Published:Updated:

`ராஜ்ய சபா எம்.பி-யா... எம்.எல்.ஏ-வா?!' - கே.பி.முனுசாமியின் நெக்ஸ்ட் பிளான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`ராஜ்ய சபா எம்.பி-யா... எம்.எல்.ஏ-வா?!' - கே.பி.முனுசாமியின் நெக்ஸ்ட் பிளான்
`ராஜ்ய சபா எம்.பி-யா... எம்.எல்.ஏ-வா?!' - கே.பி.முனுசாமியின் நெக்ஸ்ட் பிளான்

`ராஜ்ய சபா எம்.பி-யா... எம்.எல்.ஏ-வா?!' - கே.பி.முனுசாமியின் நெக்ஸ்ட் பிளான்

`ராஜ்ய சபா எம்.பி-யா... எம்.எல்.ஏ-வா?!' - கே.பி.முனுசாமியின் நெக்ஸ்ட் பிளான்

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்த புயல் சற்று ஓய்ந்துள்ள நிலையில், மாநிலங்களவை எம்.பி. ரேஸ் சூடுபிடித்துள்ளது. வரும் ஜூலை 24-ம் தேதியுடன், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இவர்களில் அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். டி.ராஜா கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் ஜெயித்த கனிமொழி, தன் மாநிலங்களவை எம்.பி. பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டார். எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தலா மூன்று எம்.பி.க்கள் வர வேண்டும். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கும் `சீட்’ ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் யாருக்கு எம்.பி. யோகம் அடிக்கப்போகிறது என்பதுதான் ராயப்பேட்டை வட்டாரத்தில் சூடாக விவாதிக்கும் தகவல்.

`ராஜ்ய சபா எம்.பி-யா... எம்.எல்.ஏ-வா?!' - கே.பி.முனுசாமியின் நெக்ஸ்ட் பிளான்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், ``எம்.பி.க்கள் தேர்வு முறைப்படி, ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதன்படி பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. இருவரும் பிரச்னை இல்லாமல் ஆளுக்கு மூன்று எம்.பி.க்களை பிரித்துக்கொள்ளலாம். ஜூன் இறுதியில், மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு முறைப்படி வெளியாக வாய்ப்புள்ளது. ஜூலை 10-ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகளை முடித்து, தேர்வானவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்குத் தமிழக அரசு அனுப்ப வேண்டும்.

அ.தி.மு.க.வுக்கு வரும் மூன்று எம்.பி.க்களில், ஒன்றை பா.ம.க.வுக்குக் கொடுப்பது என ஏற்கெனவே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. தர்மபுரி தொகுதியில் அன்புமணி தோல்வியடைந்துள்ளதால், பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் ‘சீட்’ அவருக்குச் செல்லவே வாய்ப்பு அதிகம். மீதமுள்ள இரண்டில் ஒன்றை எடப்பாடியும், மற்றொன்றை ஓ.பி.எஸ்ஸும் பிரித்துக்கொள்வார்கள் எனத் தெரிகிறது. தொடக்கத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமிக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

`ராஜ்ய சபா எம்.பி-யா... எம்.எல்.ஏ-வா?!' - கே.பி.முனுசாமியின் நெக்ஸ்ட் பிளான்

ஏற்கெனவே கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையே அவர் விரும்புகிறார். எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். இதையெல்லாம் யோசித்துத்தான், மாநிலங்களவை எம்.பி. ரேஸிலிருந்து கே.பி.முனுசாமி விலகிவிட்டார். ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த ரபி பெர்னார்ட், முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன” என்றனர்.

`ராஜ்ய சபா எம்.பி-யா... எம்.எல்.ஏ-வா?!' - கே.பி.முனுசாமியின் நெக்ஸ்ட் பிளான்

கம்யூனிஸ்ட் கட்சியின் ‘பொலிட்பியூரோ’ வழியில், அ.தி.மு.க.விலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை 15 நாள்களுக்குள் உருவாக்க வேண்டுமென்று ஓ.பி.எஸ். கூறியுள்ளாராம். நேற்று நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இனி வேட்பாளர் தேர்வு, கூட்டணி விவகாரம், கொள்கை கோட்பாடு என சகலத்தையும் இந்த வழிகாட்டுதல் குழுதான் தீர்மானிக்குமாம். இக்குழு அமைக்கப்பட்டால் ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு வேலை இருக்காது என ஓ.பி.எஸ். காய் நகர்த்தியுள்ளாராம். இச்சூழலில், கே.பி.முனுசாமியின் பணி கட்சிக்கு அதிகமாகத் தேவைப்படும். அதனால், அவரை டெல்லிக்கு அனுப்பாமல் இங்கேயே வைத்திருக்கத் தலைமையும் விரும்புகிறதாம். தலைமையின் அன்புக் கட்டளைக்கு கே.பி.முனுசாமியும் சம்மதம் சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு