையில்லை. தரமான ஆட்சி தந்தாலே போதும்!

அடுத்த கட்டுரைக்கு