Published:Updated:

`எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள்

சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் போதுமான எண்ணிக்கை இல்லாத சூழலில், இந்தத் தீர்மானம் தி.மு.க-வுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த 6 மாதத்துக்குள் தீர்மானம் கொண்டு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அல்லது தேர்தல் என்பதாகத்தான் அரசியல் சூழல்கள் அமையும்.

`எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள்
`எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள்

` சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை' எனக் கூறிவிட்டார் ஸ்டாலின். ` கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு எதிரான சமூகங்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்துள்ளன. நம்முடைய இலக்கு கொங்கு கேபினட் மட்டும்தான். தனபாலைப் பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை' என்ற மனநிலையில் ஸ்டாலின் இருப்பதாகச் சொல்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

`எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள்

தமிழக சட்டமன்றம் இன்று கூடியது. சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே, சட்டசபைச் செயலரிடம் கொடுத்திருந்தது தி.மு.க. இதை ஏற்று ஜூலை 1-ம் தேதி தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தார் சபாநாயகர் தனபால். இன்று காலை சபை கூடியதும் மறைந்த எம்.எல்.ஏ-க்கள் சூலூர் கனகராஜ், விக்ரவாண்டி ராதாமணி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்த முடிவு குறித்துப் பேசிய சி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ``ஸ்டாலின் எடுத்த முடிவின் பின்னணியில் ஏதோ பின்விளைவுகள் ஏற்படப்போகிறது'' என்றார். 

`எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள்

`ஆட்சி மாற்றம் ஏற்படாமலேயே ஆட்சி கலையும்' என்றெல்லாம் ஆரூடமாகப் பேசி வந்த தி.மு.க தலைவர், சபாநாயகர் மீதான தீர்மானத்தை ஏன் கொண்டு வரவில்லை?' என்ற கேள்வியைத் தி.மு.க முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டோம்.
``22 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே, அ.தி.மு.க தரப்பிலிருந்து சில எம்.எல்.ஏ-க்களைத் தி.மு.க பக்கம் கொண்டு வரும் வேலைகள் நடந்தன. இதற்கான பணியில் 3 முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். `8 பேர் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இன்னும் 2 பேர்தான் பாக்கி' என்றெல்லாம் உற்சாகமாக அறிவாலயத்துக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர் முக்கியமான மாவட்டச் செயலாளர்கள் சிலர். 10 பேர் வந்துவிட்டாலே இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டுவிடும் என உறுதியாக நம்பியது தி.மு.க தலைமை. அதேநேரம், `ஆட்சி கலைந்தாலும் தேர்தலைச் சந்திப்பதையே ஸ்டாலின் விரும்புகிறார். இந்த ஆட்சிக்கான பதவிக்காலம் முடிவடைய இன்னும் 20 மாதங்களே இருக்கின்றன. அதற்குள் ஆட்சியில் அமர்ந்தால் தி.மு.க தலைமை மீது மக்கள் மத்தியில் வேறு மாதிரியான எண்ணம் தோன்றிவிடும்' என்ற மனநிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க தலைமையின் எண்ண ஓட்டமும் மாறிவிட்டது" என விவரித்தவர்கள், 

`எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள்

``இதுநாள் வரையில் கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்தது. அமைச்சரவையிலும் கொங்கு மண்டலத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை முறியடிக்கும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்தார் ஸ்டாலின். வாக்கு எண்ணிக்கை முடிவிலும் 60 சதவிகித வாக்குகள், கொங்குப் பகுதியிலிருந்து தி.மு.க-வுக்கு வந்து சேர்ந்தன. ஒவ்வொரு தொகுதியிலும் எந்தெந்தச் சமூகத்தினர் அதிகமாக வாக்களித்துள்ளனர் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கிறார். அப்படிப் பார்க்கும்போது, இரட்டை இலைக்கே இதுநாள் வரையில் வாக்களித்து வந்த கொங்கு மண்டல அட்டவணைப் பிரிவு மக்களில் பெரும்பகுதியினர் தி.மு.க-வுக்கு வாக்களித்துள்ளனர். இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய குடும்ப உறுப்பினர் ஒருவர், `அப்பா (கருணாநிதி) இருந்த காலத்திலேயே நமக்கு வாக்களிக்காதவர்கள், தற்போது நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றால் அதற்கு எடப்பாடி பழனிசாமி உட்படக் கொங்கு அமைச்சர்கள் மீதான எதிர்ப்புதான் பிரதான காரணம். அங்குள்ள சிறிய எண்ணிக்கையிலான சமூகங்கள் அனைத்தும் நமக்கு வாக்களித்துள்ளன. 

`எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள்

அப்படியிருக்கும்போது, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக நாம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். தவிர, கொங்கு மண்டலத்தில் இந்தளவுக்கு வாக்கு கிடைத்த பிறகு, தோற்கடிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வருவது நல்லதல்ல. எடப்பாடி பழனிசாமிதான் நம்முடைய இலக்கே தவிர, சபாநாயகர் அல்ல. எடப்பாடியை எதிரியாக முன்வைத்து அரசியல் நடத்தினால்தான் கொங்கு மண்டலத்தில் நாம் வளர முடியும். அடுத்த ஆறு மாத காலத்துக்குள் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கான வேலைகளைத் தொடங்குவோம். 2016 போல இனி எந்தக் காலத்திலும் அமைந்துவிடக் கூடாது' எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன் பின்னரே, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார் ஸ்டாலின்" என்றனர் நிதானமாக. 

`எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள்

தி.மு.க நிலைப்பாடு குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். ``சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்குத் தி.மு.க தரப்பில் போதிய எண்ணிக்கையும் இல்லை, எண்ணமும் இல்லை. சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் போதுமான எண்ணிக்கை இல்லாத சூழலில், இந்தத் தீர்மானம் தி.மு.க-வுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த 6 மாதத்துக்குள் தீர்மானம் கொண்டு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அல்லது தேர்தல் என்பதாகத்தான் அரசியல் சூழல்கள் அமையும் எனக் கருதுகிறேன்" என்றார் இயல்பாக. 

Vikatan