Published:Updated:

சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில்! - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே

சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில்! - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே
சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில்! - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே

வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்குகின்றன. அதே பாணியில் இந்தியாவிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 500 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் தனியார் ரயில்கள் விடப்படும். டெல்லி - லக்னோ, மும்பை - ஷீரடி, சென்னை - பெங்களூரு,  திருவனந்தபுரம் - கண்ணுர், மும்பை- அகமதாபாத் மார்க்கங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில்! - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே

இதில், டெல்லி- லக்னோ மார்க்கத்தில் நாள் ஒன்றுக்கு 50 ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டிலேயே வெகு பிசியான மார்க்கம் இது. மும்பை - ஷீரடி மார்க்கத்தில் சேவைக் குறைவு. புகழ்பெற்ற சாயிபாபா கோயில்தான் இந்த மார்க்கத்தில் முக்கியமானது. முதலில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனத்துக்கு (IRCTC) இரு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்படும். அடுத்த 100 நாள்களுக்குள் முதல் ரயில் ஓடத் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

இதுபோல் நாட்டின் பல முக்கிய மார்க்கங்களில் தனியார்கள் இயக்க ஏலம் விடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முதலில் ஒரு இரவுக்குள் சென்றடையும் ரயில்களின் மார்க்கங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. அதேபோல், இன்ஜின்கள், பெட்டிகள் தயாரிப்பு நிறுவனங்கள், பராமரிப்பு நிலையங்களையும் கார்ப்பரேட் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் தனியாரை நுழைய விடுவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே நாட்டில் 23 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், மால், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்றவை அமைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில்! - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே

அகில இந்திய ரயில்வே யூனியன் அமைப்பின் செயலாளர் ஷிவ் குமார் மிஷ்ரா கூறுகையில், ``எந்தச் சூழலிலும் இந்தத் துறையில் தனியார் மயத்துக்கு அனுமதிக்க மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒரு பேட்டியில், ``ரயில்கள் தனியார் மயமாக்கப்படாது. வருங்காலத்திலும் நிகழாது'' என்று தெரிவித்திருந்தார். இந்தியாவில் ராஜ்தானி தயாரிக்க ரூ.50 கோடி வரை செலவாகும். 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத்தின் விலை ரூ.100 கோடி ஆகும்.