Published:Updated:

சோழமண்டலமே அழியும்போது சோழன் வரலாறு முக்கியம்தானா- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சோழமண்டலமே அழியும்போது சோழன் வரலாறு முக்கியம்தானா- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
சோழமண்டலமே அழியும்போது சோழன் வரலாறு முக்கியம்தானா- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

சோழமண்டலமே அழியும்போது சோழன் வரலாறு முக்கியம்தானா- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இன்றைய நிலைமையில் மத்திய அரசு தமிழகத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. தமிழின் மீது இவர்களுக்கு ஏன் இத்தனை காட்டம் என்று தெரியவில்லை. தமிழை அழிப்பதற்காக அறிக்கை வெளியிட்டுள்ளதை நினைக்கும்பொழுது கேட்டவுடன் நெஞ்சம் பதைபதைக்கிறது'' என்று திருவாரூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது கண்டனத்தைத் தெரிவித்தார் .

சோழமண்டலமே அழியும்போது சோழன் வரலாறு முக்கியம்தானா- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளிடம் பேசும்போது ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

``மாநில மொழிகளை அழிப்பதற்காக மத்திய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மீது ஏன் இத்தனை காட்டம் என்று தெரியவில்லை. தமிழ் மொழியை அழிப்பதற்காகவே இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு வேண்டுமென்றே தமிழக மக்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல்'' என்று குறிப்பிட்டார். ``மாநில கல்விக் கொள்கை பற்றி கேட்டபொழுது அவர் கூறியது, ``இன்றைய கல்விக் கொள்கை அடுத்த தலைமுறையைக் காப்பதுபோல் அல்லாமல் இந்தத் தலைமுறை இப்படியே அழிய விடும் நோக்கில்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவனைச் சிந்திக்கச் செய்வதே சிறந்த கல்விக் கொள்கை. ஆனால், இன்றைய நிலைமை அப்படி ஒரு கல்விக் கொள்கையை வடிவமைக்கவில்லை. நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் முக்கியமாக இருக்கின்றது. இன்றைய நிலைமையில் தமிழகத்தைப் பொறுத்தவரை தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னையாக இருந்து வருகிறது. தண்ணீர் இல்லையெனில் இவ்வுலகில் வாழ இயலாது. அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உதாசீனப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். இந்த மாநில அரசும் அதைச் சேகரித்து வைப்பதற்கான எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை. சென்ற ஆண்டு அவ்வளவு நீர் நமக்கு கிடைத்தபொழுதும் முக்கொம்பு அணை உடைந்ததால் அவ்வளவு நீரும் கடலில் சென்று கலந்தது. வானிலை மையம் அறிவித்தபடி வறட்சி வரப்போகிறது என்று தெரிந்தும் அதற்கான முன் நடவடிக்கைகளை எடுக்காத இந்த அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும். இருக்கின்ற முதல்வரும் மக்களைப் பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் கர்நாடக அரசுக்குத் துணை போவதுபோல் மழை வந்தால் தண்ணீர் திறக்கப்படும் என்று ஒரு பொறுப்பற்ற பதிலை மக்களுக்குத் தெரிவிக்கிறார்.

சோழமண்டலமே அழியும்போது சோழன் வரலாறு முக்கியம்தானா- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

இன்றைக்குச் சென்னையில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இப்படியே போனால் இன்னும் சில காலங்களில் தமிழ்நாடு அனைத்தும் சுடுகாடாக மாறி, மக்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிவிடும். சொர்க்கபூமியாக இருந்தது இன்றைக்கு பாலைவனமாக மாறுவதை நினைக்கும்பொழுது, இந்த அரசும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்றைய பிரச்னையை பார்க்காமல் காவேரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதாக கூறுகின்றனர்'' என்றவரிடம் ராஜராஜசோழன் பற்றிய பா.இரஞ்சித் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சோழமண்டலமே அழியும்போது சோழன் வரலாறு முக்கியம்தானா- கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

``இன்றைக்கு எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்பொழுது வரலாற்றைத் தோண்டி இதுபோன்ற பிரச்னைகளைப் பேசுவது மிகவும் அபத்தமான செயல், வேடிக்கையான ஒன்று. ஒருவரின் கருத்து அவர் எவ்வாறு வேண்டுமானாலும் குறிப்பிடலாம். ஆனால், ஒரு திரைப்பட இயக்குநர் கூறிவிட்டார் என்பதற்காக இன்றைய தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளை விட்டுவிட்டு இதையே இன்றைக்குப் பெரிய பிரச்னையாக மக்களும், அரசும் பேசிக்கொண்டிருக்கிறது. ராஜராஜ சோழன் போன்ற பல மன்னர்கள் இந்த சோழமண்டலத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனினும் இந்தப் பண்பாடு, கலை, அறிவியல் ஆகியவற்றில் அவர்கள் மேல்நிலை அடைந்திருந்தார்கள் என்றாலும் உடைமை வார்டுகளுக்கான ஆட்சியாகத்தான் மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. அந்தக் காலத்தில் சாதாரண எளிய மக்களின் மீது மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என்று எல்லாவற்றுக்கும் வரிகள் திணிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 33 வரிகள் எளிய மக்களின் மீது வைக்கப்பட்டிருந்தது. மன்னர் என்பதால் அவர் செய்த அனைத்தும் சரியாக இருந்துவிடாது. அந்தக் காலத்திலும் மக்கள் பல்வேறு பிரச்னைகளையும் சந்தித்தனர். 33 வகை வரிகளைச் சுமத்தி கொடுமை செய்யும் ஆட்சியாகவும் இருந்து இருக்கிறது. எனவே, ரஞ்சித் கூறியது எவ்வித தவறும் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு