Published:Updated:

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி! - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி! - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி! - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்

முன்னாள் அமைச்சரான தி.மு.க-வைச் சேர்ந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், தன் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்த ராஜினாமா கடிதத்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்.

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி! - ராஜினாமா செய்தார் வெள்ளக்கோயில் சாமிநாதன்

தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சில நாள்களுக்கு முன்பு சாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைவரிடம் கொடுத்திருக்கிறார். ஜூன் 1-ம் தேதியிலிருந்து மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவி தர இருப்பதாகப் பரவலாகப் பேச்சு எழுந்தது. அவருக்கு வழிவிட்டு, சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதையடுத்து, சொந்த ஊரிலிருந்து சென்னை கிளம்பி வந்த சாமிநாதன், கட்சித் தலைமையிடம் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். இதை இன்னும் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், உதயநிதி புதிய பதவியில் ஒரு மாதத்துக்குப் பிறகு அமர வேண்டும் என்று ஆன்மிகப் பிரமுகர்கள் யோசனை சொன்னதாக தி.மு.க பிரமுகர்கள் சொல்கிறார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் ஆன்மிக யோசனைகளையெல்லாம்  நம்புகிறவர் இல்லை. இதற்கிடையில், திருச்சியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் உதயநிதி பேசியபோது, "விரைவில் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சி, தி.மு.க-வுக்கு கொடுக்க வேண்டும். தலைவர் மிகவும் தாராள குணம்கொண்டவர். அதனால், கூட்டணிக் கட்சிகளுக்கு வாரி வழங்கிவிடுவார். இனி அப்படி இருக்கக் கூடாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி முக்கியம் என்றாலும், தி.மு.க 200 இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், உதயநிதியின் இந்தப் பேச்சுக்குப் பதிலோ மறுப்போ தெரிவிக்கவில்லை. இதுவே, கூட்டணிக் கட்சியினரின் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. 

Vikatan