Published:Updated:

`சட்டமன்றம் செல்வோம்!' - தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் புது முயற்சிக்கு மக்கள் பாராட்டு

இ.லோகேஷ்வரி
`சட்டமன்றம் செல்வோம்!' - தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் புது முயற்சிக்கு மக்கள் பாராட்டு
`சட்டமன்றம் செல்வோம்!' - தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் புது முயற்சிக்கு மக்கள் பாராட்டு

ன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற நடைமுறைகளைத் தொகுதி மக்கள் தெரிந்துகொள்ள 'சட்டமன்றம் செல்வோம்' என்ற புதுமுயற்சியை முன்னெடுத்துள்ளார். 

`சட்டமன்றம் செல்வோம்!' - தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் புது முயற்சிக்கு மக்கள் பாராட்டு

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா. மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள், சட்டமன்றம் குறித்து தெரிந்துகொள்ளவும், தொகுதியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகாரளிக்கவும் தொலைபேசி வாயிலாகப் புதுமுயற்சியைச் செயல்படுத்தியுள்ளார். இதில், '7667867899' என்ற மொபைல் எண்ணுக்கு அழைத்தால், மன்னார்குடி தொகுதியில் உள்ள ஒன்றியங்களின் பட்டியல் குறித்து தனித் தனியாகப் பேசவும் புகாரளிக்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் நகராட்சிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள ஒன்றியங்கள் குறித்துப் பேச முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுடன் நேரடியாகப் பேசவும் இதில் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

`சட்டமன்றம் செல்வோம்!' - தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் புது முயற்சிக்கு மக்கள் பாராட்டு

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில், ``சட்டமன்ற நடைமுறைகள் தொகுதி மக்களுக்குச் சரிவர தெரியாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று நம்புகிறேன். அதற்கு நீங்கள் சட்டமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். வருகிறீர்களா... `சட்டமன்றம் செல்வோம்.' தொடர்புக்கு 7667867899'' என்று தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பி.ராஜாவின் இந்தப் புது முயற்சிக்குப் பாராட்டுகள் குவிகிறது.

Vikatan