Published:Updated:

‘என்ன சொல்ல வருகிறீர்கள்?’ - தமிழிசையின் கிண்டலுக்கு ஜோதிமணி பதில் ட்வீட்

``அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அனைவருக்கும் பொதுவானவர்கள். நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். நீங்கள் துணை நில்லுங்கள். அரசியல் கட்சிகளைவிட மக்களும், தேசமும்தான் முக்கியம்'' என்று பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலளித்திருக்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

‘என்ன சொல்ல வருகிறீர்கள்?’ - தமிழிசையின் கிண்டலுக்கு ஜோதிமணி பதில் ட்வீட்

தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, தங்கள் தொகுதிகளுக்குத் தேவையான திட்டங்கள் குறித்து மனு அளித்தனர். இதுகுறித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ``கார்த்தி சிதம்பரம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை மனு.. கலாநிதி வீராசாமி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மனு.. டி.ஆர்.பாலு, ரயில்வே மேலாளரிடம் மனு... தயாநிதி மாறன் தெற்கு ரயில்வே ஆபீஸில்  மனு..  அமேதி தொகுதியில் அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரே மாதத்தில் பலகோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களைத் தொடங்கி அசத்தல்... பி.ஜே.பி-யைத் தோற்கடித்த தமிழகம்... இழப்பு???'' என்று குறிப்பிட்டிருந்தார்.

‘என்ன சொல்ல வருகிறீர்கள்?’ - தமிழிசையின் கிண்டலுக்கு ஜோதிமணி பதில் ட்வீட்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி தோல்வியைச் சந்தித்தாலும் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது பி.ஜே.பி. இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி நலன்களுக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்ததை, ட்விட்டரில் கேலி செய்யும் விதமாகக் குறிப்பிட்டுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.

‘என்ன சொல்ல வருகிறீர்கள்?’ - தமிழிசையின் கிண்டலுக்கு ஜோதிமணி பதில் ட்வீட்

இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ``என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழிசை, தமிழக மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிமையும், திட்டங்களும் கிடைக்காது என்றா... அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அனைவருக்கும் பொதுவானவர்கள். நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். எங்களுக்கு நீங்கள் துணை நில்லுங்கள். கட்சிகளைவிட மக்களும், தேசமும் முக்கியம்'' என்று ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார்.