Published:Updated:

`மன்னிப்பு கேளுங்கள் முதல்வரே’ - கொந்தளிக்கும் பி.ஜே.பி!

`மன்னிப்பு கேளுங்கள் முதல்வரே’ - கொந்தளிக்கும் பி.ஜே.பி!

‘வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் ஆளும் கட்சியின் கொடி போர்த்தி, ராணுவ வீரரின் தியாகத்தை அரசியலாக்குகிறார்கள்.’

`மன்னிப்பு கேளுங்கள் முதல்வரே’ - கொந்தளிக்கும் பி.ஜே.பி!

‘வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் ஆளும் கட்சியின் கொடி போர்த்தி, ராணுவ வீரரின் தியாகத்தை அரசியலாக்குகிறார்கள்.’

Published:Updated:
`மன்னிப்பு கேளுங்கள் முதல்வரே’ - கொந்தளிக்கும் பி.ஜே.பி!

வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் பிஜு ஜனதா தளத்தின் கொடி போர்த்தப்பட்டிருப்பதுபோல சமூகவலைதளங்களில் வெளியான புகைப்படத்தால் ஒடிசாவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பி.ஜே.பி கொந்தளிக்கிறது.

`மன்னிப்பு கேளுங்கள் முதல்வரே’ - கொந்தளிக்கும் பி.ஜே.பி!

ஒடிசாவைச் சேர்ந்த அஜித் குமார் சாஹூ என்கிற ராணுவ வீரர் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜூன் 17-ம் தேதி நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஜூன் 18-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு கொண்டுவரப்பட்டது. மாநில ஆளுநர் கணேஷி லால், மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு, தென்கனல் மினி ஸ்டேடியத்துக்கு  உடல் கொண்டுசெல்லப்பட்டு பிறகு, அவரின் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி மீது பிஜு ஜனதா தளத்தின் கொடி போர்த்தப்பட்டிருப்பதைப் போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் இன்று வைரலானது. அது, எதிர்க்கட்சியான பி.ஜே.பி வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
இதற்காக பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசிய பி.ஜே.பி-யின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவின் மாநிலத் தலைவர் பி.கே.பஸ்டியா கூறினார். ‘ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பி.ஜே.பி-யின் தேசிய துணைத் தலைவரான பைஜாயந்த் ஜே பாண்டாவும் கூறியுள்ளார்.

அவர், ``வீர மரணமடைந்த ராணுவ வீரரின் சவப்பெட்டி மீது தேசியக் கொடியைப் போர்த்துவதற்குப் பதிலாக, ஒடிசா மாநில ஆளும் கட்சியின் கொடியைப் போர்த்தி, ராணுவ வீரரின் மரணத்தை அரசியலாக்குவது வருத்தத்துக்குரியது” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ``தியாகிகள் மீது எங்கள் கட்சி மிகுந்த மரியாதை வைத்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பிஜு ஜனதா தளம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.