Published:Updated:

`வந்தா பார்ப்போம்!' - தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

 ''அ.தி.மு.க-வில் இணைவதாக தங்க.தமிழ்ச்செல்வன் இன்னும் அறிவிக்கவில்லை. அவர் அப்படி அறிவித்தால், அதுகுறித்து தலைமைதான் முடிவுசெய்யும். தங்க.தமிழ்ச்செல்வன் வந்தா பார்ப்போம்''

`வந்தா பார்ப்போம்!' - தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார்
`வந்தா பார்ப்போம்!' - தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

``சசிகலா, தினகரனைத் தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்படுவார்கள்'' - அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைவதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

`வந்தா பார்ப்போம்!' - தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனைக் கடுமையாக விமர்சித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலாகிவருகிறது. இதையடுத்து, தங்க தமிழ்ச்செல்வன் மீது கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தினார் டி.டி.வி. ``தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார். இனிமேல் அவரிடம் விளக்கம் கேட்கவேண்டிய அவசியம் எதுவுமில்லை.

`வந்தா பார்ப்போம்!' - தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார்


அவர் மனதில் எதை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறார் என அனைவருக்கும் தெரியும். அவர் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். அது யார் என விரைவில் நீங்கள் அனைவரும் பார்க்கப் போகிறீர்கள். விரைவில் அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார்” என்று செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்தார், டி.டி.வி.தினகரன். இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி தருவதாக அ.தி.மு.க ஆசைகாட்டியதாகவும், அதை டி.டி.வி தடுத்து நிறுத்திவிட்டார் என்பதால்தான் தங்க தமிழ்ச்செல்வன் இப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆடியோ விவகாரம் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நான் தவறு செய்திருந்தேன் என்றால், கட்சி என்னை நீக்கட்டும். எதையும் சந்திக்க நான் தயார்” என்றார்.

`வந்தா பார்ப்போம்!' - தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார்


இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தேர்தலுக்கு முன்பே இவரை தி.மு.க-வுக்கு அழைத்துள்ளார். ஆனால், அப்போது தங்க தமிழ்ச்செல்வன் செல்லவில்லை. தற்போது மீண்டும் தி.மு.க-வுக்குச் செல்வாரா என்பது சந்தேகமே. அதேசமயம், அவர் அ.தி.மு.க-வுக்குச் செல்லவே வாய்ப்பிருப்பதாகத் தெரியவருகிறது. இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ``சசிகலா, தினகரனைத் தவிர, யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்படுவார்கள்'' எனக்  கூறியிருந்தார். தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைகிறாரா என்று அமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டு கேட்டோம்.  ``அ.தி.மு.க-வில் இணைவதாக தங்க தமிழ்ச்செல்வன் இன்னும் அறிவிக்கவில்லை. அவர் அப்படி அறிவித்தால், அதுகுறித்து தலைமைதான் முடிவுசெய்யும். தங்க தமிழ்ச்செல்வன் வந்தா பார்ப்போம்'' என்றார்.

Vikatan