Published:Updated:

`அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா?' - அ.தி.மு.க தலைமையில் நடக்கும் விவாதம்

`அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா?' - அ.தி.மு.க தலைமையில் நடக்கும் விவாதம்
`அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா?' - அ.தி.மு.க தலைமையில் நடக்கும் விவாதம்

`ராஜ்ய சபா கிடைத்தாலும் அரசியலில் வேறு சில பிரச்னைகள் வந்துவிடக் கூடாது' என்பதால் பா.ஜ.க-வோடு இணக்கமான உறவைக் கடைப்பிடிக்கும் முடிவில் இருக்கிறது பா.ம.க. 

`நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின்போது உறுதியளிக்கப்பட்ட ராஜ்ய சபா இடம் கிடைக்குமா?' என்ற கேள்வி பா.ம.க வட்டாரத்தில் வலம்வருகிறது. `ராஜ்ய சபா சீட்டை ஒதுக்கினால், அ.தி.மு.க-வுக்கு வந்து சேர வேண்டிய வாக்குகள் அனைத்தும் இனி தி.மு.க-விலேயே தங்கிவிடும்' என்ற யோசனையில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆழ்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

`பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், மருத்துவர் ராமதாஸின் அறிக்கைகளைக் கவனித்தாலே போதும்' என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வையாக இருக்கிறது. கடந்த சில நாள்களாகத் தமிழக அரசுக்கு ஆலோசனைகளாக அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. `புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!' என நேற்று அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், `சிறிய மாவட்டங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனவே, புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழகத்தின் மாவட்டங்களை 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுவரையறை செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும். இதற்குத் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டார். 

`அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா?' - அ.தி.மு.க தலைமையில் நடக்கும் விவாதம்

`ஆரூரான் சர்க்கரை ஆலைகள் திவால்' குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையிலும், `தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளின் நிலை என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி, நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலையிலும் கணிசமான அளவுக்குப் பாக்கி வைக்கப்படுவதால் கரும்பு விவசாயிகளில் 99 விழுக்காட்டினர் கடனாளிகளாகத்தான் இருக்கின்றனர். அவர்களால், ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் திவால் அறிவிப்பு கொடுத்துள்ளதால் ஏற்படும் பாதக விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பது மட்டும் உண்மை' எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

`நிலத்தடி நீர்வளம் பெருக்க மழைநீர் சேமிப்பு' என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையிலும், `இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஊராட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாடளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம்தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். வீடுகளில் மட்டுமன்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

`அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா?' - அ.தி.மு.க தலைமையில் நடக்கும் விவாதம்

``அ.தி.மு.க அரசு செய்ய வேண்டிய விஷயங்களைப் பா.ம.க பட்டியலிடும்போதே, இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்படுவதை உணர முடிகிறது. வரும் ஜூலை மாதம் அ.தி.மு.க-வுக்கு 3 ராஜ்ய சபா உறுப்பினர்கள் கிடைக்க உள்ள நிலையில், அதில் ஓர் இடத்தைப் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கும் என மருத்துவர் தரப்பில் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இதற்கு அ.தி.மு.க முகாமிலிருந்து சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. ஒற்றைத் தலைமை என்ற கருத்தை முன்வைத்து, அ.தி.மு.க-வுக்குள் உரசல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் மறைமுக பனிப்போர் நீடித்துக்கொண்டிருக்கிறது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்,

``ராஜ்ய சபா சீட் கிடைக்குமா என இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கிறது பா.ம.க. `அ.தி.மு.க, பா.ஜ.க உறவு தொடரும்' எனப் பா.ம.க நிர்வாகிகள் சிலர் பேசுகின்றனர். ஆனால், பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசையோ, `அ.தி.மு.க-வோடு தோழமை தொடரும்' என்றுதான் கூறியிருக்கிறார். `தனித்துச் செயல்பட்டுக் கட்சியை வலுப்படுத்துவோம்' என்ற முடிவில் பா.ஜ.க தலைவர்கள் இருக்கின்றனர். `ராஜ்ய சபா கிடைத்தாலும் அரசியலில் வேறு சில பிரச்னைகள் வந்துவிடக் கூடாது' என்பதால் பா.ஜ.க-வோடு இணக்கமான உறவைக் கடைப்பிடிக்கும் முடிவில் இருக்கிறது பா.ம.க. 

`அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா?' - அ.தி.மு.க தலைமையில் நடக்கும் விவாதம்

நீட் விவகாரத்தில் மத்திய அரசைப் புள்ளிவிவரங்களோடு கடுமையாகச் சாடினார் அன்புமணி. `பா.ஜ.க-வுக்கு எதிராக இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும் நம்மிடம் இருந்து சீட்டை வாங்கிக்கொண்டு பா.ஜ.க-வோடு இணக்கமாகிவிடுவார்கள்' எனவும் நம்புகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளால் மிகுந்த சோர்வில் இருக்கிறார் முதல்வர். `உங்களைச் சேர்த்ததால்தான், எங்களுக்கு வந்து சேர வேண்டிய வாக்குகளில் பெரும்பான்மையானவை தி.மு.க பக்கம் போய்விட்டது. அப்படியிருக்கும்போது, மீண்டும் ராஜ்ய சபா கொடுத்தால், எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற வாக்குகள் அனைத்தும் மொத்தமாகத் தி.மு.க-விலேயே தங்கிவிடும். 7 ப்ளஸ் 1 என அதிக முக்கியத்துவம் கொடுத்ததால்தான் இப்படியொரு பின்னடைவு ஏற்பட்டது. இதைக் கட்சிக்காரர்களும் இதர சமூக மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது உடனடியாக ராஜ்ய சபா கொடுத்தால் வரக்கூடிய தேர்தலில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இன்னும் ஒரு 10 மாதம் பொறுத்திருங்கள். அடுத்து வரக்கூடிய ராஜ்ய சபா தேர்தலில் சீட்டை உறுதி செய்கிறோம்' எனப் பா.ம.க தரப்புக்குத் தெரிவிக்கும் முடிவில் இருக்கின்றனர் அ.தி.மு.க தலைமையில் இருப்பவர்கள். இதைக் கேள்விப்பட்ட பா.ம.க தரப்பும், `சட்டமன்றத்திலும் கூட்டணி தொடரும். ராஜ்ய சபா சீட்டை உறுதிப்படுத்துங்கள்' என வலியுறுத்தி வருகின்றனர். 

`அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா?' - அ.தி.மு.க தலைமையில் நடக்கும் விவாதம்

`அ.தி.மு.க தலைமையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை உணர்ந்ததால்தான் இன்று வேறொரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ராமதாஸ்' எனச் சுட்டிக் காட்டுகின்றனர் ஆளும்கட்சி தரப்பினர், `பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி தி.மு.க அரசு!' என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், `கூட்டணி தர்மத்தைப் பாதுகாப்பதாக இருந்தாலும், மக்கள் பிரச்னைகளுக்காக உண்மையாகப் போராடுவதாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணை பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' எனப் பதிவு செய்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு