Published:Updated:

`ஐ.டி விங் எல்லா வேலைகளையும் செய்யும்!' - எடப்பாடி சந்திப்பு தகவலால் தகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

`ஐ.டி விங் எல்லா வேலைகளையும் செய்யும்!'  - எடப்பாடி சந்திப்பு தகவலால் தகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்
`ஐ.டி விங் எல்லா வேலைகளையும் செய்யும்!' - எடப்பாடி சந்திப்பு தகவலால் தகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

``எடப்பாடி பழனிசாமியோடு அப்பாயின்மென்ட் இருக்கிறது என்றால், எனக்குத்தான் முதலில் தகவல் வந்து சேர வேண்டும். ஆனால், அப்படி எந்தத் தகவலும் இல்லை” என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

`ஐ.டி விங் எல்லா வேலைகளையும் செய்யும்!'  - எடப்பாடி சந்திப்பு தகவலால் தகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் ஆடிப்போனது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். தேர்தலுக்குப்பிறகு, கட்சியினருக்கு அவர் ஒரு சாய்ஸையும் கொடுத்தார். கட்சியிலிருந்து யார் வெளியேறுவதாக இருந்தாலும் வெளியேறலாம் என்றார். `இடைத்தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி, அ.தி.மு.க அரசின் ஆட்சிக்கட்டிலை அசைத்துப் பார்த்துவிடலாம், ஆட்சியைக் கலைப்பதில் அ.ம.மு.க-வின் பங்கு இருக்கும் என எதிர்பார்த்த கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

`ஐ.டி விங் எல்லா வேலைகளையும் செய்யும்!'  - எடப்பாடி சந்திப்பு தகவலால் தகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கத்தை இந்தத் தேர்தலில் சரிசெய்துவிடலாம் என்ற எம்.எல்.ஏ-க்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இதன் எதிரொலியாக,  `தங்க தமிழ்செல்வன் கட்சி மீது அதிருப்தியில் இருக்கிறார்’ என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின. அதற்கு வலுசேர்க்கும் வகையில், தஞ்சையில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கசாமி திருமணத்துக்கு தினகரன் சென்றபோது, அவருடன் எப்போதும் வரும் தங்க தமிழ்ச்செல்வன் வரவில்லை. இது பல்வேறு சந்தேகத்தைக் கிளப்பியது. தொடர்ந்து, அ.ம.மு.க ஆலோசனைக் கூட்டத்தில்  கலந்துகொண்டு, செய்திகளை பொய்யாக்கினார் தங்க தமிழ்ச்செல்வன்.

`ஐ.டி விங் எல்லா வேலைகளையும் செய்யும்!'  - எடப்பாடி சந்திப்பு தகவலால் தகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், `தேர்தலில் பணப்பட்டுவாடா முறையாக நடைபெறவில்லை. தேர்தல் நடந்த 1000 பூத்களில், அ.ம.மு.க ஏஜென்டுகளே ஓட்டுபோடவில்லை’ என தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் தனியறையில் அமர்ந்து பேசியுள்ளனர். அதில் இருவருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல,  `இரட்டை இலை எங்கு இருக்கிறதோ, அங்குதான் நான் இருப்பேன்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் அடிக்கடி பேசியது, அ.ம.மு.க-வினரிடையே சந்தேகத்தைக் கிளப்பியது. 

`ஐ.டி விங் எல்லா வேலைகளையும் செய்யும்!'  - எடப்பாடி சந்திப்பு தகவலால் தகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

இந்த நிலையில், இன்று, சென்னை எழும்பூரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் ஒன்றில், அமைச்சர் தங்கமணியைச் சந்தித்து, தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளதாகவும் அவர், மீண்டும் அ.தி.மு.க-வுக்கு இணையலாம் எனப் பரபரப்பு தொற்றியிருக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் தங்கமணியைச் சந்தித்து தன் விருப்பத்தைத் தெரிவித்ததுபோல, முதலமைச்சரைச் சந்திக்கவும் நேரம் கேட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஒருகட்டத்தில், தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தால், அதைபயன்படுத்தி  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கு செக் வைப்பார் எனப் பேச்சுக்கள் எழுந்தது.

இது தொடர்பாக விளக்கம் பெற, தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். `` நான் இணையப் போகிறேன் என்பது தவறான தகவல். ஐ.டி விங் எல்லா வேலைகளையும் பார்க்கிறது. பொய்யான செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் தகவலை ஏன் பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியோடு அப்பாயின்மென்ட் இருக்கிறது என்றால், எனக்குத்தான் முதலில் தகவல் வந்து சேர வேண்டும். ஆனால், அப்படி எந்தத் தகவலும் இல்லை. எனக்குத் தகவல் வராமல் மற்றவர்களுக்கெல்லாம் யார் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அ.ம.மு.க-வில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அ.தி.மு.க-வில் இணைவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை" என்றார் கொந்தளிப்புடன்.

Vikatan