Published:Updated:

``இது என்னை அவமதிக்கும் செயல்!” - சீறிய மன்மோகன் சிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இது என்னை அவமதிக்கும் செயல்!” - சீறிய மன்மோகன் சிங்
``இது என்னை அவமதிக்கும் செயல்!” - சீறிய மன்மோகன் சிங்

``இது என்னை அவமதிக்கும் செயல்!” - சீறிய மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பது என்று மோடி அரசு எடுத்திருக்கும் முடிவால் கடும் கோபம் அடைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சீற்றத்துடன் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

``இது என்னை அவமதிக்கும் செயல்!” - சீறிய மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வாடகை இல்லாமல் குடியிருப்பு, மருத்துவ வசதிகள், இலவச மின்சாரம், இலவச தண்ணீர், விமானப் பயணம், ரயில் பயணம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்குச் சட்ட விதிகள் உள்ளன. முக்கியமாக, இயக்குநர், துணைச் செயலாளர், உதவிச் செயலாளர், உதவியாளர்கள், பியூன்கள் என அலுவலகப் பணியாளர்கள் 14 பேர், வீட்டுப் பணியாளர்கள் ஆறு பேர் வழங்கப்படுவார்கள்.

இந்தச் சலுகைகள் நீடிக்கலாமா என்பது குறித்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு முடிவுசெய்யும். அதன்படி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, மன்மோகன் சிங்குக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த சலுகைகள் குறித்துப் பரிசீலித்த மத்திய பி.ஜே.பி அரசு, மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டுவந்த அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்று முடிவுசெய்துள்ளது. இதனால், ``முன்னாள் பிரதமரை அவமதிக்கும் செயல்” என்று மோடி அரசைக் காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

அரசின் முடிவையடுத்து இனிமேல், இரண்டு பியூன்கள், இரண்டு தனி உதவியாளர்கள், ஒரு கிளார்க் ஆகியோர் மட்டுமே மன்மோகன் சிங் பணியாளர்களாக இருப்பார்கள். இதனால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சீற்றத்துடன் கடிதம் எழுதியுள்ள மன்மோகன் சிங், `முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 12 பணியாளர்கள் வழங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி அளித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோருக்குத் தேவையான அளவுக்குப் பணியாளர்களை வைத்துக்கொள்ள வாஜ்பாய் அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு