Published:Updated:

என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

Published:Updated:
என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

- வீ. மாணிக்கவாசகம்
படங்கள்: கே.குணசீலன் & சு. குமரேசன்


 

என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் வெங்கடேஷின் அப்பா சுந்தரவதனம். சசிகலாவின் மூத்த அண்ணனான இவரது மகள் அனுராதா, சுந்தரவதனத்தின் தம்பி ஜெயராமனின் மனைவி இளவரசி. இவர்கள் இருவரும் தான் இப்போது போயஸ் தோட்டத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிரடி அரசியலுக்கு அப்பார்ப்பட்டவர்களாக இருப்பதால் தலை தப்பினார்கள் போலிருக்கிறது. இவர்கள் அதிகாரம் செய்யாமல் இருக்கக் காரணம், 'போதும் என்ற மருந்தே பொன் செய்யும் மருந்து" என்ற தாராக மந்திரம் என்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் வங்கியில் பணிபுரிந்தவர் சுந்தரவதனம். இயற்கையிலேயே சாந்த சொரூபி. சசிகலா கார்டனுக்குள் அதிகாரம் செய்ய ஆரம்பித்த பிறகு, இவருக்கும் செல்வாக்கு கூடிப்போனது. ஆனாலும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சுந்தரவதனத்திற்கு பிடிக்காது. இவரது மனைவி சந்தான லெட்சுமி அவ்வப்போது கார்டன் பக்கம் தலைகாட்டுவார். தன்னாலானதை செய்தும் கொடுப்பார். அடிக்கடி போகாமல் எப்போதாவது போவதால் இவர் சொல்வதை உடனே செய்து தர சொல்லிவிடுவாராம் சசிகலா.

அது தனது அண்ணன் சுந்தரவதனத்தின் மீதிருந்த பாசம் என்று கூட சொல்வார்கள். அதைக்கூட சுந்தரவதனம் கண்டுகொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடும் இடங்களில் இவரிடம் அரசியல் பற்றி யாருமே மூச்சு விடமாட்டார்கள். இப்போது தனது குடும்பத்தினர் மீதான ஜெ நடவடிக்கைகளில் வருத்தம் காட்டாமல் இருக்கும் சுந்தரவதனம், பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்!

##~~##
சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவும் மற்றவர்களுக்காக யாரிடமும் அநாவசியமாக சிபாரிசு செய்ய மாட்டார். அதனாலேயே இவரது உறவினர்கள் அப்பா பொண்ணு என இவரை கிண்டல் செய்வதும் உண்டு. அந்த அளவிற்கு தன் நிலை உணர்ந்தவர். நிர்வாக திறமையை இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு கெட்டிக்காரர்.

அதனால்தான் இவரிடம் ஜெயா டி.வி நிர்வாகத்தை ஜெயலலிதா கொடுத்திருந்தார். சசிகலா, இளவரசி, என்ற இரண்டு நபர்களுக்கு பிறகு மூன்றாவது நபராக கார்டனில் இருந்தவர் அனுராதா. ஜெயலலிதாவின் சாட்டை சுழற்றலுக்குப் பிறகு கார்டன் பக்கம் போவதை அடியோடு நிறுத்திக்கொண்டார். தற்போது இவருடைய கணவர் டி.டி.வி தினகரனோடு பிசினஸ் வேலைகளை கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

இளவரசி தன்னுடைய உஷாரான நடவடிக்கையால் இன்றுவரை கார்டனுக்குள் நீடிப்பவர். சசிகலா

என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

கார்டனைவிட்டு வெளியேற்றப்பட்டபோதுகூட இவர் அங்கேயே தங்க வைக்கப்பட்டார். அதற்கு காரணம் ஜெயலலிதாவின் நன்றி மறவாத குணம். இளவரசியின் கணவர் ஜெயராமன், சுந்தரவதனம் போன்றே அமைதியானவர். இவர்தான் ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தை பார்க்க போனபோது கடந்த 1992 ம் ஆண்டு மின்சாரம் தாக்கி பலியானவர். நிர்கதியாய் நின்ற இளவரசியையும் மூன்று குழந்தைகளையும் நான் பார்த்து கொள்கிறேன் என கார்டனுக்கு அழைத்து போனார் ஜெயலலிதா. இன்று வரை அந்த வார்த்தையை மதித்து கார்டனுக்குள்ளேயே வைத்தும் இருக்கிறார்.

இதில் இன்னொரு சுயநலமும் ஜெயலலிதாவிற்கு உண்டு. இளவரசியின் சமையலுக்கு ஈடு இணையே இல்லை என்பார்கள் அவரது உறவினர்கள். அந்த சமையலுக்கு ஜெயலலிதாவும் அடிமை! இவரது கைப்பக்குவம் வேறு யாருக்கும் இல்லை என ஜெயலலிதாவே அடிக்கடி புகழ்ந்து பேசுவாராம். இளவரசியின் மகன் விவேக். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை. தற்போது புனேயில் படித்து வரும் இவர், ஜெயலலிதாவிற்கு தேர்தல் நேரத்தில் கார் ஓட்டியவர். ஒரு வயதிலேயே கார்டனுக்கு போனதால் இன்றும் ஜெயலலிதாவை 'பிக் ஆன்டி' என்றுதான் அழைப்பாராம் விவேக்.

இளவரசி தனது மகளை திருச்சியில் திருமணம் செய்து கொடுத்தார். இவரது சம்பந்திதான் திருச்சி இன்ஜினீயர் கலியபெருமாள். திருச்சியையும் அதை சுற்றியிருக்கும் மாவட்டங்களையும் மருமகள் பெயரை சொல்லி அதிகாரம் செலுத்தியவர். புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள் ஒருகாலத்தில், 'இன்ஜினியரை பார்க்கப் போறேன்' என்றுதான் பவ்யமாக சொல்வார்கள். அதிர்ந்து பேசினால் அவரது காதிற்கு போய்விடும் என்கிற பயம்.

என்ன நடக்கிறது மன்னார்குடி குடும்பத்தில்?: மினி தொடர் - பாகம் 4

திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சில எம்.எல்.ஏ க்கள், அமைச்சர்கள், திருச்சி தொகுதி எம்.பி குமார் ஆகியோர் கலியபெருமாளின் கரிசனத்தில் பதவிக்கு வந்தவர்கள் என்று சொல்வார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுப்பதில் கடவுளுக்கும் பெரியவர் கலியபெருமாள்.

அதனால் இவரது வீட்டைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் வட்டமடிக்கும். சசி பெயர்ச்சிக்குப் பிறகு, இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். தோட்டத்தில் இவருக்கு நடந்த கவனிப்பு அப்படி! கலியபெருமாள் கட்டம் கட்டி வைக்கப்பட்டாலும் இவரால் பதவிகளுக்கு வந்தவர்கள் இன்னும் பகட்ட்டுக் குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி,மன்னார்குடி குடும்பம் பல வழிகளிலும் அதிகாரம் செலுத்தி தங்களை வளப்படுத்திக் கொண்ட அதேநேரம், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய ஜீவன் திருச்சியில் இன்னமும் வாடகை வீட்டில் வசிக்கிறது. அது யார் தெரியுமா?  நாளை பார்க்கலாமே...