Published:Updated:

`நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்!'  - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி

` 23-ம் தேதி கவுண்டிங் (வாக்கு எண்ணிக்கை) முடிந்த பிறகு அதை மறந்துவிட்டேன். ஏன் தோற்றோம், எதற்காகத் தோற்றோம், என்ன காரணம் என்றெல்லாம் அதைப் பற்றியே நினைத்து வருந்திக் கொண்டிருக்கக் கூடாது. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்'.

`நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்!'  - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி
`நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்!'  - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ம.க நடத்திய கூட்டத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். `கிருஷ்ணகிரியைப் போன்ற நாம் வலுவாக இருக்கும் மாவட்டத்திலேயே குறைவான வாக்குகளை வாங்கியிருக்கிறோம். நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்' எனக் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ராமதாஸ். 

திண்டிவனம், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அன்புமணி, மாநிலத் தலைவர் கோ.க.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உட்பட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

`நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்!'  - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி

தொடக்கத்தில் அமைதியாகப் பேச்சைத் தொடங்கிய ராமதாஸ், ` ஒவ்வொரு தொகுதியிலும் உறுப்பினர் சேர்க்கையை நாம் சரியாகச் செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பே உறுப்பினர் சேர்க்கையை முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். கட்சிக்காக உண்மையாக உழைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் ஏன் தோற்றோம் என்பது குறித்து செயற்குழுவைக் கூட்டி யாரும் விவாதிக்கவில்லை. இனியாவது அதைச் செய்யுங்கள். நமக்கு எதிர்காலம் இருக்கிறது. சுணக்கமாக இருக்க வேண்டாம்' என்றவர், 

` கிருஷ்ணகிரி நமக்கு வலுவான மாவட்டம். அங்கு தலைவர்கள் எல்லாம் பிரசாரம் செய்தார்கள். ஆனால், பொறுப்பாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை. மாவட்டச் செயலாளர் நியமனம் என்றால் மட்டும் அனைவரும் வந்து நிற்கிறீர்கள். எனக்கு வேணும், உனக்கு வேணும் என ஆசைப்படுகிறீர்கள். ஸ்ட்ராங்கான மாவட்டத்திலேயே நம்மால் ஓட்டு வாங்க முடியவில்லை. முதலில் கட்சி வேலையைச் சரியாகச் செய்யுங்கள். உங்களால் முடியவில்லை என்றால், ஒதுங்கிக்கொள்ளுங்கள். வேறு யாரையாவது நியமித்துக்கொள்கிறோம்' எனக் கொதித்தவர், 

`நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்!'  - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி

`கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட தி.மு.க வெற்றி பெறவில்லை. இப்போது வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டனர். விரைவில் மாற்றம் வரும். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி பெறுவோம். இதே கூட்டணியில்தான் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். உங்களில் பல பேர் நல்ல பதவிகளில் அமரப் போகிறீர்கள்" என நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார். 

`நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்!'  - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி

இதையடுத்துப் பேசிய மருத்துவர் அன்புமணி, `23-ம் தேதி கவுண்டிங் (வாக்கு எண்ணிக்கை) முடிந்த பிறகு அதை மறந்துவிட்டேன். ஏன் தோற்றோம், எதற்காகத் தோற்றோம், என்ன காரணம் என்றெல்லாம் அதைப் பற்றியே நினைத்து வருந்திக் கொண்டிருக்கக் கூடாது. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அந்தத் தோல்வியைப் பற்றியே நினைத்துக்கொண்டு கவலைப்படக் கூடாது. அதைக் கடந்து போய்விட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய, மாவட்ட செயற்குழுவைக் கூட்டி தோல்வி குறித்து ஆய்வு நடத்த வேண்டும். எந்தெந்த வார்டுகளில் எவ்வளவு வாக்குகள் வந்தன. எவ்வளவு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. காரணம், அரக்கோணத்தில் நமது கட்சிக்கு 5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், 3 லட்சம் வாக்குகள்தான் வந்து சேர்ந்தன. ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 பேர் கொண்ட டீமை உருவாக்க வேண்டும். அவர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்களை நடத்த வேண்டும்' எனப் பேசி அமர்ந்தார். 

`நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்!'  - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி

`நம்மை நாமே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர். ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இப்படிப் பொதுவாகப் பேசுவதால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் வீசிய அலையில் தி.மு.க வெற்றி பெற்றது. இதில், தொண்டர்கள் என்ன செய்வார்கள்?' என்ற ஆதங்கக் குரல்களையும் எழுப்புகின்றனர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

Vikatan