Published:Updated:

மாநிலங்களவை எம்.பி... தி.மு.க-வில் போட்டியிடப்போவது யார்?

மாநிலங்களவை எம்.பி... தி.மு.க-வில் போட்டியிடப்போவது யார்?
மாநிலங்களவை எம்.பி... தி.மு.க-வில் போட்டியிடப்போவது யார்?

ஜூலை 18-ம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் இன்னும் சிலமணி நேரத்தில் அறிவிக்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், தி.மு.க தொழிற்சங்கத் தலைவர் சண்முகத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மாநிலங்களவை எம்.பி... தி.மு.க-வில் போட்டியிடப்போவது யார்?

காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு, வரும் ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், எம்.பி பதவியைக் குறிவைத்து தி.மு.க, அ.தி.மு.க-வில் போட்டி உச்சத்தை எட்டியுள்ளது.
ஆறு மாநிலங்களவை இடங்களில், எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளுக்கும் தலா மூன்று எம்.பி இடங்கள் கிடைக்க உள்ளன. தி.மு.க-வில் ம.தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வில் பா.ம.க-வுக்கும் ஏற்கெனவே தலா ஒரு எம்.பி சீட் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள நான்கு இடங்களுக்குப் போட்டி கடுமையாகியுள்ளது. இதன்படி, ம.தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவைக்குத் தேர்வுசெய்யப்படுவார் எனத் தெரிகிறது. மீதியுள்ள இரண்டு இடங்களுக்கு தி.மு.க-வில் பலத்த போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க தொழிற்சங்கத் தலைவர் சண்முகத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மற்றோர் இடத்துக்குத் தி.மு.க தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் நடத்திவரும் மூத்த வழக்கறிஞர் வில்சனும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவனும் போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை, தி.மு.க தலைமைக் கழகம் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கும் என்று தெரிகிறது. 
 

Vikatan