Published:Updated:

`20 ஆண்டுகளுக்குப் பின் நாடாளுமன்றத்துக்குள் நுழைவாரா?!' - ஜூலை 5-ஐ எதிர்நோக்கும் வைகோ

விகடன் விமர்சனக்குழு
`20 ஆண்டுகளுக்குப் பின் நாடாளுமன்றத்துக்குள் நுழைவாரா?!' - ஜூலை 5-ஐ எதிர்நோக்கும் வைகோ
`20 ஆண்டுகளுக்குப் பின் நாடாளுமன்றத்துக்குள் நுழைவாரா?!' - ஜூலை 5-ஐ எதிர்நோக்கும் வைகோ

மக்களவை, மாநிலங்களவை என 24 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோவின் பேச்சைப் பார்த்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ``காங்கிரஸின் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ ஒருவருக்குச் சமம்” என்று புகழ்ந்தார். வைகோவின் புலிகள் ஆதரவு பிடிப்பும், அவரது அசாத்திய நாடாளுமன்ற பேச்சுத் திறமையைக் கண்டு வியந்த அன்றைய தி.மு.க-வினர் `நாடாளுமன்ற புலி வைகோ' என மேடைதோறும் புகழ்பாடினார்கள். அதன்பிறகு ம.தி.மு.க-வை வைகோ ஆரம்பித்தபிறகு அவரது கட்சியினரும் இதே பட்டத்தைக் கொண்டே வைகோவை அழைத்தனர். 

`20 ஆண்டுகளுக்குப் பின் நாடாளுமன்றத்துக்குள் நுழைவாரா?!' - ஜூலை 5-ஐ எதிர்நோக்கும் வைகோ

`பார்லிமெண்ட் டைகர்’ மீண்டும் மாநிலங்களவைக்குள் நுழைகிறார். இந்தச் செய்தி அவரது தொண்டர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினருக்கும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்துக்குள்  வைகோவின்  குரல் ஒலிப்பது அவருக்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்துக்கு உற்சாகத்தைப் பாய்ச்சியுள்ளது. `வைகோ’வின் பேச்சுக்கே இங்கே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 1978-ம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி நாடாளுமன்றம் சென்றார் வைகோ. 1984, 1990 ஆண்டுகளில் மாநிலங்களவையில் எம்.பி-யாகி மிரட்டினார். ஈழத்த்தமிழர் பிரச்னை, நதி நீர் இணைப்பு, மீனவர்கள் மீதான தாக்குதல் என தமிழர்களின் பிரதான பிரச்னைகளை அழுத்தமாகப் பதியவைத்தவர். 1999-ம் ஆண்டு சிவகாசி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர், இருபது ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் நுழைய உள்ளார். ஆனால், அவரது நுழைவுக்கு முட்டைக்கட்டையாக நிற்கிறது அவர் மீதான தேசத்துரோக வழக்கு. இதுதான் வைகோ முன்னால் இருக்கும் முக்கியமான சிக்கல்.

`20 ஆண்டுகளுக்குப் பின் நாடாளுமன்றத்துக்குள் நுழைவாரா?!' - ஜூலை 5-ஐ எதிர்நோக்கும் வைகோ

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் `நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால், வைகோ மீது தேசத் துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

`20 ஆண்டுகளுக்குப் பின் நாடாளுமன்றத்துக்குள் நுழைவாரா?!' - ஜூலை 5-ஐ எதிர்நோக்கும் வைகோ

இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகினார். குற்றச்சாட்டு பதிவு, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகிறது.

`20 ஆண்டுகளுக்குப் பின் நாடாளுமன்றத்துக்குள் நுழைவாரா?!' - ஜூலை 5-ஐ எதிர்நோக்கும் வைகோ

தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எதிரான வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை வழங்கி உத்தரவிட்டவர்தான்  நீதிபதி ஜெ.சாந்தி. வைகோவின் மீதான தேசத்துரோக வழக்குக்கும் சாந்தி  தீர்ப்பளிக்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ம.தி.மு.க-வைச் சேர்ந்த நன்மாறனிடம் பேசினோம், ``இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக, ஈழத்தமிழர்கள் பிரச்னை சம்பந்தமாக குற்றம்சாட்டி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நேரிலும், தபால் முறையிலும் அனுப்பிய கடிதங்களின் தொகுப்புதான் தமிழில், `நான் குற்றம்சாட்டுகிறேன்’ என தமிழாக்கமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தக வெளியிட்டு விழா ராணி சீதை மன்றத்தில் நடந்தது.

இது தொடர்பாக தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு, சட்டவிரோத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டது. சட்டவிரோத தடுப்பு சட்ட வழக்கில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று, வாதப்பிரதிவாதங்கள் முழுமையாக முடிந்துவிட்டது. நீதிமன்றம் வழக்கு விசாரணை பார்த்துவிட்டு என்ன தீர்ப்பு வழங்கும் என்று 5-ம் தேதிதான் தெரியும். அது குறித்து நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், வழக்கை உடைத்து வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என்றார். 

Vikatan