Published:Updated:

வருகிறது தனியார் ரயில்... மோடி அரசு தீவிர ஆலோசனை!

வருகிறது தனியார் ரயில்... மோடி அரசு தீவிர ஆலோசனை!
வருகிறது தனியார் ரயில்... மோடி அரசு தீவிர ஆலோசனை!

சுற்றுலா வழித்தடங்களிலும் நெரிசல் குறைந்த வழித்தடங்களிலும், தனியார் ரயில்களை அனுமதிப்பதுகுறித்து மத்திய பா.ஜ.க அரசு தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. அடுத்த 100 நாள்களில் இதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிறது தனியார் ரயில்... மோடி அரசு தீவிர ஆலோசனை!

மத்திய அரசால் அமைக்கப்பட்ட பிபேக் தேப்ராய் குழு, ரயில்வேயில் தனியாரை அனுமதிப்பதுகுறித்து பல பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில், ரயில்வேயில் தனியாரை அனுமதிப்பதுகுறித்து மத்திய பா.ஜ.க அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுவந்தது.  ரயில்வேயில் போட்டியை அதிகரிப்பதற்குத் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறிவந்தார்.

ரயில் நிலையங்களைத் தனியாருக்குக் கொடுப்பது, பயன்பாட்டில் இல்லாத ரயில்வே-க்கு சொந்தமான இடங்களைத் தனியாருக்கு குத்தகை அடிப்படையில் கொடுப்பது எனப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு யோசித்துவந்தது. இந்தியாவில், 400 ரயில் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு முயற்சிகள் நடந்தன. ஆனால், அதில் பெரிய அளவுக்குத் தனியார் ஆர்வம் காட்டவில்லை என்று செய்திகள் வெளியாகின.

ரயில் சேவையில் தனியாரைக் கொண்டுவருவதில் பிரதமர் மோடியும் முனைப்புக் காட்டிவந்தார். ரயில்வேயில் அரசு - தனியார் கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்திவந்தார்.
மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தனியார் ரயில்களை அனுமதிக்கும் முயற்சியை உடனடியாக ஆரம்பித்துள்ளனர்.

Vikatan