Published:Updated:

பி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி!

அசுர பலத்தோடு மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது பி.ஜே.பி. மோடி மீண்டும் பிரதமர் ஆக வரக் கூடாது என்று கடந்த ஆண்டே குரல் கொடுத்தவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து மோடிக்கு எதிரான அலையை உருவாக்க முனைந்தார். மோடியின் ஆட்சியை மாற்ற நினைத்தவரால் தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாமல் போனது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், தெலுங்கு தேசம் மீது பி.ஜே.பி தலைவர் அமித் ஷா கடும் கோபத்தில் இருப்பதாகச் செய்திகள் வந்தன. டெல்லியில் நேற்று மத்திய அரசு நடத்திய `ஒரே நாடு...ஒரே தேர்தல்' குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கவில்லை.

பி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி!

Photo Credit: ANI

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் சார்பில் 3 உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளார்கள். ராஜ்யசபாவில் அந்தக் கட்சிக்கு 6 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், தெலுங்குதேசம் கட்சியை உடைக்கும் வேலையை பி.ஜே.பி தலைமை கையில் எடுத்துள்ளது. அந்தக் கட்சியின் ராஜ்யசபா எம்.பி-க்களை கடந்த சில நாள்களாக பி.ஜே.பி தலைமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பி-க்கள் வெங்கடேஷ், சீதாராம லட்சுமி, சுஜானா சவுத்ரி, ரமேஷ் ஆகிய 4 பேரும் பி.ஜே.பி-க்குத் தாவ முடிவு செய்துள்ளார்கள். இதுகுறித்து 4 பேரும் கையெழுத்திட்ட தீர்மானம் ஒன்றையும் ராஜ்யசபா செயலாளரிடம் அளிக்க உள்ளனர். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. ஏற்கெனவே பிராந்திய கட்சிகளை வலுவிழக்கச் செய்யும் வேலையில் பி.ஜே.பி தீவிரம் காட்டிவரும் நிலையில் அந்தப் பட்டியலில் இப்போது தெலுங்குதேசமும் இணைந்துள்ளது. 

அவர்கள் 4 பேரும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அதனால் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி துணை குடியரசுத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கைய நாயுடுவிடம் கடிதம் அளித்திருக்கின்றனர்.