Published:Updated:

`ராஜன் செல்லப்பா பேசியதே திட்டமிட்ட நாடகம்தான்!' - சசிகலா வருகையை விவரிக்கும் புகழேந்தி

விகடன் விமர்சனக்குழு
`ராஜன் செல்லப்பா பேசியதே திட்டமிட்ட நாடகம்தான்!' - சசிகலா வருகையை விவரிக்கும் புகழேந்தி
`ராஜன் செல்லப்பா பேசியதே திட்டமிட்ட நாடகம்தான்!' - சசிகலா வருகையை விவரிக்கும் புகழேந்தி
`ராஜன் செல்லப்பா பேசியதே திட்டமிட்ட நாடகம்தான்!' - சசிகலா வருகையை விவரிக்கும் புகழேந்தி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து பலரும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. அக்கட்சியிலிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் வெளியேறுகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இரண்டு நாள்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் கட்சிலிருந்து வெளியேறி அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோல டிசம்பர் மாதத்துக்குள் சசிகலா நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சிறையிலிருந்து வெளியே வருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஓசூர் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட புகழேந்தியிடம் பேசினோம். 

`ராஜன் செல்லப்பா பேசியதே திட்டமிட்ட நாடகம்தான்!' - சசிகலா வருகையை விவரிக்கும் புகழேந்தி

அ.தி.மு.க-வில் தற்போது பேசப்படும் `ஒற்றைத் தலைமை’ குறித்து உங்கள் பார்வை?

 ``ராஜன் செல்லப்பா பேசியது திட்டமிட்ட நாடகம். ஒற்றைத் தலைமை என்று கூறி ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளனர். ஊடகங்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சிதான் இது. ஏனென்றால் மறுநாளே இவர்கள் சமாதானம் ஆகியுள்ளனர். இந்த அ.தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 12 சதவிகிதம் வாக்குகளைப்பெற்றுள்ளது. கூட்டணி சேர்ந்ததில் 6 சதவிகிதம் கூடுதலாக கிடைத்துள்ளது. அதன்படி 18 சதவிகிதம் மட்டுமே கூட்டணியுடனான அவர்களின் மொத்த வாக்குச் சதவிகிதம். ஜெயலலிதா 60 சதவிகிதம் ஓட்டுகளை வாங்கிக்கொடுத்து 37 இடங்களில் கடந்த முறை ஜெயிக்க வைத்தார். இவர்களின் தோல்விக்கு மோடியின் தலைமைதான் காரணம். ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணியில்லாமல் தனியாக நின்று, குறிப்பிடதக்க வாக்குகளைப்பெற்றுள்ளது. தேர்தல் தோல்வியை மக்கள் மறக்க வேண்டும் என்பதால்தான் ராஜன் செல்லப்பாவை வைத்து இப்படிப் பேச வைத்திருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட நாடகம். ஒற்றைத்தலைமை என்று பார்த்தால் சசிகலாதான். ஒற்றைத்தலைமைதான் ஆட்சி அமைக்கச் செய்தது. அந்த ஒற்றைத்தலைமைதான் அதிகாரத்தைக் கொடுத்தது. அந்த ஒற்றைத்தலைமைதான் அவர்களுக்குக் கட்சியைக்கொடுத்தது. சசிகலா என்ற ஒற்றைத்தலைமை தவிர, இவர்களின் ஒற்றைத்தலைமையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

`ராஜன் செல்லப்பா பேசியதே திட்டமிட்ட நாடகம்தான்!' - சசிகலா வருகையை விவரிக்கும் புகழேந்தி

டிசம்பருக்குள் சசிகலா வெளியே வருவது உண்மையா?

கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை விதிகளின்படி, அரசுக்குப் பரிந்துரை செய்து விரைவில் விடுதலையாகும் நபர்கள் பட்டியலில், சசிகலாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. சசிகலா வெளியே வந்தால் அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை ஏற்பதற்கான வாய்ப்பிருக்கிறதா, கட்சிகள் இணையுமா. நிச்சயமாக வாய்ப்பிருக்கு. சசிகலா வெளியே வந்தால், மனம் வருந்தி, திருந்தி அவர்கள் சசிகலாவின் தலைமையை ஏற்றுவிடுவார்கள். நிச்சயம் திரும்பி வருவார்கள். டி.டி.வி.தினகரன், சசிகலா தலைமை ஏற்று வரும் எண்ணத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள். கட்சியை அவர்களால் நடத்தவே முடியாது; சாத்தியமேயில்லை. அவர்களின் முதலாளி டெல்லியில் இருக்கிறார். ஊழியர்களாக ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் இருக்கிறார்கள். 

அ.ம.மு.க மீது நீங்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறுகிறார்களே?

எனக்கு அதிருப்தி தலைமையின் மீதோ, தலைவரின் மீதோ இல்லை. சில மண்டலப் பொறுப்பாளர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் சிலரும் அதேபோல் இருக்கிறார்கள். அதனால் இவர்கள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக, எனக்கு எந்த அளவுக்குத் தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்குப் பழனியப்பன் தொந்தரவு கொடுத்துவிட்டார். இந்த இயக்கத்தை ஆரம்பகாலத்திலிருந்து ஒருவனாகக் கொடிபிடித்து, முதன்முதலில் சசிகலா, டி.டி.வி.தினகரன் முழக்கத்தை முழங்கியவன் நான். மேடைகளில் நானும் சம்பத்தும் சென்றதும் ஆர்ப்பாட்டம் நடத்தி, டி.டி.வி.தினகரன் எங்கள் தலைவன் என்ற முழக்கத்தை முன்வைத்தவன் நான் என்பதை நாடறியும். அதே உரிமையாகக் கொண்டாட வேண்டிய நாங்கள் ஒதுங்கியிருப்பதற்குக் காரணம் பழனியப்பன் போன்றவர்கள் தான். ஆகவே, அவர்கள் மீதுதான் எங்களுக்கு வருத்தம். உட்கட்சி பிரச்னை. இந்தக் குற்றச்சாட்டை தலைமையிடம் தெரிவித்திருக்கிறோம். பல இடங்களில் மண்டல பொறுப்பாளர்கள் மீது அதிருப்தி. அப்படியிருக்கும்போது உட்கட்சி மோதல் ஏற்படுமே தவிர, சசிகலா மீதோ, தினகரன் மீதோ எந்த கோவமும் இல்லை. அவர்களெல்லாம் ஒரு நிலைமைக்குப்பின்னால் இங்கே வந்தவர்கள். அந்த நிலைமையைக்கொண்டுவரப் போராடியவன்தான் நான். தென்மாவட்டங்களிலும் இதே பிரச்னைதான். 

`ராஜன் செல்லப்பா பேசியதே திட்டமிட்ட நாடகம்தான்!' - சசிகலா வருகையை விவரிக்கும் புகழேந்தி

தேர்தலில் அ.ம.மு.க-வின் தோல்வியை எப்படிப் பார்கிறீர்கள்?

தோல்வியாகவே பார்க்கவில்லை. ஆண்டிபட்டி, பெரியகுளம், மானாமதுரை, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் இந்தத் தொகுதிகள் அ.தி.மு.க-வுக்கு அ.ம.ம.மு-கவின் தேவையை உணர்த்தியுள்ளது. அ.ம.மு.க இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தலைமை ஏற்க அவர்கள் தயாரில்லை என்றால், தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர நாங்கள் காரணமில்லை. நாடாளுமன்றத் தேர்தலைப்போல, சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றால், அது ஆளும் கட்சியின் ஒத்துழையாமையின் வெளிப்பாடுதான். 

அ.ம.மு.க-விலிருந்து நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள். அதிருப்திதான் காரணமா?

இன்பத்தமிழன் கட்சிக்காக உழைத்தவர். அதில் எந்த மாறுபட்ட கருத்து இல்லை. கடுமையாக உழைத்தவர். அவர் போனது வருத்தமாக இருக்கிறது. அவர் சென்ற அ.தி.மு.க-வே அழிந்துகொண்டிருக்கிறது. அவர்களே அடித்துக்கொள்கிறார்கள். இவர் அங்கு சென்று என்ன செய்யப்போகிறார். இந்தக் கேள்விகளை எண்ணிப்பார்த்தாலே அவர்களுக்குப் புரிந்துவிடும்.

`ராஜன் செல்லப்பா பேசியதே திட்டமிட்ட நாடகம்தான்!' - சசிகலா வருகையை விவரிக்கும் புகழேந்தி

 சட்டப்பேரவை கூடி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அ.ம.மு.க-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

இரண்டு கட்டங்களில் இந்த அரசு தப்பிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம். அந்தத் தீர்மானம் நிச்சயமாகத் தோற்றுவிடும். சபாநாயகர் பதவி பறிபோக வாய்ப்பிருக்கிறது. ஆட்சிக் கட்டிலை அ.தி.மு.க தவறவிட வாய்ப்பிருக்கிறது. அதேபோல 11 எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அந்தத் தீர்ப்பு வரும்போது இந்த ஆட்சி இருக்க வாய்ப்பில்லை. தி.மு.க தொடர்ந்த அந்த வழக்கில் நாங்களும் மனுதாரராக இருக்கிறோம். ஆட்சி நிலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான்” என்றார். 

Vikatan