Published:Updated:

` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்!' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்

தி.மு.க தரப்பில் இருந்து சீட் கொடுக்கப்படாததற்குக் காரணம், ம.ம.க அணுகுமுறை சரியில்லாததால்தான். அக்டோபர் மாதம் நாங்கள் மாநாடு ஒன்றை நடத்தியபோது, தி.மு.க தரப்பில் இருந்து சரியான நபரை அனுப்பவில்லை. அப்போதே ஸ்டாலின் மனநிலையை ஜவாஹிருல்லா கணித்திருக்க வேண்டும்.

` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்!'  - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்
` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்!' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்

த.மு.மு.க-வில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கும் ஹைதர் அலிக்கும் இடையிலான மோதல் கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ` தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க நினைத்தார்கள். நான் கண்டனத்தைத் தெரிவித்ததும் அமைதியாகிவிட்டார்கள்' எனக் குற்றம் சுமத்துகிறார், ஹைதர் அலி. 

` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்!'  - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்

சென்னை மண்ணடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. கூட்டத்துக்கான ஒற்றைக் காரணம், கடந்த சில வாரங்களாக ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்கும் இடையில் நடந்துவரும் முட்டல் மோதல்கள். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு நேரத்திலேயே நீறுபூத்த நெருப்பாக இருந்த மோதல், தற்போது வீதிக்கு வரத் தொடங்கியிருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஹைதர் அலி, ` தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை அபகரிக்க முயல்கிறார் ஜவாஹிருல்லா. கடந்த மார்ச் மாதம் த.மு.மு.க செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. உட்கட்சியில் குழப்பங்கள் நீடிப்பதால், வரும் ஜூன் மாதம் பொதுக்குழுவைக் கூட்டுவது என்று அறிவித்திருந்தோம். அதன் அடிப்படையில், வருகின்ற ஜூலை மாதம் த.மு.மு.க நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ளும் பொதுக்குழுவைக் கூட்ட இருக்கிறோம். குழப்பம் விளைவிக்கும் வகையில் ஜவாஹிருல்லாவும் அவரது ஆதரவாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் போலிக் கடிதங்களைத் தயாரித்து, பொதுச் செயலாளரான என்னை நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்' எனக் கொந்தளித்தார். 

` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்!'  - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்

ஹைதர் அலியிடம் பேசினோம். 

உங்களை நீக்குவதற்கு போலிக் கடிதம் தயாரித்ததாகக் குற்றம் சுமத்தியிருக்கிறீர்கள். த.மு.மு.க-வில் என்ன நடக்கிறது? 

`` ஆமாம். உண்மைதான். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும், `கையெழுத்துப் போடுங்கள்' எனக் கூறி, எனக்கு எதிராகக் கடிதங்களை வாங்கிவருகிறார்கள். அந்த அழைப்பிதழை என்னுடைய முகநூல் பக்கத்திலும் போட்டிருக்கிறேன். இன்றைக்கு அவர்கள், நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்த இருக்கிறார்கள். அதன்பிறகு என்னுடைய நடவடிக்கைகளை அறிவிக்க இருக்கிறேன். த.மு.மு.க-வில் பொதுக்குழுதான் அதிகாரம் மிக்கது. அதனைக் கூட்டாமலேயே காரியத்தை முடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் ஜூலை 13-ம் தேதி பொதுக்குழுவை நடத்த இருக்கிறோம்." 

உங்களுக்கும் ஜவாஹிருல்லாவுக்கும் இடையில் மோதல் உருவான பிறகும்கூட, சில கூட்டங்களில் இணைந்து செயல்பட்டதைப் பார்க்க முடிந்ததே? 

`` செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு, ஒரே ஒரு முறை ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவருடன் சென்றிருந்தேன். அதன்பிறகு எந்த இடத்திலும் இணைந்து செல்லவில்லை. இணைந்து செயல்படுவதாக வெளியில் ஒன்றைக் காட்டிவிட்டு, உள்ளுக்குள் வேறு மாதிரியாகச் செயல்படுவார். அது அவரது தனிச்சிறப்பு." 

` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்!'  - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்

`நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் பக்கம் போக முயற்சித்தார் ஜவாஹிருல்லா' என நீங்கள் குறிப்பிடுவது உண்மையா? 

`` தி.மு.க தரப்பில் இருந்து சீட் கொடுக்கப்படாததற்குக் காரணம், ம.ம.க அணுகுமுறை சரியில்லாததால்தான். அக்டோபர் மாதம் நாங்கள் மாநாடு ஒன்றை நடத்தியபோது, தி.மு.க தரப்பில் இருந்து சரியான நபரை அனுப்பவில்லை. அப்போதே, ஸ்டாலின் மனநிலையை ஜவாஹிருல்லா கணித்திருக்க வேண்டும். தி.மு.க தலைமையிடம் நேரில் சென்று கெஞ்சினால், சீட்டை கொடுத்துவிடுவார்களா...எம்.பி ஆக வேண்டும், எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கிறாரே தவிர, வேறு எந்த நோக்கமும் அவருக்குக் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டை வாங்க வேண்டும் என்பதுதான் அவருக்குப் பிரதானமாக இருந்தது. ஸ்டாலின் சீட் தரவில்லையென்றால், தினகரனிடம் போகலாம் என நினைத்தார்கள். இதையறிந்து, நான் உகாண்டாவில் இருந்து அறிக்கை வெளியிட்டதும் அமைதியாகிவிட்டார்கள். கூட்டத்திலும், `தி.மு.க எதிர்ப்பு, தினகரன் ஆதரவு' என்றுதான் பேசினார்கள். இந்தத் தகவல் தி.மு.க தலைமையின் கவனத்துக்கும் சென்றது. தேர்தல் பிரசாரத்தில் தினகரன் அணியை ம.ம.க-வினர் கடுமையாகச் சாடும்போது, `என்னிடம் அவர்கள் வந்தார்கள்' என தினகரனே வெளிப்படையாகச் சொன்னார்." 

உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? 

`` பொதுக்குழுவைக் கூட்டுவோம். அதன் உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படி செயல்படுவேன். என்மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களுக்கு நாங்கள் அழைப்பிதழ் அனுப்புவோம். வெறுமனே பேப்பர்களைக் கையில் வைத்துக் கொண்டு சாதித்துவிடலாம் என நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது" என்றார் ஆவேசத்துடன். 

` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்!'  - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்

ஹைதர் அலியின் குற்றச்சாட்டுகள் குறித்து, த.மு.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஹாஜா கனியிடம் பேசினோம். `` போலிக் கடிதங்கள் அனுப்பினோம் என்ற தகவல் பொய்யானது. எந்த அடிப்படையில் அவர் சொல்கிறார் எனத் தெரியவில்லை. அமைப்பில் வரம்பு மீறிச் செயல்படுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு நிர்வாகிக்கு ஒரு நீதி, சாதாரணமானவர்களுக்கு ஒரு நீதி எனச் செயல்பட முடியாது. இன்று, நிர்வாகக் குழு கூட்டம் நடக்க இருக்கிறது. கூட்டத்துக்குப் பிறகு முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம். தினகரனோடு போக முயன்றோம் என்பது அப்பட்டமான பொய். ஒரு சிலர் விருப்பத்தைத் தெரிவித்தபோதுகூட, அதற்கான கதவுகளை நாங்கள் திறக்கவில்லை. தேர்தலின்போது, `நாமா...அல்லது நாடா என வரும்போது, நாட்டின் நலனுக்காகத்தான் முடிவெடுக்க வேண்டும்' எனத் தீர்மானித்தோம். `நமக்கு சீட் மறுக்கப்பட்டாலும்கூட, மதச்சார்பற்ற கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுப்போம்' என இறுதி முடிவெடுத்தோம். மற்றபடி, ஹைதர் அலி கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை" என்றார் அமைதியாக. 
 

Vikatan