Published:Updated:

களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி
களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவிகிதமும் வெகுவாகக் குறைந்துள்ளன. இதற்குப் போதிய அளவு விளம்பரமும், பிரசாரமும் இல்லாததே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம்.

களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

கடந்த ஜூன் 12-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், ``தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க கூட்டணி முன்வைத்த நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி பிரசாரத்தை நம்மால் முறியடிக்க முடியவில்லை. எவ்வளவோ நல்ல திட்டங்களை நாம் செயல்படுத்தியிருந்தும், நமது பிரசாரம் போதுமானதாக இல்லை. தி.மு.க-வின் பிரசார வியூகத்துக்கு நமது ஐ.டி.விங் ஈடு கொடுக்கவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்த நிலையில், தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் என்பவரது `ஐபேக்' நிறுவனத்துடன் முதல்வர் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

யார் இந்த பிரசாந்த் கிஷோர்?... பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், ஒரு பொது சுகாதார ஆய்வாளர். ஐ.நா-வில் 8 வருடங்கள் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பியவர், 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றிக்காக பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். சமூக வலைதளங்களில் பிரசாரம், மக்களை ஈர்க்கும் கவர்ச்சி அறிவிப்புகள், அரசின் சாதனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என பல்வேறு புதுமையான ஐடியாக்கள் மூலம் பி.ஜே.பி-யின் தேர்தல் பிரசாரம் தூள் பறந்தது. குஜராத் முதல்வராக மூன்றாவது முறையாக மோடி வெற்றி பெற்றார். இதிலிருந்து மோடியும் பிரசாந்த் கிஷோரும் மிக நெருக்கமானார்கள். 

களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

2013-ல் `சிட்டிசன்ஸ் பார் அக்கவுன்டபுள் கவர்னன்ஸ்' என்கிற அமைப்பைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராவதற்கான பிரசாரத்தை செய்யத் தொடங்கினார். பெருவெற்றி பெற்ற மோடியின் `சாய் பே சர்சா', `மன்தன்' பிரசாரங்கள் எல்லாம் பிரசாந்த் கிஷோரின் ஐடியாக்கள்தான். 2014 தேர்தலில் பி.ஜே.பி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பிரசாந்த் கிஷோரின் மதிப்பும் கூடியது. அரசியல் உலகில் `பி.கே' எனப் பிரபலமானார்.

களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

2015-ல் பி.ஜே.பி-யுடனான நட்பில் இருந்து விலகியவர், தனது அமைப்பை `இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி', சுருக்கமாக `ஐபேக்' என மாற்றினார். அரசியல் கட்சிகள், தனி நபர்களுக்குத் தேவைப்படும் பிரசார வியூகங்கள், விளம்பரம், புதுமையான தேர்தல் யுக்திகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இதற்கான கட்டணமாக 150 கோடிக்கு குறையாமல் வசூலித்தும் விடுகிறார்கள். 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக செயலாற்றிய பிரசாந்த் கிஷோர், அவரது கட்சியை வெற்றி பெறவும் வைத்தார். இதில் மகிழ்ச்சியடைந்த நிதிஷ் குமார், பின்னாளில் பிரசாந்த் கிஷோரை தன் கட்சியின் துணைத் தலைவர் ஆக்கியது தனிக்கதை.

2016-ல் காங்கிரஸ் கட்சியின் கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாபிலும், 2019-ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜகன் மோகன் ரெட்டி ஆந்திராவிலும் வெற்றி பெற்றதற்கு பிரசாந்த் கிஷோர் அமைத்துக் கொடுத்த வியூகம்தான் காரணம். குறிப்பாக, ஜகனின் ஆந்திர மாநிலம் தழுவிய பாதயாத்திரையும், சமூகவலைதளங்களில் அதற்குக் கொண்டுவரப்பட்ட விளம்பரமும் பிரசாந்த் கிஷோரின் ஐடியாக்கள்தான். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாந்த் பணியாற்றியும், பி.ஜே.பி. அலையால் அவரது வியூகம் அம்மாநிலத்தில் மட்டும் பலிக்கவில்லை.  

களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

இன்றைய தேதியில், அரசியல் கட்சிகள் அதிகம் தேடும் நபரான பிரசாந்த் கிஷோரைத்தான், நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2021 தேர்தலைக் குறிவைத்து பிடித்துள்ளார். நேற்றிரவு `ஐபேக்' நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில், 2021-லோ, அல்லது அதற்கு முன்னதாகவோ சட்டமன்றத் தேர்தல் வந்தால், அ.தி.மு.க-வுக்குத் தேவையான பிரசார வியூகங்கள், விளம்பரங்களை `ஐபேக்' நிறுவனம் வகுத்துக் கொடுக்க வேண்டுமென்று ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாம். திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே இச்சந்திப்பை முதல்வர் நடத்திவிட்டாராம்.

களமிறங்கும் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்... தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

தி.மு.க-வுக்கு ஓ.எம்.ஜி. என்கிற நிறுவனம் பிரசார, விளம்பர வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறது. அதன் தலைவரான சுனில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராக அறியப்படுகிறார். நமக்கு நாமே திட்டம், தி.மு.க மேடைகள் திறந்த கூரைகளுடன் அமைக்கப்படுவது, சமூக வலைதளங்களில் `ஹேஷ்டேக்' மூலம் விளம்பரப்படுத்துவது எல்லாமே ஓ.எம்.ஜி. கொடுக்கும் ஐடியாக்கள் தான். இதே போன்றதொரு கட்டமைப்பு அ.தி.மு.க-வுக்கும் இருந்தால்தான் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என பிரசாந்த் கிஷோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணுகியுள்ளாராம். அ.தி.மு.க-வுக்குக் கைகொடுக்குமா பி.கே-வின் பிரசார யுக்தி..? பொறுத்திருந்து பார்ப்போம்.

Vikatan