Published:Updated:

``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி

``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி

``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி

``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி

``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி

Published:Updated:
``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி
``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி


`லேடி சூப்பர் ஸ்டார்' புகழுடன் தெலுங்குத் திரையுலகைக் கலக்கியவர், நடிகை விஜயசாந்தி. தெலுங்கு சினிமாவில் ஹீரோக்களுக்கு மீறிய புகழ் மற்றும் சம்பளத்துடன் அசத்தியவர், ஆக்‌ஷன் படங்களில் தூள் கிளப்பினார். இவரின் தெலுங்குப் படங்கள், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பெரும் வெற்றிபெற்றன. அதில், 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படம் முக்கியமானது. 28 ஆண்டுகள் சினிமாவில் நடித்த நிலையில், 1998-ம் ஆண்டு, அரசியலிலும் அதிரடி என்ட்ரி கொடுத்தார். சென்னையில் வசித்துவந்தவர், அரசியல் பயணத்துக்காக ஹைதராபாத்துக்குக் குடியேறினார்.  

2006-ம் ஆண்டு, `நாயுடம்மா' என்ற படத்துக்குப் பிறகு இதுவரை நடிக்காமல் இருந்தார் விஜயசாந்தி.  அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்தவர். தற்போது, காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுகிறார். இந்நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகளை மறுத்துவந்தவர், தற்போது ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.

``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் `சரிலேறு நீகேவ்வறு' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் விஜயசாந்தி. இந்தப் படத்தில் நடிப்பதற்காக, விஜயசாந்திக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் 5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இத்தொகை, முன்னணி கதாநாயகிகள் பெறும் சம்பளத்தைவிடவும் அதிகமானது. இதனால், விஜயசாந்தியின் சினிமா ரீ-என்ட்ரி செய்தி, தெலுங்கு சினிமாவில் வைரலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்து விஜயசாந்தியிடம் பேசினோம். அவர் உற்சாகமாகப் பேசுகையில்...

``அரசியலுக்கு வந்தபிறகு, இனி நடிக்கவே கூடாது என உறுதியாக இருந்தேன். ஆனால், என்னை மிகவும் வலியுறுத்திக் கேட்டார்கள். `சரிலேறு நீகேவ்வறு' படத்தில் சமூகத்துக்கு விழிப்புணர்வு கொடுக்கிற மாதிரியான பவர்ஃபுல் ரோல் எனக்கு. ஹீரோயினாக நான் நடித்த படங்களுக்கு இணையான முக்கியத்துவம் இந்தப் படத்தில் இருக்கிறது. அதனால்தான் நடிக்க ஒப்புக்கிட்டேன். இந்தப் படத்தில் என் சம்பளம் பற்றி பல்வேறு பேச்சுகள் உலாவுகின்றன. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. சம்பள விஷயம் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால், இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். அதற்காகப் பெரிய தொகை பேசப்பட்டிருக்கு. இனி தொடர்ந்து நடிக்கும் திட்டமில்லை. என் ஒரே இலக்கு அரசியல்தான். தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்துவேன். சினிமாவில் வெற்றி பெற்றதுபோல, அரசியலிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற இலக்கு என் மனத்தில் உள்ளது.

``5 கோடி சம்பளம்னு சொல்ல மாட்டேன். ஆனா...?!" - விஜயசாந்தி

இப்போது, மீண்டும் நடிக்கவிருப்பதால், என் கட்சிப் பணிகள் பாதிக்காது. ஏற்கெனவே நிறைய நடித்துவிட்டேன். சொத்துக்களையும் சேர்த்துவிட்டேன். எனவே, இப்போது எனக்கு நடிப்பும் பணமும் பிரதானமில்லை. பல கட்சி மேடைகளில் பேசுவதைவிடவும், ஒரு படத்தில் பேசும் நல்ல கருத்துகள் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும். அந்த எண்ணத்தில்தான் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டேன். தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் நேரமிருப்பதால்தான் நடிக்கிறேன். என் சொத்துக்களை ஏழை மக்களின் கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளுக்குச் செலவிட விரும்புகிறேன். அதற்கான பணிகளிலும் கவனம் செலுத்துகிறேன். விரைவில் அதுகுறித்து அறிவிக்கிறேன்" என்று முடித்தார் விஜயசாந்தி.

விஜயசாந்தி, 1991-ம் ஆண்டிலேயே ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெற்றவர். 1990-களில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோருக்குப் பிறகு, இந்தியாவில் அதிக சம்பளம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.