Published:Updated:

`சோனியா, ராகுல் ஏற்படுத்திய கூட்டணியை உடைக்கிறார்!’ - கராத்தே தியாகராஜனுக்கு எதிராகப் பொங்கும் நிர்வாகிகள்

விகடன் விமர்சனக்குழு

கட்சியின் விதிகளுக்கு எதிராகவும் ஒழுங்கீனமாகவும் செயல்பட்டதாக கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடை நீக்கம் குறித்து அவர், ``நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததிலிருந்து, நான்குமுறை சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறேன். ஒருமுறை மாநிலத் தலைமை என்னை நீக்கினால், மறுமுறை மத்தியத் தலைமை என்னை நீக்கி உத்தரவிடும். ஆனாலும், காங்கிரஸ் கட்சியின்மீது எனக்குள்ள பற்று என்றும் மாறாது. அதோடு, நான் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து மாநிலத் தலைமைக்கும் தெரியாது என்றே நினைக்கிறேன். அவர்களும் என்னைப் போலவே, தொலைக்காட்சியைப் பார்த்தே தெரிந்துகொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். எதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டேன் என்பதை அறிந்து, விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்'' என்றார்.

`சோனியா, ராகுல் ஏற்படுத்திய கூட்டணியை உடைக்கிறார்!’ - கராத்தே தியாகராஜனுக்கு எதிராகப் பொங்கும் நிர்வாகிகள்

காங்கிரஸிலிருந்து கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடைநீக்கத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து கட்சிக்காரர்களிடம் விசாரித்தோம். ``உள்ளாட்சித் தேர்தல்குறித்து விவாதிக்க, 21-ம் தேதி அன்று தமிழகத்தின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு விடுத்தது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்தக் கூட்டத்தில், தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் முதலில் பேசினார். அவர் பேசும்போது, தேவையற்ற வார்த்தைகளால் தி.மு.க தலைமையை விமர்சித்தும் கூட்டணி குறித்தும் அவதூறாகப் பேசினார்.

`சோனியா, ராகுல் ஏற்படுத்திய கூட்டணியை உடைக்கிறார்!’ - கராத்தே தியாகராஜனுக்கு எதிராகப் பொங்கும் நிர்வாகிகள்

மேலும், கூட்டணி தர்மத்துக்கு விரோதமாகவும் சோனியா காந்தி, ராகுல் இணக்கம் காட்டிவரும் தி.மு.க கூட்டணியை உடைக்கின்ற நோக்கிலும், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தேர்தல் உத்திகளையும் பேசினார். கூட்டத்தை தலைமைதாங்கி நடத்திவந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு, அவருடைய ஒழுங்கீனமான பேச்சு தர்ம சங்கடத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் பேசி முடித்து வெளியே வந்து, பத்திரிகையாளர்களிடம் தனது கருத்துகளைப் பதிவுசெய்தார். அந்த சர்ச்சைக் கருத்துகள் மறுநாள் பத்திரிகைகளில் வெளிவந்து, காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியதோடு, தி.மு.க தலைமை மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய மனவருத்ததை உருவாக்கியது. இதுபோன்ற அவரது தொடர் நடவடிக்கைகள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டதாகவும், கட்சிக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவுமே காங்கிரஸ் தலைமை கருதுகிறது.

`சோனியா, ராகுல் ஏற்படுத்திய கூட்டணியை உடைக்கிறார்!’ - கராத்தே தியாகராஜனுக்கு எதிராகப் பொங்கும் நிர்வாகிகள்

அது மட்டுமின்றி, கட்சியின் உரிய அனுமதியில்லாமல் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுவருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்களை அவர் தரம் தாழ்ந்து விமர்சித்துவருகிறார். பா.ஜ.க-வுக்கு நெருக்கமான நடிகர் ரஜினிகாந்த்தை ஆதரித்துப் பேசிவருகிறார். ரஜினி அரசியல் கட்சி தொடங்கும்போது, கராத்தே தியாகராஜன் அதில் இணைவார் என்ற கருத்து, காங்கிரஸார் மத்தியில் பரவலாக இருந்துவருகிறது. அவர், சத்தியமூர்த்தி பவனுக்கு வரும்போதெல்லாம் சுய கட்டுபாடு இல்லாமல், தான்தோன்றித்தனமான சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களை மதிக்காமலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் இதர உறுப்பினர்களையும், அலுவலக உறுப்பினர்களையும் மிரட்டும்வகையில் தொடர்ந்து நடந்துகொள்கிறார்.

`சோனியா, ராகுல் ஏற்படுத்திய கூட்டணியை உடைக்கிறார்!’ - கராத்தே தியாகராஜனுக்கு எதிராகப் பொங்கும் நிர்வாகிகள்

சில சமூக விரோதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் செயல்படுகிறார். அது, விசுவாசமான காங்கிரஸ் தொண்டர்களுக்கு அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராகவும் ஒழுங்கீனமாகவும் தொடர்ந்து செயல்படுபவர். கட்சி தலைமைக்கும் மூத்த தலைவர்களுக்கும் அடங்காதவர். இது காங்கிரஸ் தரலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்ததால், அவரை அகில இந்திய தலைமை, இடைநீக்கம் செய்துள்ளது. கட்சிக் கட்டுபாடு இல்லாமல் இருப்பவர்கள்மீது பாரபட்சமின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர்.

அடுத்த கட்டுரைக்கு