Election bannerElection banner
Published:Updated:

`ஒப்பற்ற அரசன் ராஜராஜ சோழன்; யாரும் விமர்சிக்காதீங்க!' - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகப் பேசியதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒப்பற்ற அரசனை இதுபோன்று யாரும் விமர்சனம் செய்யாதீர்கள் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

`ஒப்பற்ற அரசன் ராஜராஜ சோழன்; யாரும் விமர்சிக்காதீங்க!' - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ``ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஜெயங்கொண்டம் உயர்தர நிலக்கரி கிடைக்கும் பகுதியாக இருந்த காரணத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு முறையாக தகுந்த இழப்பீடு தொகையைக் கொடுத்து மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒரு அனல் மின் நிலையத்தை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம் மழை பொய்த்துவிட்டது. அதன் காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது தமிழக அரசைப் பொறுத்தவரையில், பல பகுதிகளுக்குத் தண்ணீர் கொடுக்கச் சிறந்த முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போர்க்கால அடிப்படையில் இந்தப் பணியை அவர்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

`ஒப்பற்ற அரசன் ராஜராஜ சோழன்; யாரும் விமர்சிக்காதீங்க!' - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திரைப்பட இயக்குநர் பா இரஞ்சித் ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகப் பேசியது ஏற்புடையது அல்ல. அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற கருத்துகளை யாரும் ஆதாரம் இல்லாமல் பேசாதீர்கள். இதுபோன்ற கருத்துகளைப் பேசி தன்னிகரற்ற அரசனை மங்கச் செய்யாதீர்கள்'' என்றார்.

மேலும், அதோடு மக்களிடம் தவறான புரிதல் சென்றாகிவிட்டது. பொய்யான தகவலை தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மக்களிடம் கூறியது. அதைத் தமிழக மக்கள் முழுமையான புரிதல் இல்லாமல் நம்பியதன் காரணமாகத்தான் இந்தக் கூட்டணி வெற்றி பெறவில்லை எனக் குறிப்பிட விரும்புகிறேன். மேலும், காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையை எல்லாம் இந்தியா முழுவதும் இந்திய மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்" எனக் கூறினார்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு