Published:Updated:

மான் கி பாத் - சீசன் 2... மீண்டும் பேசுகிறார் மோடி!

மான் கி பாத் - சீசன் 2... மீண்டும் பேசுகிறார் மோடி!
மான் கி பாத் - சீசன் 2... மீண்டும் பேசுகிறார் மோடி!

ஜூன் 30-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, "மனதின் குரல்" [ Maan ki Baat - மான்கி பாத் ] சொற்பொழிவை வானொலியில் இரண்டாவது முறையாகத் தொடங்க உள்ளார். 

மான் கி பாத் - சீசன் 2... மீண்டும் பேசுகிறார் மோடி!

இரண்டாவது முறையாக, பிரதமர் பதவியேற்ற பின் மக்களுக்கு வானொலி மூலம் நிகழ்த்தும் முதல் உரை என்பதால், பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உட்பட, பிரச்சார் பாரதி, அகில இந்திய வானொலி, இதுபற்றிய அறிவிப்பைத் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளன. பொதுமக்கள் mygov.in இணையதளத்தின் மூலம் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பதிவிடலாம் அல்லது 1800117800 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியின் மூலமும் பகிரலாம்.

இந்த நிகழ்ச்சி, நரேந்திர மோடி முதன்முறை பாரதப் பிரதமராகப் பதவியேற்றபின், 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமானது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது தொடர்ந்தது. தமிழ் உட்பட 18 மொழிகளில் பிரதமர் உரையின் மொழியாக்கத்தை நேயர்கள் செவிமடுக்க முடியும்.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. 

மான் கி பாத் - சீசன் 2... மீண்டும் பேசுகிறார் மோடி!

பிரதமரின் கடந்த பிப்ரவரி மாதம் உரையில், தேர்தல் முடிவுகள் வெளியானபின், "மக்களின் ஏகோபித்த ஆசியுடன் இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களைச் சந்திப்பேன்" என உறுதிபடக் கூறினார். பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தபோது, காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், பிரதமர் தனது உரையின்மூலம் தன் கட்சிக்கு ஓட்டுகளைப் பெறுவது எளிதாகும் எனத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து, மான்கி பாத் நிகழ்ச்சியைத் தடைசெய்ய முறையிட்டன. அரசியல் சார்பற்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பிரதமர் பேச முடியும் எனத் தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டது. இதனால், தொடர்ந்து 53 மாதங்கள் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை நிகழ்த்தி சாதனை படைத்தார், நரேந்திர மோடி. 

தற்போது, மருத்துவர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, பெண்களின் பாதுகாப்பு, குடிநீர் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு எனப் பல பிரச்னைகள் தலைவிரித்தாடும் நிலையில், பிரதமர் இவற்றிற்கு எப்படித் தீர்வு காணப் போகிறார் என்பதை இந்த மான்கி பாத் நிகழ்ச்சியில் அறிய முடியும்.

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்  

Vikatan