Published:Updated:

சோனியாவுக்குப் பதிலாக வதேரா!

வந்தாச்சு வாரிசு அரசியல்

சோனியாவுக்குப் பதிலாக வதேரா!

வந்தாச்சு வாரிசு அரசியல்

Published:Updated:
##~##

ராகுல் காந்தியைத் தொடர்ந்து பிரியங்காவும் கட்சிக்குள் காலடி எடுத்து வைப்பார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் ஆவலோடு(?) எதிர்பார்த்துக் காத்திருக்க... திடுமென நுழைகிறார் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா.   

நாடு முழுவதும் உ.பி. தேர்தல் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்தாலும், அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 10 தொகுதிகளில்தான் அனைவரது கவனமும் இருக்கிறது. காரணம், இங்குதான் பிரியங்கா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோனியாவுக்குப் பதிலாக வதேரா!

பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 6-ம் தேதி காலை ராபர்ட் வதேரா, தனியாக ஒரு காங்கிரஸ் படையினருடன் சலோன் தொகுதிக்குக் கிளம்பினார். காங்கிரஸ் பைக் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தவர், யாரும் எதிர்பாராத வண்ணம் தானும் ஒரு பைக்கில் ஏறி பிரசாரத்துக்குக் கிளம்பினார்.

கழுத்தில் மக்கள் அணிவித்த சாமந்திப் பூ மாலைகள், காஸ்ட்லியான கூலிங் கிளாஸ், உதட்டில் பெரும் புன்னகையுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஷிவ்பாலக் பாசிக்கு ஓட்டு கேட்கத் தொடங்கினார். அடுத்த சில மணி நேரங்களில் மீடியாவிடம் வதேரா பேசியதுதான் ஹைலைட்.  

''எனக்கும் அரசியலில் குதிக்கும் ஆர்வம் உள்ளது. மக்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்'' என்றார். உடனே, வழக்கம்போல் கூட்டம் கைதட்டி ஆர்ப் பரித்தது. ஆனால், அடுத்தடுத்து கேட்கப்பட்ட கேள்விகளைக் காதில் போட்டுக்கொள்ளாமலே நகர்ந்தார் வதேரா.

சில கிராமங்கள் தள்ளிப் பிரசாரத்தில் இருந்த பிரியங்காவுக்கு இந்த விஷயம் போனது. நிருபர்

கள் வதேராவின் அரசியல் பிரவேசம் பற்றிக் கேட்டபோது, ''என் கணவரைப் பற்றி எனக்கு

நன்றாகத் தெரியும். அவருக்கு பிசினஸ் செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால், அவர் அரசியலில் சேர மாட்டார்'' என்று உறுதியாகச் சொன்னார். அதே பாணியில், டெல்லி காங்கிரஸ் தலைமையும் ராபர்ட்டின் அரசியல் விருப்பம் குறித்து மௌனம் சாதித்தது.

பிரியங்கா கருத்துச் சொன்ன ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஒரு பிரசாரக் கூட்டத்தில், தான் கூறியதைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார் வதேரா. ஆனாலும், அவர் முதலில் கூறிய கருத்து மட்டுமே மீடியாவில் பெரிதாகப் பேசப்பட்டது. ராபர்ட் பற்றி மக்களிடம் உள்ள செல்வாக்கை அறிவதற்காக, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு நடத்திய அரசியல் நாடகமாக இது இருக்கலாம் என்றே பலரும் கருதுகிறார்கள்.

சோனியாவுக்குப் பதிலாக வதேரா!

ஏனென்றால், முன்பு ஒரு முறை சோனியாவுக்காகப் பிரசாரம் செய்ய பிரியங்காவுடன் ராகுலும் வந்திருந்தார். அவரிடமும் இதேபோல் கேட்கப்பட்டது. சும்மா வந்ததாகவே கூறினார். ஆனால், அடுத்த சில மாதங்களில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் திடீர் என்று களம் இறங்கினார். அதுபோல், பிரியங்காவுடன் எப்போதாவது அமேதிக்கு வரும் ராபர்ட் வதேரா, பெரும்பாலும் தன் குழந்தைகளுடன் கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கி விடுவார். சில நேரங்களில் வெளியில் வந்தாலும், பிரியங்காவுடன் மேடைகளில் ஏறாமல் அமைதியாக நின்றுவிடுவார். இந்தமுறை திட்டமிட்டு அவர் பிரசாரத்துக்கு வந்ததைப் பார்த்தால், அடுத்த தேர்த லில் நிச்சயம் போட்டியிடுவார் என்கிறார்கள். மேலும், தனது உடல்நிலையைக் கருதி சோனியா அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், அவருக்குப் பதில் வதேரா களம் இறங்குவார் என்றும் உறுதியாகச் சொல்கிறார்கள்.

உ.பி-யின் முராதாபாதில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ராபர்ட் வதேரா. டெல்லி கல்லூரியில் படித்தபோது, பிரியங்காவைக் காதலித்தார். இரண்டு குடும்ப சம்மதத்துடன் பிரியங்காவை மணம் முடித்த ராபர்ட் வதேரா, ஆரம்பத்தில் முராதாபாதில் செய்யப்படும் பித்தளைக் கைவினைப் பொருட்களை டெல்லியில் விற்று வந்தார். பிறகு, அதை ஏற்றுமதி செய்யத் தொடங்கியவர் மளமளவென வளர்ந்து, இன்று ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என்று பெரும் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.  மாமியார் சோனியா மற்றும் மச்சான் ராகுலின் கைகளில் காங்கிரஸ் இருந்தும், இதுவரை ஒதுங்கியே இருந்தவர். மேலும், 'மிஸ்டர் கிளீன்’ என்று தன்னைக் காட்டிக்கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர்.  

சோனியா குடும்பத்துடன் ஏற்பட்ட உறவைத் தவறாகப் பயன்படுத்தி, பதவி மற்றும் வேலை வாங்கித் தருவதாக, வதேராவின் தந்தை ராஜேந்தர் பணம் வசூல் செய்ததாக முன்பு விஷயம் கசிந்தது. உடனே, 'தன் பெயரைச் சொல்லி தந்தை மற்றும் சகோதரர்களுக்குப் பணம் கொடுத்தால் தாம் பொறுப்பில்லை’ என்று உள்ளூர் நாளிதழ்களில் ஒன்பது வருடங்களுக்கு முன்பு விளம்பரம் கொடுத்தவர், இப்போது நேரடியாக அரசியலுக்கு வருகிறார்.

ஆக, பூனைக்குட்டி வெளியே வந்தாச்சு!

- ஆர்.ஷஃபி முன்னா

படம்: பவண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism