Published:Updated:

`பணம் காலியானதுதான் மிச்சம்!' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்?

`பணம் காலியானதுதான் மிச்சம்!' -  மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்?
`பணம் காலியானதுதான் மிச்சம்!' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்?

`பணம் காலியானதுதான் மிச்சம்!' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்?

.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அணியின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய தங்க.தமிழ்ச்செல்வன், அதே தினகரனை திட்டும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கட்சியிலிருந்து என்னை நீக்கி பார்க்கட்டும்" என்று அவர் விடும் சவால், அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று தினகரன் வீட்டில் தேனி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

`பணம் காலியானதுதான் மிச்சம்!' -  மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்?

கட்சியை விட்டு தங்க.தமிழ்ச்செல்வனை நீக்கினால், அடுத்தகட்ட ரியாக்‌ஷன் எப்படியிருக்கும் என்று தினகரன் தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், தினகரன் தரப்பில், “தங்க.தமிழ்ச்செல்வன் இப்போது பேசிய ஆடியோ சாம்பிள்தான். இதற்கு முன்பு இதுபோல் கட்சியில் உள்ள பலரையும் திட்டிப்பேசி அது பிரச்னையான கதைகளெல்லாம் உள்ளன. முதல்நாள் திட்டிவிட்டு மறுநாள் தினகரனிடம், 'அண்ணன் நைட் டைம்ல இப்படிப் பேசிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள்' என்று பலமுறை சொல்லியுள்ளார். அவரை இரண்டாண்டுகள் இழுத்து வைத்ததே பெரிய விஷயம். அவராகத்தான் தினகரன் பின்னால் வந்தார்.

துணை முதல்வர் பன்னீர்க்குப் போட்டியாக அரசியல் செய்ய வேண்டும் என்று வந்தவருக்கு, எதிர்பார்த்தமாதிரி அமைச்சர் பதவி அவருக்குக் கிடைக்காமல் போனது. இதனால், அவர் வீட்டிலும் சில பிரச்னைகள் வெடித்துள்ளன. குறிப்பாக, தேர்தல் நேரத்தில் பண விவகாரத்தில் அவர் வீட்டில் பெரிய பிரச்னை வெடித்துள்ளது. அவருடைய மனைவி, 'எதற்காக நீங்கள் அ.தி.மு.க-வைவிட்டு வந்தீர்கள். அங்கிருந்தால் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கலாம். இருக்கும் பணமும் காலியானதுதான் மிச்சம்' என்று கடுமையாகப் பேசியுள்ளார். இந்த மனஉளைச்சலில் இருந்த தங்க.தமிழ்ச்செல்வன், இனியும் தினகரனுடன் இருந்தால் குடும்பத்துக்குள் குழப்பம் வந்துவிடும் என்பதால் அணிமாற முடிவு செய்தே இப்படி போன் போட்டுத் திட்டியுள்ளார்” என்கிறார்கள். 

தங்க.தமிழ்ச்செல்வன் தரப்புக்கு நெருக்கமானவர்களும், `அவர், தினகரன் பின்னால் வந்து பதவி முதல் பணம்வரை நிறைய இழந்துவிட்டார். இது, அவரின் குடும்பத்துக்குள் பிரச்னையானதாலேயே வேறு வழியில்லாமல் இப்போது அ.தி.மு.க-வுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டார்' என்கிறார்கள். 


 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு