Published:Updated:

சாலை மறியல் டு சட்டப்போராட்டம்.. மராத்தாக்கள் இடஒதுக்கீட்டை உறுதி செய்த நீதிமன்றம்!

சாலை மறியல் டு சட்டப்போராட்டம்.. மராத்தாக்கள் இடஒதுக்கீட்டை உறுதி செய்த நீதிமன்றம்!
சாலை மறியல் டு சட்டப்போராட்டம்.. மராத்தாக்கள் இடஒதுக்கீட்டை உறுதி செய்த நீதிமன்றம்!

ராத்தா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு செல்லும் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்டச் 30 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் மராத்தா சமூகத்தைச் சார்ந்தவர். மத்திய அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதற்கு அமைக்கப்பட்ட மண்டல் கமிஷனில் மராத்தாக்கள் முன்னேறிய வகுப்பாகக் கருதப்பட்டு அவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 

சாலை மறியல் டு சட்டப்போராட்டம்.. மராத்தாக்கள் இடஒதுக்கீட்டை உறுதி செய்த நீதிமன்றம்!

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மராத்தா சமூகத்தைச் சார்ந்த மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மராத்தாக்களின் இடஒதுக்கீடு வேண்டிய போராட்டம் உச்சம் பெற்றது. சாலை மறியல் முழுக் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அம்மாநில அரசு மராத்தா மக்களுக்கு 16% இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா தாக்கல் செய்த உடனே, இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

சாலை மறியல் டு சட்டப்போராட்டம்.. மராத்தாக்கள் இடஒதுக்கீட்டை உறுதி செய்த நீதிமன்றம்!

இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இடஒதுக்கீட்டில் வைக்கப்பட்டுள்ள 50 சதவிகித உச்சவரம்பைத் தேவைப்படுகிற சூழலில் மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் மராத்தாக்களுக்கான இடஒதுக்கீடு செல்லுபடியாகும். அதே வேளையில் மராத்தாக்களுக்கு 16 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது நியாயமில்லாதது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி கல்வியில் 13 சதவிகிதமும் வேலை வாய்ப்பில் 12 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Vikatan