Published:Updated:

`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?!' - மாநிலங்களவையில் வெடித்த மோடி

`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?!' - மாநிலங்களவையில் வெடித்த மோடி
`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?!' - மாநிலங்களவையில் வெடித்த மோடி

'ஒரு தொகுதியில் காங்கிரஸ் தோற்றுவிட்டது என்பதற்காக, அங்கு இந்தியாவே தோற்றுவிட்டது என்று கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல' என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?!' - மாநிலங்களவையில் வெடித்த மோடி

Photo: RSTV

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகான முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு, மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சி முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, அவர் பதிலளித்தார். 

``நீண்ட நாள்களுக்குப் பிறகு மெஜாரிட்டியுடன் ஆட்சிபுரிந்த அரசு, மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. நிலைத்தன்மை வேண்டும் என்ற மக்களின் முடிவை இதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற கட்சிகள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. வயநாட்டில் இந்தியா தோற்றுவிட்டதா? ரேபரேலியில், திருவனந்தபுரத்தில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதா? அப்படியென்றால் அமேதி தொகுதியில்? இது என்னவகையான வாதம் என்று புரியவில்லை. ஒரு தொகுதியில் காங்கிரஸ் தோற்றுவிட்டால், அங்கு இந்தியாவே தோற்றுவிட்டது என்று பொருளா? அகந்தைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. நாட்டின் 17 மாநிலங்களில்  ஓர் இடத்தில்கூட காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவில்லை. 

`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?!' - மாநிலங்களவையில் வெடித்த மோடி

பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் வென்றுவிட்டன. ஆனால், நாடும் ஜனநாயகமும் தோற்றுவிட்டன என்று தலைவர்கள் சிலர் பேசுவதைக் கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதுபோன்ற கருத்துகள் துரதிருஷ்டமானவை. வாக்காளர்களின் முடிவை நாம் ஏன் கேள்விக்குள்ளாக்க வேண்டும்? 2,000 ரூபாய் திட்டத்துக்காக விவசாயிகள் தங்களை விற்றுவிட்டார்கள் என்று கூறுவது அவர்களை சிறுமைப்படுத்துவதுபோல் இருக்கிறது. இதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஏன் ஊடகங்கள் குறித்துகூட இவர்கள் தவறாகப் பேசுகிறார்கள். ஊடகங்களால்தான் பா.ஜ.க தேர்தலில் வென்றது என்று சொல்கிறார்கள். அதுபோன்ற கருத்தை முன்வைப்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? ஊடகங்கள் விற்பனைக்கு என்றா? அதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?

அதேபோல், சிலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்குறித்து கேள்வியெழுப்புகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ஒரு காலத்தில் எங்களுக்கு 2 எம்.பி-க்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்தனர். எங்களைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்த காலம் அது. அதற்காக,  நாங்கள் சில்லறைக் காரணங்களையும் வாக்குப்பதிவு மையங்களையும் குறைகூறிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், நாங்கள் கடினமாக உழைத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றோம். 

`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?!' - மாநிலங்களவையில் வெடித்த மோடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்மூலம் இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்று மாநிலங்களவையில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் பல, அதன்மூலம் பல்வேறு மாநிலங்களை ஆளும் வாய்ப்பையும் பெற்றன. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்குறித்து இன்று கேள்வியெழுப்பவேண்டிய அவசியமென்ன? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகள் மட்டுமே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரச்னைகுறித்து தெரிந்துகொள்வதற்காக, தேர்தல் ஆணையத்தை நாடும் அவர்களின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்குறித்து கேள்வியெழுப்பி வரும் மற்ற கட்சிகள், ஏன் தேர்தல் ஆணையத்திடம் சென்று கேள்விகளை முன்வைக்க முயலவில்லை. இதற்கு அவர்கள் நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும். 

`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?!' - மாநிலங்களவையில் வெடித்த மோடி

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எனது நண்பர்களுக்கு எங்கள் வெற்றியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதேபோல், தோல்வியையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜனநாயகத்துக்கு இது ஆரோக்கியமானதல்ல.  `ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து விவாதம் எழும்போதும் இதேபோன்றதொரு மனநிலை இருப்பதைப் பார்க்கிறேன். அதை சிலர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், தங்கள் கருத்துகளை முன்வைத்து, அதுகுறித்து விவாதிக்க அவர்கள் முன்வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது'' என்றார்.
 

Vikatan