Published:Updated:

`மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தியது காங்கிரஸ்தான்!' - நாடாளுமன்றத்தில் பொங்கிய அமித் ஷா

விஷ்ணுராஜ் சௌ
`மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தியது காங்கிரஸ்தான்!' - நாடாளுமன்றத்தில் பொங்கிய அமித் ஷா
`மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தியது காங்கிரஸ்தான்!' - நாடாளுமன்றத்தில் பொங்கிய அமித் ஷா

அடுத்த ஆறு மாதங்களில், ஜம்மு-காஷ்மீருக்கு  சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்தப்படும். அதுவரை ஜூலை  மூன்றாம் தேதியிலிருந்து மேலும்  ஆறு மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சித் தொடரும் என்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

`மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தியது காங்கிரஸ்தான்!' - நாடாளுமன்றத்தில் பொங்கிய அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி, பி.ஜே.பி-யின் ஆதரவுடன் நடைபெற்றுவந்தது . மூன்றாண்டுகள் மெகபூபா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவந்த பி.ஜே.பி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆதரவை விலக்கிக் கொண்டனர். இந்நிலையில், ஆட்சியமைக்க போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், மெகபூபா முப்தி ராஜினாமா கடிதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் வரை ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 

`மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தியது காங்கிரஸ்தான்!' - நாடாளுமன்றத்தில் பொங்கிய அமித் ஷா

கட்சியில் மட்டும் பெரிய பொறுப்புகளை வைத்துள்ள அமித் ஷா, மத்தியில் ஆட்சியிலும் இணைந்து உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், “இந்த மசோதா ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும்” என்று கூறி, ஜம்மு- காஷ்மீர் சம்பந்தமான தன்னுடைய முதல் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். நாட்டின் பிரிவினைக்கு யார் பொறுப்பு என்று அவர் காரசாரமாக பேசத்தொடங்கினார். அப்போது பேசிய அமித் ஷா, ``356 சட்டப்பிரிவை காங்கிரஸ் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தியது. அசாதாரண சூழ்நிலைகளின்போதுதான் நாங்கள் 356 -ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினோம். இதற்கு முன்னதாக, இந்தப் பிரிவு 132 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் 93 முறை பயன்படுத்தியது. அவர்கள்தான் இந்தப் பிரிவை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு கற்பித்தார்கள்” என்று கூறியவுடன் சபையில் அமளி எழுந்தது.  

`மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தியது காங்கிரஸ்தான்!' - நாடாளுமன்றத்தில் பொங்கிய அமித் ஷா

இந்தத் தீர்மானத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த அமித் ஷா, ``மனிஷ் திவாரி பிரிவு குறித்து இன்று கேள்வி எழுப்புகிறார். நான் அவரிடம் ஒன்றை கேட்க ஆசைப்படுகிறேன். இந்தப் பிரிவுக்கு யார் காரணம்? ஜம்மு -காஷ்மீரின் 3ல் ஒருபகுதி நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு யார் காரணம்?” என்று கூறி, நேரு பெயரை அவர் பயன்படுத்தியதால் காங்கிரஸார் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு அமித் ஷா, ``சரி அந்தப் பெயர் குறிப்பிட்டது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினால், இனி நான் நாட்டின் முதல் பிரதமர் என்று குறிப்பிடுகிறேன்” என்றார். 

மேலும் அவர், “ காஷ்மீரில் பயங்கரவாதத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிலவிவந்த சட்ட ஒழுங்குப் பிரச்னை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களின் உரிமையை மக்களிடம் கொடுக்கத்தான் முயல்கிறோம். எனவே, ஆறு மாதங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Vikatan