Published:Updated:

`லஞ்சமா வாங்குகிறாய்...?’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ

பி.ஜே.பிகாரர்களுக்கு வாய் மட்டுமல்ல, கையும் நீளம்தான். இதை நிரூபிக்கும் வகையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ஆகாஷ் விஜய்வர்கியா. இவர், பி.ஜே.பி மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன். நல்ல துடிப்புள்ள இளம் அரசியல்வாதியாக, இந்தூர் ஏரியாவில் அறியப்படுபவர்.

`லஞ்சமா வாங்குகிறாய்...?’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ

சம்பவத்துக்கு வருவோம்... போபால் பகுதியில் இருக்கும் ஒரு கட்டடத்தை இடிக்கும் நடவடிக்கைக்காகச் சென்றுள்ளார், மாநகராட்சி அதிகாரி ஒருவர். அவரை அங்கே வரவழைத்தவர், அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் எனத் தெரிகிறது. `கட்டடத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றிக் கொடுக்கவேண்டும்’ என்பது அந்த அதிகாரிக்குக் கொடுக்கப்பட்ட `அசைன்மென்ட்’. இதற்கு லஞ்சமாக சில ஆயிரங்களை அதிகாரிக்குக் கொடுத்திருக்கிறார், கட்டட உரிமையாளர். இந்த விஷயம், ஆகாஷ் விஜய்வர்கியாவின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. உடனே வண்டியைக் கிளப்பியவர், ஒரு மணிநேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அப்புறம் என்ன நடந்ததென்று தெரியவில்லை. திடீரென்று அருகிலிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அதிகாரியை சாத்து சாத்தென்று சாத்தியிருக்கிறார், ஆகாஷ். அதுவும், பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஊடகத்தினரும் அங்கே இருந்துள்ளார்கள். அவர்கள் படம்பிடித்த அந்த அடிதடிக் காட்சிகள், இப்போது சமூகவலைதளத்தில் செம வைரல்.

`லஞ்சமா வாங்குகிறாய்...?’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ

சம்பவம் பற்றி அலட்டிக்கொள்ளாமல் பேசியிருக்கிறார், ஆகாஷ். ‘அந்த அதிகாரி கட்டடத்தின் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். அதை என்னால் பொறுக்கமுடியவில்லை. அதனால்தான், கிரிக்கெட் மட்டையை எடுத்து அடி வெளுத்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதோடு நிற்கவில்லை அவர். ‘தேவைப்பட்டால் இனிமேலும் அதிகாரிகளை இப்படி அடிப்பேன்’ என்று அறிவித்திருக்கிறார். மத்தியப்பிரதேச பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் ஹித்தேஷ் பாஜ்பாய், ஆகாஷை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். ‘ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர் லஞ்சம் வாங்கிய அதிகாரியைத்தான் அடித்தார்’ என்பது, அவரின் கருத்து.

ஆனால், ஆகாஷூக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. ‘ஆயிரம் இருக்கட்டும். ஒரு அதிகாரியை நடுரோட்டில் வைத்து இப்படி அடிப்பதற்கு யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது?’ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள், மனித உரிமை ஆர்வலர்கள். இதுதொடர்பாக ஆகாஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... ஆகாஷ் செய்தது சரியா, தவறா?. உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவிடுங்கள்.