Published:Updated:

`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா!' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன?

`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா!' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன?
`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா!' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன?

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரப் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்துக்குப் பின்தங்கியிருக்கிறது தமிழகம். இந்த ஆய்வில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், உலக வங்கி ஒத்துழைப்புடன் 2017-18-க்கான இந்திய சுகாதாரம் குறித்த ஆய்வறிக்கையை நிதி ஆயோக் நேற்று வெளியிட்டது. நோய்களை வரும் முன் காப்பது , விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நோய்களைத் தடுப்பது உள்ளிட்ட  முக்கிய தரவுகளின் அடிப்படையில் இந்த  ஆய்வறிக்கைத் தயாரிக்கப்படுகிறது.

`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா!' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன?


இந்த ஆய்வறிக்கையில், பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தையும் ஆந்திரா, மகாராஷ்டிரா இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. சிறிய மாநிலங்களில் மிசோரம் முதலிடத்தையும் செயல்திறன் வளர்ச்சி அடிப்படையில் திரிபுரா, மணிப்பூர் முதல் இரண்டு இடங்களையும் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கூடுதல் செயல்திறன் மேம்பாட்டில் ஹரியானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கடைசி மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா ஆகியவை உள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன், அடிப்படைக் கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றிலும் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, நாட்டில் சிறந்த ஆட்சி புரியும் மாநிலங்களின் பட்டியலில்  கேரளா முதலிடம் பிடித்துள்ளது. இதில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆய்வில் ஒன்பதாவது இடத்துக்குப் தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், `பிறந்ததும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக 2030 ஆண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, தமிழகமும் கேரளாவும் இப்போது எட்டிவிட்டதாக' அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`6 இடங்கள் பின்தங்கிய தமிழகம்... முதலிடத்தில் கேரளா!' - நிதி ஆயோக் ஆய்வறிக்கை சொல்வதென்ன?

``இந்தச் சுகாதார குறியீடு மூலம் மாநிலங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்வோம்'' என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் தெரிவித்தார். மத்திய அரசு சுகாதாரத்துறைக்கான செலவினத்தை 2.5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். அதுபோல், மாநில அரசுகள் தங்களின் சுகாதாரத்துக்கான செலவினங்களை 4.7 முதல் 8 சதவிகிதம் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

Vikatan